எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் அசரடிக்கும் கனெக்டட் கார் தொழில்நுட்பம்!

நேரடி இணைய வசதியுடன் வரும் இந்தியாவின் முதல் கார் மாடல் என்ற பெருமையை எம்ஜி ஹெக்டர் பெற இருக்கிறது. இந்த நிலையில், இணைய வசதி மூலமாக எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் எக்கச்சக்கமான வசதிகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை காணலாம்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் அசரடிக்கும் கனெக்டட் கார் தொழில்நுட்பம்!

ஏர்டெல் சிம்கார்டு

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் ஏர்டெல் நிறுவனத்தின் M2M வகை சிம் கார்டு மூலமாக நேரடி இணைய வசதி கொடுக்கப்பட இருக்கிறது. இதன்மூலமாக, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை இணைப்பதற்கு வேறு சாதனத்தின் உதவி தேவை இருக்காது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் அசரடிக்கும் கனெக்டட் கார் தொழில்நுட்பம்!

துல்லியமாக இயங்கும்

சிக்னல் குறைவாக உள்ள இடத்திலும் மிகச் சிறப்பான இணைய வசதியை பெறுவதற்கான தொழில்நுட்ப வசதியும் இடம்பெற்றிருக்கிறதாம். இந்த காரில் இருக்கும் ஏர்டெல் சிம் கார்டு 5ஜி தொழில்நுட்பத்திற்கு இணையாக மாற்ற முடியுமாம்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் அசரடிக்கும் கனெக்டட் கார் தொழில்நுட்பம்!

இன்ஃபோடெயின்மென்ட் சாதனம்

இந்த காரில் 10.4 அங்குல செங்குத்து திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த சாதனத்திற்கு நேரடி இணைய வசதி இருப்பதால், பாடல்கள் மற்றும் அப்ளிகேஷன்களை நேரடியாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் அசரடிக்கும் கனெக்டட் கார் தொழில்நுட்பம்!

ஐ-ஸ்மார்ட் செயலி

இந்த காரின் ஐ-ஸ்மார்ட் என்ற மொபைல்போன் செயலி மூலமாக ஏராளமான வசதிகளை இருந்த இடத்தில் இருந்தே கட்டுப்படுத்த முடியும்.இந்தியர்களின் பாஷைகளை நன்கு உணர்ந்து செயல்படும் வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம் இந்த காரில் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த வாய்ஸ் கமாண்ட் சிஸ்டத்தை நூயன்ஸ் நிறுவனம் வடிவமைத்து கொடுத்துள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் அசரடிக்கும் கனெக்டட் கார் தொழில்நுட்பம்!

டாம் டாம் நேவிகேஷன்

மேலும், ஏராளமான செயலிகளும் இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்தில் கொடுக்கப்பட இருக்கிறது. டாம் டாம் நேவிகேஷன் மூலமாக நிகழ்நேர போக்குவரத்து நெரிசல் குறித்த அப்டேட்டுகள் தொடர்ந்து பெறலாம். கானா மியூசிக் ஆப் உள்ளிட்டவை இந்த எஸ்யூவிக்கு பிரத்யேகமாக வழங்கப்பட இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் அசரடிக்கும் கனெக்டட் கார் தொழில்நுட்பம்!

எக்கச்சக்க வசதிகள்

மேலும், ஜன்னல் கண்ணாடிகளை ஏற்றி, இறக்குவது, சன்ரூஃப் எனப்படும் கண்ணாடி கூரையை இயக்குவது, க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் நேவிகேஷன் ஆகிய வசதிளையும் வாய்ஸ் கமாண்ட் வசதி மூலமாக செய்ய முடியும். வாய்ஸ் கமாண்ட் மூலமாக 100 விதமான வசதிகளை கட்டுப்படுத்த முடியும்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் அசரடிக்கும் கனெக்டட் கார் தொழில்நுட்பம்!

ஜியோ ஃபென்சிங் வசதி

இந்த காரின் ஐ-ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலமாக குறிப்பிட்ட பகுதியை தாண்டி கார் செல்ல முடியாத வகையில் ஜியோ ஃபென்சிங் முறையில் கார் நகர்வை கட்டுப்படுத்தி வைக்கலாம். கார் இருக்கும் இடம், டயரில் காற்றழுத்தம் ஆகியவற்றையும் மொபைல் செயலி மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் அசரடிக்கும் கனெக்டட் கார் தொழில்நுட்பம்!

டோர் லாக் வசதி

வெளியில் இருந்தபடியே காரின் கதவுகளை திறந்து மூடுவதற்கும் வசதி உள்ளது. கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்வது, அணைப்பது, ஏசியை ஆன் செய்வது உள்ளிட்ட வசதிகளையும் இந்த ஐ-ஸ்மார்ட் செயலி மூலமாக செய்ய முடியும்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் அசரடிக்கும் கனெக்டட் கார் தொழில்நுட்பம்!

அவசர உதவி

கார் சர்வீஸ் செய்யும் இடைவெளி, அதுகுறித்த நினைவூட்டல்கள், கார் சர்வீஸ் செய்து வந்த விபரம் ஆகியவற்றையும் மொபைல் ஆப் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்த காரில் விபத்து உள்ளிட்ட அவசர சமயங்களில் உறவினர்கள், நண்பர்களுக்கு தானியங்கி முறையில் தகவல் அனுப்பப்பட்டுவிடும். அருகிலுள்ள அவசர உதவி மையங்களுக்கும் தகவல் அனுப்பிவிடும்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் அசரடிக்கும் கனெக்டட் கார் தொழில்நுட்பம்!

ஹாட் ஸ்பாட்

காரின் இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்திற்கு மட்டுமல்லாமல், காரின் பயணிப்பவர்களின் மொபைல்போன், லேப்டாப், டேப்லெட் கம்ப்யூட்டர்களுக்கும் ஹாட் ஸ்பாட் முறையில் இணைய வசதியை பெற முடியும்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் அசரடிக்கும் கனெக்டட் கார் தொழில்நுட்பம்!

கட்டணமில்லா சேவை

இந்த இணைய வசதி மற்றும் இதில் கொடுக்கப்பட இருக்கும் பிரத்யேக செயலிகளுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு கட்டணமில்லாமல் வழங்க இருக்கிறது எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம். இதுவும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்கும்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் அசரடிக்கும் கனெக்டட் கார் தொழில்நுட்பம்!

புதிய அத்யாயம்

மேலும், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இன் பில்ட் செயலிகளை அவ்வப்போது அப்டேட் செய்வதற்குமான வசதியும் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த வசதிகள் மூலமாக இந்திய மார்க்கெட்டில் புதிய அத்யாயத்தை எழுத இருக்கிறது எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 2, 2019, 18:26 [IST]
English summary
MG Motor India will launch the first-of-its-kind connected car features in its SUV Hector.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+