எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த விஷயம் நடக்கப் போகிறது?

இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி கார் மார்க்கெட்டில் அண்மையில் அறிமுகமான எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. சிறப்பான டிசைன், அதிக இடவசதி, சிறந்த தொழில்நுட்ப வசதிளுடன் சரியான விலையில் வந்திருக்கும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு முன்பதிவும் சிறப்பான எண்ணிக்கையில் அமைந்துள்ளதால், எம்ஜி மோட்டார் நிறுவனம் பெரும் உற்சாகத்தில் இருக்கிறது.

 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த விஷயம் விரைவில்... ?!

இந்த நிலையில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மிக தாராளமான இடவசதியை பெற்றிருந்தாலும், சிறியவர்களை மடியில் வைத்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே, இது 7 சீட்டர் மாடலாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலும் விரைவில் இந்தியா வருவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த விஷயம் விரைவில்... ?!

ஆம், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி வெவ்வேறு பிராண்டுகளில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அவ்வாறு, இந்தோனேஷியாவில் வூலிங் பிராண்டில் அல்மாஸ் என்ற பெயரில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனை செய்யப்படுகிறது.

 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த விஷயம் விரைவில்... ?!

இந்த நிலையில், இந்தோனேஷியாவில் வர்த்தகத்தை துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில், வூலிங் நிறுவனம் அல்மாஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலை அங்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. வாடிக்கையாளர்கள் 7 சீட்டர் மாடல் குறித்து அதிகம் விசாரணை செய்ததால், உடனடியாக 7 சீட்டர் மாடலையும் அங்கு விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது வூலிங் நிறுவனம்.

 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த விஷயம் விரைவில்... ?!

இந்த நிலையில், அதே பாணியில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் இந்தியாவில் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வூலிங் அல்மாஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலின் படங்களை ஆட்டோநெட்மேக்ஸ் தளம் வெளியிட்டு இருக்கிறது.

 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த விஷயம் விரைவில்... ?!

இதனால், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் எவ்வாறு இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இந்தியர்களுக்கு கிட்டியுள்ளது. குறிப்பாக, மூன்றாவது இருககை வரிசை அமைப்பை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த விஷயம் விரைவில்... ?!

மூன்றாவது வரிசையில் தனி ஏசி வென்ட்டுகள் இடம்பெற்றிருப்பது அல்மாஸ் 7 சீட்டர் மாடலின் முக்கிய அம்சமாக இருக்கின்றது. நடுவரிசையில் இருக்கும் ஒரு இருக்கையை பட்டன் மூலமாக எளிதாக மடக்கும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், போதிய இடவசதியை மூன்றாவது வரிசை இருக்கைகள் அளிக்கும் வாய்ப்பையும் காண முடிகிறது.

 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த விஷயம் விரைவில்... ?!

மூன்றாவது வரிசை சேர்க்கப்பட்டு இருப்பதும், அதற்கான ஏசி வென்ட்டுகள் தவிர்த்து வேறு எந்த மாற்றங்களும் இல்லை. தொழில்நுட்ப வசதிகள் 5 சீட்டர் மாடலை ஒத்திருக்கிறது. எனவே, எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலும் இதே போன்றே வர இருப்பதாக தெரிகிறது.

 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த விஷயம் விரைவில்... ?!

வூலிங் அல்மாஸ் 7 சீட்டர் மாடலில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த விஷயம் விரைவில்... ?!

வூலிங் அல்மாஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் பல வேரியண்ட்டுகளில் அங்கு விற்பனைக்கு வர இறுக்கிறது. எனினும், விலை குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. பேஸ் வேரியண்ட் இந்திய மதிப்பில் ரூ.12.66 லட்சத்திலும், நடுத்தர வகை வேரியண்ட் ரூ.13.15 லட்த்திலும், டாப் வேரியண்ட் ரூ.16.12 லட்சத்திலும் அங்கு விற்பனைக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த விஷயம் விரைவில்... ?!

அடுத்த ஆண்டு துவக்கத்தில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் டாடா பஸ்ஸார்டு 7 சீட்டர் எஸ்யூவி மாடல்களுடன் நேரடியாக போட்டி போடும்.

Article Published On: Monday, July 15, 2019, 15:24 [IST]
English summary
We Know that the MG Hector seven seater is scheduled to launch in India in early 2020. However, the SUV is scheduled to launch in Indonesia before it is launched here. The MG Hector is called the Wuling Almaz in Indonesia, is retailed by Wuling Motors, and will launch in the South-East Asian country later this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+