இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

எம்ஜி நிறுவனம் அதன் ஹெக்டர் காருக்காக சிறப்பு சலுகை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

இங்கிலாந்தைச் சார்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம், இந்தியர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஹெக்டர் எஸ்யூவி ரக காரை கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

மிகப்பிரமாண்டமாகவும், அதிக தொழில்நுட்பங்களைக் கொண்டிருந்ததாலும் இமாலய அளவிலான வரவேற்பைப் இந்த கார் பெற்றது.

இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

ஆகையால், விற்பனைக்கு அறிமுகமான சில நாட்களிலேயே, அதிகளவு எண்ணிக்கையிலான புக்கிங்குகளை அந்த கார் பெற்றது. அந்தவகையில், அறிமுகமான வெறும் 22 நாட்களில் 21 ஆயிரம் யூனிட் ஹெக்டர் கார்களுக்கான புக்கிங் செய்யப்பட்டது. அதேசமயம், தற்போது வரை 28 ஆயிரம் யூனிட்டுகள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

ஆனால், இந்நிறுவனத்தின் உற்பத்தி மையமோ, மாதம் ஒன்றிற்கு வெறும் 2,000 யூனிட்டுகளை மட்டுமே தயார் செய்யும் அளவில் இருக்கின்றது. இதன்படி பார்த்தால், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புக்கிங் நடப்பாண்டின் அனைத்து தயாரிப்புகளுமானதாக இருக்கின்றது. ஆகையால், எம்ஜி நிறுவனம் ஹெக்டாருக்கான புக்கிங்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

மேலும், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு இந்த காரை டெலிவரி செய்ய அதிகப்படியான கால அவகாசத்தை அந்நிறுவனம் கோரியுள்ளது. அந்தவகையில், தற்போதைய காத்திருப்பு காலம் 8 முதல் 10 மாதங்களாக உள்ளன. ஆகையால், உற்பத்தியை 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாக உயர்த்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

இது கணிசமாக காத்திருப்பு காலத்தை குறைக்கும். இத்துடன், இரு பணி நேரங்கள் மேற்கொண்டு, கூடுதலாக 500 நபர்களை பணியமர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்துடன், உற்பத்தி பணியை துரிதப்படுத்துவதற்காக சில பாகங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் அது முடிவு செய்துள்ளது.

இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

இத்துடன், காத்திருப்பு அதிகமாக இருப்பதால் அதன் வாடிக்கையாளர்களை சற்று சாந்தப்படுத்தும் விதமாக சில சலுகைகளை வழங்க இருப்பதாக எம்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், ஹெக்டார் காருக்காக காத்திருக்கும் ஒவ்வொரு வாரமும் வாடிக்கையாளர்களுக்கு 1,000 ஆயிரம் புள்ளிகள் வழங்கப்பட உள்ளது. உதாரணமாக, ஹெக்டார் காருக்காக ஒருவர் 10 வாரங்கள் காத்திருப்பாரானால், அவருக்கு 10 ஆயிரம் புள்ளிகள் வழங்கப்படும்.

இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

இந்த புள்ளிகளை வைத்து, நாட்டில் எந்த எம்ஜி நிறுவனத்தின் ஷோரூமில் ஹெக்டர் காருக்கான அக்ஸசெரீஸ்களை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம். அவ்வாறு, 1 வருடம்/ 20ஆயிரம் கிமீட்டர்கள் வாரண்டி வழங்கப்பட உள்ளது. இது தவிர, ஒவ்வொரு 2 வார காத்திப்பு காலத்திற்கும் 1 பெண் குழந்தைக்கு கல்வி கற்பிப்பதாகவும் அது அறிவித்துள்ளது.

இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

எம்ஜி நிறுவனம் அறிவித்துள்ள இச்சலுகை, இந்திய வாகனத்துறை இதுவரை வெளியிடாத அறிவிப்பாக உள்ளது. இது, அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. அதேசமயம், காத்திருப்பது நல்ல பலனை அளிக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு எஞ்ஜின் ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு கிடைக்கின்றது. அதில், பெட்ரோல் எஞ்ஜின் மட்டும் இரு தேர்வில் கிடைக்கின்றது. ஒன்று 1.5 லிட்டர் கொள்ளவிலும் மற்றொன்று 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் ரகத்திலும் கிடைக்கின்றது. இத்துடன், 2.0 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜினும் கிடைக்கின்றது.

இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

இதில், இரு பெட்ரோல் எஞ்ஜின்களும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டிசிடி தேர்வுகளில் கிடைக்கின்றன. அதேபோன்று, டீசல் வேரியண்ட் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனில் கிடைக்கும்.

இத்துடன், ஹெக்டார் கார் நான்கு விதமான ட்ரிம்களில் கிடைக்கின்றது. அவை, ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் ஆகும். இதில், பெட்ரோல் வேரியண்டுகளில் உள்ள ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்டுகளே அதிகளவிலான புக்கிங்குகளைப் பெற்று வருகின்றது.

இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

மேலும், இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர் பேக்குககள், இஎஸ்பி, டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் மற்றும் பிரேக் அசிஸ்ட், 360 டிகிரி வியூவ் கொண்ட கேமரா, டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார் மற்றும் ஐசோபிக்ஸ் சைல்ட் இருக்கை மவுண்டுகள் உள்ளிட்டவை இருக்கின்றன.

இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

இந்த எஸ்யூவி கார், இந்தியாவில் ரூ. 12.8 லட்சம் முதல் 16.88 லட்சம் வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி 500, டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் மற்றும் கியா செல்டோஸ் உள்ளிட்ட கார்களுக்கு கடுமையான போட்டி அளித்து வருகின்றது.

Most Read Articles
English summary
MG Motor Launched New Programme Called Worth Waiting For Hector. Read In Tamil.
Story first published: Thursday, August 22, 2019, 16:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X