க்ரெட்டாவுக்கு போட்டியாக காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் எம்ஜி!

இந்தியாவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்குவதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

க்ரெட்டாவுக்கு போட்டியாக காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் எம்ஜி!

எம்ஜி மோட்டார் நிறுவனம் முதல் கார் மாடலாக இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஹெக்டர் எஸ்யூவிக்கு பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, இரண்டாவது மாடலாக எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது.

க்ரெட்டாவுக்கு போட்டியாக காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் எம்ஜி!

இதைத்தொடர்ந்து, ஹெக்டர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ மூலமாக அறிமுகப்படுத்த எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை களமிறக்க எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

க்ரெட்டாவுக்கு போட்டியாக காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் எம்ஜி!

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் சீனாவை சேர்ந்த செயிக் குழுமத்தின் கீழ் செயல்படுவது தெரிந்த விஷயம்தான். செயிக் குழுமத்தின் பவ்ஜுன் 530 எஸ்யூவிதான் இந்தியாவில் எம்ஜி பிராண்டில் ஹெக்டர் என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு விற்பனையில் உள்ளது.

க்ரெட்டாவுக்கு போட்டியாக காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் எம்ஜி!

இதே பாணியில் பவ்ஜுன் நிறுவனத்தின் ஆர்எஸ்-3 என்ற புதிய எஸ்யூவியை எம்ஜி பிராண்டில் ரீபேட்ஜ் செய்து இந்தியாவில் களமிறக்க செயிக் குழுமம் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பவ்ஜுன் 510 எஸ்யூவிக்கு மாற்றாக ஆர்எஸ்-3 எஸ்யூவி வர இருக்கிறது.

க்ரெட்டாவுக்கு போட்டியாக காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் எம்ஜி!

இந்த புதிய மாடலை அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் இந்தியாவில் கொண்டு வருவதற்கான திட்டமும் செயிக் மற்றும் எம்ஜி நிறுவனங்களிடம் உள்ளது. அதாவது, அடுத்த தீபாவளியின்போது இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன.

க்ரெட்டாவுக்கு போட்டியாக காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் எம்ஜி!

புதிய பவ்ஜுன் ஆர்எஸ்-3 எஸ்யூவியானது 4.3 மீட்டர் நீளத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 1,750 மிமீ அகலமும், 1,625 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இதன் வீல் பேஸ் 2,550 மிமீ ஆக இருக்கிறது. இந்த புதிய மாடலில் 104 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 128 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும்.

க்ரெட்டாவுக்கு போட்டியாக காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் எம்ஜி!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியைவிட விலை குறைவாக நிலைநிறுத்தப்பட இருக்கும் இந்த புதிய எஸ்யூவிக்கு ஹெக்டர் போலவே அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எம்ஜி மோட்டார் கருதுகிறது. மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

க்ரெட்டாவுக்கு போட்டியாக காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் எம்ஜி!

இதுதவிர்த்து, எம்ஜி மேக்சஸ் டி90 என்ற முழுமையான ரக எஸ்யூவி மாடலையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வரும் பிப்ரவரியில் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவின்போது இந்த எஸ்யூவிகள் குறித்த தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Via - ICN

More from DriveSpark

Article Published On: Tuesday, October 29, 2019, 14:39 [IST]
English summary
According to media report, MG Motor is planning to launche new compact SUV in India by next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+