எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனையில் சற்றே சுணக்கம்!

வாடிக்கையாளர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் விற்பனையில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனையில் சற்றே சுணக்கம்!

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் மாடலாக வந்த ஹெக்டர் எஸ்யூவிக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டிசைன், இடவசதி, தொழில்நுட்ப அம்சங்களில் மதிப்பு மிக்க தேர்வாக வந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் ஹெக்டரை கொண்டாடி வருகின்றனர்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனையில் சற்றே சுணக்கம்!

இந்த நிலையில், கடந்த மாதம் ஹெக்டர் எஸ்யூவியின் விற்பனையில் சிறிதளவு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 3,239 ஹெக்டர் எஸ்யூவிகள் விற்பனையாகி உள்ளது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து முதல்முறையாக கடந்த மாதத்தில் ஹெக்டர் எஸ்யூவியின் விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனையில் சற்றே சுணக்கம்!

அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் கடந்த ஜூலை மாதம் 1,508 யூனிட்டுகளும், ஆகஸ்ட்டில் 2,108 யூனிட்டுகளும், செப்டம்பரில் 2,608 யூனிட்டுகளும், அக்டோபரில் 3,536 யூனிட்டுகளும் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், நவம்பரில் ஹெக்டர் எஸ்யூவி விற்பனையில் மந்தம் ஏற்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனையில் சற்றே சுணக்கம்!

இருந்தாலும் இதன் ரகத்தில் மதிப்புவாய்ந்த மாடலாக தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இதன் நேர்த்தியான டிசைன் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்ற பெருமையும் இதற்கு உண்டு. அதாவது, நேரடி இணைய வசதியை அளிக்கும் விதத்தில், இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் இன்பில்ட் சிம் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனையில் சற்றே சுணக்கம்!

ஸ்மார்ட்போன் செயலி மூலமாக கார் குறித்த பல்வேறு தகவல்களையும், கட்டுப்பாட்டு வசதிகளையும் பெற இந்த நேரடி இணைய வசதி உLவுகிறது. இந்த காருக்கு நிறுவனத்திலிருந்து நேரடி அப்டேட்டுகளை வழங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனையில் சற்றே சுணக்கம்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 143 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் ஹைப்ரி்ட் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டும் கொடுக்க்ப்படுகிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனையில் சற்றே சுணக்கம்!

இதன் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இதுவரை வழங்கப்படவில்லை.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனையில் சற்றே சுணக்கம்!

இந்த காரில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், 360 டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப், 17 அங்குல அலாய் வீல்கள், மூட் லைட் சிஸ்டம், ஆறு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், டிஸ்க் பிரேக்குகள் முக்கிய அம்சங்களாக உள்ளன.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனையில் சற்றே சுணக்கம்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரூ.12.48 லட்சம் முதல் ரூ.17.28 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 5, 2019, 12:15 [IST]
English summary
MG Motor India has retailed 3,239 units of Hector SUV in November, 2019.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+