இந்தியா வரும் புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இங்கிலாந்தில் அறிமுகம்... விலை விபரம்!

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இங்கிலாந்தில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியா வரும் புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இங்கிலாந்தில் அறிமுகம்... விலை விபரம்!

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் என்ற முதல் கார் மாடலை இந்தியாவில் அண்மையில் அறிமுகம் செய்தது. இந்த புதிய எஸ்யூவி கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஹெக்டர் எஸ்யூவிக்கு கிடைத்திருக்கும் உற்சாகத்துடன் இரண்டாவது கார் மாடலையும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்தியா வரும் புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இங்கிலாந்தில் அறிமுகம்... விலை விபரம்!

இரண்டாவது மாடலாக இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காரை இந்தியாவில் களமிறக்க உள்ளதாக உறுதி செய்துள்ளது எம்ஜி மோட்டார் நிறுவனம். இந்த புதிய இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இங்கிலாந்தில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று முறைப்படி பொது பார்வைக்காக அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியா வரும் புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இங்கிலாந்தில் அறிமுகம்... விலை விபரம்!

வரும் செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. இங்கிலாந்தில் 21,495 பவுண்ட் முதல் 23,495 பவுண்ட் வரையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.18.36 லட்சம்முதல் ரூ.20.07 லட்சம் வரையிலான விலையில் அங்கு விற்பனைக்கு வருகிறது.

இந்தியா வரும் புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இங்கிலாந்தில் அறிமுகம்... விலை விபரம்!

இதைத்தொடர்ந்து, இந்த புதிய எஸ்யூவி வரும் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. முதல்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனை செய்யப்படும். வரவேற்பை பொறுத்து பிற நகரங்களிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.

இந்தியா வரும் புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இங்கிலாந்தில் அறிமுகம்... விலை விபரம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் 5 பேர் செல்வதற்கான இருக்கை வசதியை அளிக்கும். தொழில்நுட்ப வசதிகளிலும் மிகச் சிறந்த மாடலாகவும் வர இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியா வரும் புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இங்கிலாந்தில் அறிமுகம்... விலை விபரம்!

புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் 141 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வழங்கும் மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த காரில் 44.5kW லித்தியம் அயான் பேட்டரியும் உள்ளது.

இந்தியா வரும் புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இங்கிலாந்தில் அறிமுகம்... விலை விபரம்!

இந்த பேட்டரியை 50kW ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 43 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். சாதாரண 7kW சார்ஜர் மூலமாக பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு ஆறரை மணிநேரம் பிடிக்கும்.

இந்தியா வரும் புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இங்கிலாந்தில் அறிமுகம்... விலை விபரம்!

பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் அதிகபட்சமாக 262 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இதன் பேட்டரிக்கும் 7 ஆண்டுகள் வாரண்டி வழ்கப்படும் என்று எம்ஜி மோட்டார் தெரிவிக்கிறது.

இந்தியா வரும் புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இங்கிலாந்தில் அறிமுகம்... விலை விபரம்!

எம்ஜி இ இசட்எஸ் எஸ்யூவி காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை ச்போர்ட் செய்யும். ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி, எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

இந்தியா வரும் புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இங்கிலாந்தில் அறிமுகம்... விலை விபரம்!

இந்த காரில் ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஆக்டிவ் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் கீப்பிங் அசிஸ்ட், டிராஃபிக் ஜாம் அசிஸ்ட், இன்டெலிஜென்ட் ஸ்பீடு லிமிட் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன் சிஸ்டம் ஆகிய ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

இந்தியா வரும் புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இங்கிலாந்தில் அறிமுகம்... விலை விபரம்!

இந்தியாவில் புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் விற்பனைக்கு வந்த ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நேரடி போட்டியாக வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 18, 2019, 10:53 [IST]
English summary
MG Motor has announced the pricing and availability on the ZS Electric SUV that goes on sale in UK September this year. It will be launched in India by end of this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+