கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத குறைவான விலை... இந்தியாவை கலக்கப்போகும் பிரிட்டீஷ் கார் இதுதான்

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம், இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்றவாறு மிக மிக குறைவான விலையில், எலெக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத குறைவான விலை... இந்தியாவை கலக்கப்போகும் பிரிட்டீஷ் கார் இதுதான்

உலகில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் கார் மார்க்கெட்டாக இந்தியா உள்ளது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த கார் நிறுவனங்களும் தற்போது இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதில், தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் (Kia Motors) மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் (MG Motor) ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத குறைவான விலை... இந்தியாவை கலக்கப்போகும் பிரிட்டீஷ் கார் இதுதான்

இந்திய மார்க்கெட்டில் இவ்விரு நிறுவனங்களின் கார் விற்பனையும் நடப்பாண்டில் தொடங்குகிறது. இதில், கியா நிறுவனத்தின் முதல் கார் வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் காரான ஹெக்டர் (Hector) வரும் ஜூன் மாதம் லான்ச் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இது பிரீமியம் எஸ்யூவி ரக கார் ஆகும்.

கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத குறைவான விலை... இந்தியாவை கலக்கப்போகும் பிரிட்டீஷ் கார் இதுதான்
கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத குறைவான விலை... இந்தியாவை கலக்கப்போகும் பிரிட்டீஷ் கார் இதுதான்

இதன்படி இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் நடப்பாண்டின் இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஇஸட்எஸ் (eZS) எனும் பெயர் கொண்ட இந்த எலெக்ட்ரிக் காரும் எஸ்யூவி ரகத்தை சேர்ந்ததுதான். எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் ஒரு முறை சார்ஜ் செய்தால், 430 கிலோ மீட்டர்களுக்கும் மேல் பயணிக்க முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத குறைவான விலை... இந்தியாவை கலக்கப்போகும் பிரிட்டீஷ் கார் இதுதான்

எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், பாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், வெறும் 30 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜ்ஜை நிரப்பி கொள்ள முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ற வகையில் விலை நிர்ணயம் சரியாக இருந்தால், எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத குறைவான விலை... இந்தியாவை கலக்கப்போகும் பிரிட்டீஷ் கார் இதுதான்

ஆனால் இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனை செய்ய சிபியூ (CBU- Completely Built Up) வழியை எம்ஜி நிறுவனம் தேர்ந்து எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது காரை அப்படியே இந்தியாவிற்கு இறக்குமதி செய்வது. இதன் காரணமாக இறக்குமதி வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த வேண்டியதிருக்கும் என்பதால், காரின் விலையும் சற்று அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத குறைவான விலை... இந்தியாவை கலக்கப்போகும் பிரிட்டீஷ் கார் இதுதான்

இந்த சூழலில் இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன் விலை 10 லட்ச ரூபாய்க்குள்தான் இருக்கும் என கூறப்படுவதால், இந்திய வாடிக்கையாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். இதுகுறித்து இந்தியாவிற்கான எம்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சாபா கூறுகையில், ''உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 லட்சத்திற்குள் எலெக்ட்ரிக் கார் என்பதை சாத்தியப்படுத்துவதற்கான பணிகளை எம்ஜி நிறுவனம் உண்மையில் ஏற்கனவே தொடங்கி விட்டது'' என்றார்.

கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத குறைவான விலை... இந்தியாவை கலக்கப்போகும் பிரிட்டீஷ் கார் இதுதான்

இந்த தகவலால் இந்தியா வாடிக்கையாளர்களிடம் தற்போதே எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. ஆனால் இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் இறுதி முடிவு எடுக்கப்பட்டால், எப்போது விற்பனைக்கு அறிமுகமாகும் என்ற கேள்விக்கும் தற்போது பதில் இல்லை. முன்னதாக இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யும் திட்டமும் எம்ஜி நிறுவனத்திடம் உள்ளது.

கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத குறைவான விலை... இந்தியாவை கலக்கப்போகும் பிரிட்டீஷ் கார் இதுதான்

ஆனால் இந்திய மார்க்கெட்டில் இந்த காருக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே இந்த முடிவு எடுக்கப்படவுள்ளது. அவ்வாறு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டால், இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி குறைவான விலையில் கிடைப்பதற்கான சூழல் உருவாகும். இதனிடையே எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் காரான ஹெக்டர் பிரீமியம் எஸ்யூவி இந்திய மார்க்கெட்டில் 15-20 லட்ச ரூபாய் விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 3, 2019, 15:56 [IST]
English summary
MG Motor Plans To Launch Electric Car For Indian Customers At Under Rs 10 Lakhs. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+