அடுத்த வருட தீபாவளியில் அஜித், விஜய் படங்களுக்கு இணையான அதிரடியைக் காட்டப்போகும் கார் இதுதான்...

பிரிட்டிஷ் நாட்டு நிறுவனமான எம்ஜி, அடுத்த வருட தீபாவளியின்போது அதிநவீன தொழில்நுட்பத்திலான புதிய மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

அடுத்த வருட தீபாவளியில் அஜித், விஜய் படங்களுக்கு இணையான அதிரடியைக் காட்டப்போகும் கார் இதுதான்... சிறப்பு தகவல்...!

எம்ஜி மோட்டார் நிறுவனம், அதன் ஆதிக்கத்தை இந்தியாவில் செலுத்தும் விதமாக, மிக வேகமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், புதிய எஸ்யூவி மாடலான ஹெக்டார் காரை இந்திய சந்தையில் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, எலக்ட்ரிக் மாடலான இ-இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரையும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

அடுத்த வருட தீபாவளியில் அஜித், விஜய் படங்களுக்கு இணையான அதிரடியைக் காட்டப்போகும் கார் இதுதான்... சிறப்பு தகவல்...!

இவ்வாறு தனது ஆதிக்கத்தைச் செலுத்த முனைப்புடன் செயல்பட்டு வரும் எம்ஜி நிறுவனம், கூடுதலாக ஓர் எஸ்யூவி காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், மேக்ஸஸ் டி90 எனப்படும் காரைத் தான் அந்த நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

அடுத்த வருட தீபாவளியில் அஜித், விஜய் படங்களுக்கு இணையான அதிரடியைக் காட்டப்போகும் கார் இதுதான்... சிறப்பு தகவல்...!

அவ்வாறு, மேக்ஸஸ் டி90 எஸ்யூவி மாடலை அந்த நிறுவனம் 2020ம் ஆண்டு தீபாவளிக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலை ஆட்டோகார் இந்தியா ஆங்கில இணையதளம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

அடுத்த வருட தீபாவளியில் அஜித், விஜய் படங்களுக்கு இணையான அதிரடியைக் காட்டப்போகும் கார் இதுதான்... சிறப்பு தகவல்...!

இந்த கார் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட உள்ளது. ஆகையால், அதற்கேற்ப இந்த காரை உருவாக்கும் முயற்சியில் எம்ஜி நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது.

அடுத்த வருட தீபாவளியில் அஜித், விஜய் படங்களுக்கு இணையான அதிரடியைக் காட்டப்போகும் கார் இதுதான்... சிறப்பு தகவல்...!

புதிதாக தயாராகும் இந்த காரை, சற்று டிரக் பிளாட்பாரத்திலும், ஸ்போர்ட்ஸ் ரக வாகன பிளாட்பாரத்திலும் வைத்து உருவாக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப வகையில், மாசான முகப்பு பகுதி கௌல் அமைப்பு, எல்இடி ஹெட்லேம்ப், மிகப்பெரிய ட்யூவல் டோன் அலாய் வீல் உள்ளிட்டவைத் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இதன் அலாய் வீல் 17 இன்ச்சில் இருந்து 21 இன்ச் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

அடுத்த வருட தீபாவளியில் அஜித், விஜய் படங்களுக்கு இணையான அதிரடியைக் காட்டப்போகும் கார் இதுதான்... சிறப்பு தகவல்...!

மேலும், இன்டீரியரில் பயணிகளின் சொகுசான பயண அனுபவத்திற்காக மிகப் பெரிய கேபின் ஏற்படுத்தப்பட உள்ளது. ஆகையால், தற்போது வெளிவர இருக்கும் ஹெக்டார் காரை காட்டிலும் சற்று பெரிய அளவில் காட்சியைக் கொடுக்கும். அவ்வாறு, இதன் நீளம், 5,005 எம்எம்-ஆகவும், அகலம் 1,932 எம்எம்-ஆகவும் இருக்கும்.

அடுத்த வருட தீபாவளியில் அஜித், விஜய் படங்களுக்கு இணையான அதிரடியைக் காட்டப்போகும் கார் இதுதான்... சிறப்பு தகவல்...!

இதன் உயரம், 1,875எம்எம்-ஆகவும், வீல் பேஸ் 2,950 எம்எம்-ஆக இருக்கும் வகையில் தயாரிக்கப்பட உள்ளது. இதுபோன்ற சிறப்பு நடவடிக்கையால், இந்த மேக்ஸஸ் டி90 கார் மிகப் பிரமாண்டமான காராக மாற இருக்கின்றது. மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரைக்காட்டிலும் இது பெரியளவில் கேபின் அமைப்பு மற்றும் உருவத்தைப் பெற இருக்கின்றது.

அடுத்த வருட தீபாவளியில் அஜித், விஜய் படங்களுக்கு இணையான அதிரடியைக் காட்டப்போகும் கார் இதுதான்... சிறப்பு தகவல்...!

இந்த காரின் இன்டீரியர் அமைப்பு குறித்து பார்ப்போமேயானால், சொகுசு கார்களில் இருப்பதைப் போன்று பல்வேறு சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன. இதனால், மேக்ஸஸ் டி90 கார் பார்ப்பதற்கு ரிச்சான கார் உணர்வை நமக்கு வழங்கும். மேக்ஸஸ் டி90 மாடலை அந்த நிறுவனம், ஏற்கனவே சைனாவில் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

அடுத்த வருட தீபாவளியில் அஜித், விஜய் படங்களுக்கு இணையான அதிரடியைக் காட்டப்போகும் கார் இதுதான்... சிறப்பு தகவல்...!

இந்த சீன ஸ்பெக் மாடலில், 12.3 இன்ச்சிலான டச்ஸ்கிரீன் வசதிகொண்ட இன்போடெயின்மெண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், 8.0 இன்ச் கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், கூல்ட்/ஹீடட் இருக்கைகள், மூன்று விதமான க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அடுத்த வருட தீபாவளியில் அஜித், விஜய் படங்களுக்கு இணையான அதிரடியைக் காட்டப்போகும் கார் இதுதான்... சிறப்பு தகவல்...!

மேலும், பாதுகாப்பு வசதிகளாக, ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, இஎஸ்பி மற்றும் ஐசோஃபிக்ஸ் சைல்ட் இருக்கை மவுண்டுகள் இந்த சீன ஸ்பெக் மாடலில் வழங்கப்பட்டுள்ளன. இதே அம்சங்கள்தான் இந்திய ஸ்பெக் டி90 மாடலிலும் இடம்பெற உள்ளன. கூடுதலாக 6 ஏர் பேக்குகள் இதில் இடம்பெற உள்ளது.

அடுத்த வருட தீபாவளியில் அஜித், விஜய் படங்களுக்கு இணையான அதிரடியைக் காட்டப்போகும் கார் இதுதான்... சிறப்பு தகவல்...!

இவற்றுடன், அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் கீப்பிங் அசிஸ்ட், மற்றும் பிரத்யேக வசதியாக ஆட்டோ பார்க்கிங் வசதி உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த வருட தீபாவளியில் அஜித், விஜய் படங்களுக்கு இணையான அதிரடியைக் காட்டப்போகும் கார் இதுதான்... சிறப்பு தகவல்...!

சீன ஸ்பெக் மாடலில் மெக்கனாக்கல் வசதியாக, 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 224 எச்பி பவரையும், 360 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. இத்துடன், டி90 எஸ்யூவி காரில் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருட தீபாவளியில் அஜித், விஜய் படங்களுக்கு இணையான அதிரடியைக் காட்டப்போகும் கார் இதுதான்... சிறப்பு தகவல்...!

இந்த மெக்கானிக்கல் தரத்திலான மேக்ஸஸ் டி90 மாடலே இந்தியாவிலும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டீசல் எஞ்ஜின் ஆப்ஷனிலும் இந்த கார் கிடைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த வருட தீபாவளியில் அஜித், விஜய் படங்களுக்கு இணையான அதிரடியைக் காட்டப்போகும் கார் இதுதான்... சிறப்பு தகவல்...!

இந்த கார் நான்கு வீல் இயக்கம் திறன் கொண்டதாகவும், களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன், ஏழு விதமான (ஆட்டோமேடிக், எக்கனாமி, மோஷன், ஸ்நோ, சேண்டி, மட் மற்றும் ராக்) டிரைவிங் ஆப்ஷன் இதில் கிடைக்க இருக்கின்றது. இத்தகைய சிறப்புகளுடன் களமிறங்கும் இந்த கார் ரூ. 30 லட்சம் முதல் 35 லட்சம் வரையிலான விலையைப் பெற்று அறிமுகமாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, May 31, 2019, 19:15 [IST]
English summary
MG Maxus D90 SUV India Bound. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+