இந்தியர்கள் மத்தியில் தீரா மோகத்தை ஏற்படுத்திய எம்ஜி ஹெக்டார் காரின் உட்புற புகைப்படங்கள் கசிந்தன!
இந்தியர்கள் மத்தியில் தீராத மோகத்தை ஏற்படுத்தி வரும் எம்ஜி ஹெக்டார் காரின், உட்புற டிசைன் மற்றும் அம்சங்கள் குறித்த ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டார் காரின் ஸ்பை படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளது. இந்த கார் வருகின்ற 15ம் தேதி அறிமுகமாக இருக்கின்ற நிலையில், அதன் இன்டீரியர் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி, அதன் ரசிகர்களிடையே ஆவலைத் தூண்டியுள்ளது.

இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் எம்ஜி நிறுவனம், இந்தியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி ஹெக்டார் காரை சந்தையில் அறிமுகம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில், அவ்வப்போது, இந்த காரை சோதனைக்கு உட்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதன் ரசிகர்களிடையே பெருத்த ஆவலை ஏற்படுத்தி வருகின்றது.

முன்னதாக, டீலர்கள் ஷோரூமில் காட்சிப்படுத்தவும், டெஸ்ட் டிரைவ் செய்வதற்காகவும் அனுப்பி வைக்கப்பட்ட ஹெக்டார் கார்குறித்த, வீடியோ வெளியாகி வைரலாகியது.
இந்த எஸ்யூவி ரகத்திலான ஹெக்டார் காருக்கு, இந்தியர்கள் இவ்வளவு எதிர்பார்ப்புகள் நிலவ பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதிலும், குறிப்பாக இந்த காரின் தொழில்நுட்ப வசதியே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்நிலையில்தான், இந்த கார் குறித்த புதிய ஸ்பை புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதுகுறித்த பதிவை கார்டெக்கோ ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.
இந்த ஸ்பை படத்தில் காட்சியாகி இருப்பது, எம்ஜி ஹெக்டாரின் டாப் ஸ்பெக் வேரியண்ட் கார் என கூறப்படுகிறது. இதனை, அந்த காரில் பொருத்தியுள்ள மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஊர்ஜிதப்படுத்துகிறது. மேலும், இதன் இன்டீரியருக்கு கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது.

எம்ஜி நிறுவனம், ஹெக்டார் கார் குறித்த அஃபீசியல் டீசர் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் காரின் சிறப்பம்சங்கள் மற்றும் டிசைன் குறித்த தகவலை வெளியிட்டிருந்தது. அதேபோன்று, தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களிலும் டீசரில் காண்பிக்கப்பட்டிருந்த சிறப்பம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில், பனோரமிக் சன் ரூஃப், 10.4 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் எம்ஐடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இத்துடன், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரில், 360 டிகிரி சர்ரவுண்ட் வியூ கேமரா, ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், க்ரூஸ் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோமெட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் என பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்த காரில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் மூலம் நேரடியான இணைய வசதியை பெற முடியும். இதனை அந்த நிறுவனம் ஐ-ஸ்மார்ட் என பெயர்வைத்துள்ளது. இந்த வசதி மூலம், பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை நேரடியாக இன்டர்நெட் மூலம் பெற முடியும். இதுதவிர டிரைவர் இருக்கையை, எலக்ட்ரிக்கல் முறையில், 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டார் கார், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என இரண்டு விதமான எஞ்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்க இருக்கின்றன. அதில், பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 143 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வழங்கும்.


Click it and Unblock the Notifications








