மரண மாஸ் காட்டும் இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார்... சும்மா தெறிக்க விடுது... இதெல்லாம் வேற லெவல்!

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரான எம்ஜி ஹெக்டர் மரண மாஸ் காட்டுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மரண மாஸ் காட்டும் இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார்... சும்மா தெறிக்க விடுது... இதெல்லாம் வேற லெவல்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று எம்ஜி ஹெக்டர் (MG Hector). கடந்த ஜூன் 27ம் தேதி எம்ஜி ஹெக்டர் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்தை சேர்ந்த புகழ்பெற்ற எம்ஜி நிறுவனம் இந்தியாவில் களமிறக்கியுள்ள முதல் கார் ஹெக்டர்தான்.

மரண மாஸ் காட்டும் இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார்... சும்மா தெறிக்க விடுது... இதெல்லாம் வேற லெவல்!

இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மஹிந்திரா எக்ஸ்யூவி500, டாடா ஹாரியர் மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாகதான் எம்ஜி ஹெக்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதலே எம்ஜி ஹெக்டர் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர்.

மரண மாஸ் காட்டும் இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார்... சும்மா தெறிக்க விடுது... இதெல்லாம் வேற லெவல்!

மிகப்பெரிய வரவேற்பு இருந்ததால், எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காருக்கான முன்பதிவையே தற்காலிகமாக நிறுத்தி விட்டது என்றால் பார்த்து கொள்ளுங்கள். குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் செயல்பட்டு வரும் ஆலையில்தான் எம்ஜி நிறுவனம் ஹெக்டர் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. ஆனால் தற்போதைய நிலையில் இங்கு ஒரு மாதத்திற்கு 2 ஆயிரம் கார்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும்.

மரண மாஸ் காட்டும் இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார்... சும்மா தெறிக்க விடுது... இதெல்லாம் வேற லெவல்!

எனவே முன்பதிவு தொடர்ந்து நடந்திருந்தால் காத்திருப்பு காலம் ஒரு ஆண்டை கடந்து சென்றிருந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. வெயிட்டிங் பீரியட் நீள்வதை தவிர்க்கவே எம்ஜி நிறுவனம் புக்கிங்கை தற்காலிகமாக நிறுத்தி விட்டது. பெரிய வரவேற்பு காணப்படுவதால், ஆலையின் உற்பத்தி திறனை ஒரு மாதத்திற்கு 3 ஆயிரம் யூனிட்களாக அதிகரிக்க எம்ஜி திட்டமிட்டு வருகிறது.

மரண மாஸ் காட்டும் இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார்... சும்மா தெறிக்க விடுது... இதெல்லாம் வேற லெவல்!

ஒரு மாதத்திற்கு 3 ஆயிரம் யூனிட்கள் உற்பத்தி என்ற இலக்கு வரும் செப்டம்பர் மாதத்திற்குள் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் எம்ஜி ஹெக்டர் காருக்கான புக்கிங் மீண்டும் தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்ற பெருமையுடன் எம்ஜி ஹெக்டர் களம் கண்டுள்ளது.

மரண மாஸ் காட்டும் இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார்... சும்மா தெறிக்க விடுது... இதெல்லாம் வேற லெவல்!

அத்துடன் மிக சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால்தான், ஹெக்டர் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் இமாலய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சூழலில், கடந்த ஜூலை மாதம் விற்பனை செய்யப்பட்ட ஹெக்டர் கார்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மரண மாஸ் காட்டும் இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார்... சும்மா தெறிக்க விடுது... இதெல்லாம் வேற லெவல்!

இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட போட்டியாளர்களை வீழ்த்தி, இந்த செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை தன்வசப்படுத்தியுள்ளது ஹெக்டர். அதுவும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரே மாதத்தில் எம்ஜி ஹெக்டர் இதனை சாத்தியமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மரண மாஸ் காட்டும் இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார்... சும்மா தெறிக்க விடுது... இதெல்லாம் வேற லெவல்!

கடந்த ஜூன் மாதம் வரையில், இந்த செக்மெண்ட்டில் அதிகம் விற்பனை செய்யப்படும் கார் என்ற பெருமை டாடா ஹாரியர் வசம்தான் இருந்து வந்தது. தற்போது அதனை தட்டிப்பறித்துள்ள எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியரை 3வது இடத்திற்கு தள்ளியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் எம்ஜி நிறுவனம் 1,508 ஹெக்டர் கார்களை விற்பனை செய்துள்ளது.

மரண மாஸ் காட்டும் இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார்... சும்மா தெறிக்க விடுது... இதெல்லாம் வேற லெவல்!

இந்த அளவிற்கு வேறு எந்த காரும் விற்பனையாகவில்லை. இந்த செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையான 2வது கார் மஹிந்திரா எக்ஸ்யூவி500. கடந்த ஜூலை மாதத்தில் 1,116 எக்ஸ்யூவி500 கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் 1,129 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

மரண மாஸ் காட்டும் இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார்... சும்மா தெறிக்க விடுது... இதெல்லாம் வேற லெவல்!

அதாவது எம்ஜி ஹெக்டர் காரின் வருகையால், மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஜூன் மாதத்துடன் ஒப்பிட்டால், ஜூலை மாதத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் விற்பனை 1.15 சதவீதம் என்கிற அளவிற்கு மட்டுமே குறைந்துள்ளது. எனவே அதன் விற்பனை நிலையாக உள்ளது.

மரண மாஸ் காட்டும் இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார்... சும்மா தெறிக்க விடுது... இதெல்லாம் வேற லெவல்!

ஆனால் எம்ஜி ஹெக்டரின் வருகையில், டாடா ஹாரியர் மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய கார்கள் பலத்த அடியை வாங்கியுள்ளன. கடந்த ஜூலை மாதத்தில், வெறும் 740 ஹாரியர் கார்களை மட்டுமே டாடா நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்துள்ளது. ஆனால் கடந்த ஜூன் மாதத்தில், 1,216 ஹாரியர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

மரண மாஸ் காட்டும் இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார்... சும்மா தெறிக்க விடுது... இதெல்லாம் வேற லெவல்!

அதாவது டாடா ஹாரியர் விற்பனை 39.14 சதவீதம் என்கிற அளவிற்கு மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. மாதாந்திர விற்பனை அடிப்படையில் பார்த்தால், இந்த செக்மெண்ட்டில் மற்ற கார்களை காட்டிலும் டாடா ஹாரியர்தான் மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. டாடா ஹாரியர் கார் கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மரண மாஸ் காட்டும் இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார்... சும்மா தெறிக்க விடுது... இதெல்லாம் வேற லெவல்!

அப்போதில் இருந்து பார்த்தால், இதுதான் டாடா ஹாரியர் காரின் மிக குறைவான மாதாந்திர விற்பனை எண்ணிக்கையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மறுபக்கம் கடந்த ஜூலை மாதத்தில், ஜீப் நிறுவனம் 509 காம்பஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. அதே சமயம் கடந்த ஜூன் மாதத்தில் 791 காம்பஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 35.65 சதவீத வீழ்ச்சியாகும்.

Most Read Articles
English summary
MG Hector SUV Outsells Mahindra XUV500, Tata Harrier And Jeep Compass In July 2019 Sales. Read in Tamil
Story first published: Wednesday, August 7, 2019, 12:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X