எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முன்பதிவு மற்றும் அறிமுக விபரம்!

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கான முன்பதிவு மற்றும் அறிமுக விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முன்பதிவு மற்றும் அறிமுக விபரம்!

இங்கிலாந்தை சேரந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவியுடன் இந்திய சந்தையில் களமிறங்க உள்ளது. அசத்தலான டிசைன், ஆர்ப்பரிக்கும் தொழில்நுட்ப வசதிகளுடன் வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்தியர்கள் மத்தியில் அதிக ஆவலைத் தூண்டி இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முன்பதிவு மற்றும் அறிமுக விபரம்!

அண்மையில் இந்த புதிய எஸ்யூவியின் உற்பத்தியும் இந்தியாவில் துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், வரும் 15ந் தேதி முதல் புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முன்பதிவு மற்றும் அறிமுக விபரம்!

அத்துடன் அடுத்த மாதம் முதல் இரண்டு வாரங்களுக்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, ஜூன் 15ந் தேதிக்குள் விற்பனைக்கு அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முன்பதிவு மற்றும் அறிமுக விபரம்!

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், க்ரோம் அலங்கார பாகங்களுடன் மிக அசத்தலாகவும், பிரம்மாண்டமான எஸ்யூவியாகவும் வர இருக்கிறது. உட்புறத்திலும் பல பிரிமீயம் வசதிகள் இடம்பெற்றுள்ளன.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முன்பதிவு மற்றும் அறிமுக விபரம்!

இந்த எஸ்யூவியில் 10.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் இணைய தொடர்பை வழங்கும் சிம் கார்டு பொருத்தப்ப்டடு வருவதால், நேரடி இணைய வசதியை பெறும்.

இதன்மூலமாக, பல செயலிகளை நேரடியாக இயக்கும் வாய்ப்பை அளிக்கும். அத்துடன், செயற்கை நுண்ணறிவு திறனுடன் கூடிய வாய்ஸ் கமாண்ட் வசதியும் அளிக்கப்பட இருப்பதுடன், அவசர காலத்திற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளுடன் வருகிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முன்பதிவு மற்றும் அறிமுக விபரம்!

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதே எஞ்சின்தான் ஜீப் காம்பஸ் மற்றும் டாடா ஹாரியர் ஆகிய போட்டி மாடல்களிலும் உள்ளது. இந்த எஞ்சின் ட்யூனிங்கில் மாறுபடும். அதேபோன்று, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முன்பதிவு மற்றும் அறிமுக விபரம்!

இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும். பெட்ரோல் மாடலில் மைல்டு ஹைப்ரிட் மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண பெட்ரோல் மாடலைவிட இது 12 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முன்பதிவு மற்றும் அறிமுக விபரம்!

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியானது குஜராத்தில் ஹலோல் பகுதியில் அமைந்துள்ள செயிக் குழுமத்தின் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. உள்நாட்டு உதிரிபாகங்கள் மற்றும் இங்கேயே அசெம்பிள் செய்யப்பட இருப்பதால் விலை சவாலாக இருக்கலாம்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முன்பதிவு மற்றும் அறிமுக விபரம்!

ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சத்திற்குள் விலை நிர்ணயிக்கப்படும் என்று எம்ஜி மோட்டார்ஸ் சூசகமாக தெரிவித்துள்ளது. ஜீப் காம்பஸ், டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட மமாடல்களுடன் போட்டி போடும். இதன் டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இந்தியர்களை வசியம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், விற்பனைக்கு பிந்தைய சேவையை சிறப்பாக செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

Most Read Articles
English summary
MG Hector SUV's India launch and Bookings Details.
Story first published: Thursday, May 2, 2019, 9:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X