ஹெக்டர் வேரியண்ட்டுகளில் வசதிகளை ஸ்மார்ட்டாக நிர்ணயித்த எம்ஜி மோட்டார்ஸ்!
புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் மற்றும் அதில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதில், வேரியண்ட்டுகளில் வசதிகளை மிக சமர்த்தாக நிர்ணயித்துள்ளது எம்ஜி மோட்டார்ஸ். அதன் விபரங்களை காணலாம்.

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியானது ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதில், ஸ்டைல் மற்றும் சூப்பர் ஆகிய இரு வேரியண்ட்டுகளும் பேஸ் மற்றும் நடுத்தர விலை மாடல்களாக இருக்கும். ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் ஆகியவை விலை உயர்ந்த வேரியண்ட்டுகளாக விற்பனைக்கு வர இருக்கிறது.

அனைத்து வேரியண்ட்டுகளுமே பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. ஹைப்ரிட் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்கள் குறிப்பிட்ட வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

எஞ்சின் தேர்வுகள்
புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வருகிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 143 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த காரின் பெட்ரோல், டீசல் மாடல்களில் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகிறது. பெட்ரோல் மாடலில் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கொடுக்கப்பட உள்ளது. பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 14.16 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் 13.96 கிமீ மைலேஜையும் வழங்கும். டீசல் மாடல் லிட்டருக்கு 17.41 கிமீ மைலேஜை வழங்கும் என அராய் சான்றளித்துள்ளது.

ஸ்டைல் வேரியண்ட்
எம்ஜி ஸ்டைல் பேஸ் வேரியண்ட்டில் 4 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள், ஃபேப்ரிக் இருக்கைகள், டிரைவர் ஆர்ம்ரெஸ்ட், பின் இருக்கையில் கப் ஹோல்டர்களுடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட், கூல்டு க்ளவ் பாக்ஸ், ரியர் ஏசி வென்ட்டுகள், யுஎஸ்பி போர்ட் சார்ஜர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், எல்இடி இண்டிகேட்டர் ஆகியவையும் பேஸ் வேரியண்ட்டிலேயே இடம்பெற்றிருக்கின்றன.

சூப்பர் வேரியண்ட் விபரம்
ஸ்டைல் வேரியண்ட்டில் இருக்கும் வசதிகளுடன் கூடுதலாக 10.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இணைய வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், எல்இடி டெயில் லைட்டுகள், க்ரோம் கைப்பிடிக்ள், ரியர் பார்க்கிங் கேமரா, பின்புறத்தில் எல்இடி பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனைய வசதிகளை இந்த வேரியண்ட்டிலேயே பெற்றுவிட முடியும்.

ஸ்மார்ட் வேரியண்ட் விபரம்
எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் அதிக முன்பதிவுகளை இந்த வேரியண்ட் பெறும் என்று நம்பலாம். இந்த வேரியண்ட்டில் கூடுதலாக சப் ஊஃபர் மற்றும் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், இணைய வசதி, நேவிகேஷன் வசதி, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 7 அங்குல மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஸ்மார்ட் கீ, ஸ்மார்ட்போன் மூலமாக காரின் தொழில்நுட்ப வசதிகளை இயக்கும் ரிமோட் ஆபரேஷன், லெதர் இருக்கைகள், 6 விதமான நிலைகளில் ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, 4 ஏர்பேக்குகள், எலக்ட்ரிக் ஹேண்ட்பிரேக், பவர் அட்ஜெஸ்ட்டபிள் சைடு மிரர்கள் ஆகியவை உள்ளன.

ஷார்ப்
இந்த வேரியண்ட்டில் கூடுதலாக பனோரமிக் சன்ரூஃப் முக்கிய அம்சமாக இருக்கிறது. இதுதவிர, சன்கிளாஸ் ஹோல்டர், குளிர்காலத்தில் வெப்பப்படுத்தும் வசதியுடன் சைடு மிரர்கள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், மூடு லைட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படும்.

வண்ணத் தேர்வுகள்
புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் கேண்டி ஒயிட், அரோரா சில்வர் ஆகிய இரண்டு வண்ணங்களில் அனைத்து வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். ஸ்டாரி பிளாக் மற்றும் பர்கண்டி ரெட் ஆகியவை சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்ட்டுகளில் கிடைக்கும். க்ளேஸ் ரெட் என்ற முத்தாய்ப்பான வண்ணத் தேர்வு ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும்.

மொத்தத்தில் பேஸ் வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை மிக சிறப்பாக வசதிகளை கொடுத்துள்ளது எம்ஜி மோட்டார்ஸ். பேஸ் வேரியண்ட்டுகளில் போதுமான வசதிகள் இருந்தாலும், ஸ்மார்ட் வேரியண்ட் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று தெரிகிறது.
Source: Cartoq


Click it and Unblock the Notifications








