65 டீலர்ஷிப்களில் எம்ஜி ஹெக்டரின் முன்பதிவு: எம்ஜி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு
கார் பிரியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியுள்ள எம்ஜி ஹெக்டர் எஸ்யூவின் முன்பதிவு இந்தியா முழுவதும் 65 டீலர்ஷிப்களில் வரும் ஜூன் மாதத்தில் துவங்க உள்ளதாக எம்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இங்கிலாந்தை சேர்ந்த முன்னணி கார் நிறுவனமான மோரிஸ் காரேஜஸ் இந்தியாவில் தனது விற்பனையை துவங்க முடிவு செய்தது. இதனையடுத்து மக்களை வெகுவாக கவர்ந்த எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரினை இந்தியாவில் விற்பனை செய்ய முடிவு செய்து மே மாதம் 15ம் தேதி டீலர்களுக்கு கார்கள் அனுப்பப்படுகிறது.

இதனையடுத்து வரும் ஜூன் மாதம் முதல் பாதியில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரினை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது. எம்ஜி நிறுவனம் குஜராத் மாநில வதோதரா பகுதியில் உள்ள ஹலோல் என்னும் இடத்தில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியை தயாரித்து வருகிறது.

தற்போது இந்தியா முழுவதும் 50 முக்கிய நகரங்களில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி 63 டீலர்ஷிப்களில் விற்பனைக்கு களமிறங்குகிறது. இதன் முன்பதிவு வரும் ஜூன் மாதம் துவங்குகிறது என இந்தியாகார்நியூஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதவிர 120 டச் பாயிண்ட்களை திறக்கவும் எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணம் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி அதிநவீன வசதிகளுடன் விற்பனைக்கு களம் இறங்குகிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூயில் டூயல் ஹெட்லேம்ப், டயர் பிரஷர் மானிட்டர், 60 டிகிரி கேமரா, ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் புஷ் பட்டன், ஆட்டோமெட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், 6 வழிகளில் ஓட்டுநர் சீட்டினை அட்ஜஸ் செய்யும் வசதி என பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. எம்ஜி ஹெக்டர் இந்தியாவில் விற்பனைக்கு வரும் முதல் இணையதளம் ஒருங்கிணைக்கப்பட்ட எஸ்யூவி. இதன் 10.4 அங்குல டச் இன்போடெயின்மென்ட் அமைப்பு ஐ-ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினால் அமைந்துள்ளது.

மேலும் இதில் வாய்ஸ் கமாண்ட் வசதியும் இணைக்கப்படலாம் என தெரிகிறது. இதன் மூலம் கார் ஓட்டுனர்கள் காரினை தங்களின் குரல் மூலம் டோர் மிரர், சன் ரூப் மற்றும் போன் கால்கள் போன்றவற்றை இயக்க முடியும். எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக வருகிறது. இருப்பினும் இதன் போட்டியாக கருதப்படும் டாடா ஹாரியர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 உள்ளிட்ட கார்களைவிட எம்ஜி ஹெக்டர் மிகப்பெரியதாக இருக்கும்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என இரண்டு வெரியண்ட்களில் விற்பனைக்கு வரவுள்ளது. எம்ஜி ஹெக்டரின் சக்தி வாய்ந்த 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 143 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது, மேலும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரினை தொடர்ந்து எம்ஜி நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவி காரின் 7 சீட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இஸிஎஸ் என்ற எலக்ட்ரிக் எஸ்யுவி காரினையும் தயாரித்து வருகிறது எம்ஜி நிறுவனம். ஜீப் காம்பஸ், டாடா ஹாரியர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கார்களுடன் போட்டியிட எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனையில் களமிறங்குகிறது.


Click it and Unblock the Notifications








