பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு இன்று முதல் முன்பதிவு!!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு இன்று முதல் முன்பதிவு தொடங்கப்படுகிறது. விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு இன்று முதல் முன்பதிவு!!

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் ஹெக்டர் என்ற ஒரே ஒரு காரின் மூலமாக இந்திய மார்க்கெட்டில் வெகுவாக பிரபலமடைந்துள்ளது. இந்திய மார்க்கெட்டில் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் கார் இதுவே. எஸ்யூவி ரக காரான ஹெக்டர் கடந்த ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு இன்று முதல் முன்பதிவு!!

மிக சவாலான விலையில் பல்வேறு வசதிகளுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹெக்டர் எஸ்யூவிக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சூழலில் இந்திய மார்க்கெட்டில் தனது இரண்டாவது தயாரிப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்ய எம்ஜி நிறுவனம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு இன்று முதல் முன்பதிவு!!

இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிதான் இந்திய மார்க்கெட்டில் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள இரண்டாவது தயாரிப்பு. கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன் இந்திய மார்க்கெட்டில் வெளியிடப்பட்ட எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு இன்று முதல் முன்பதிவு!!

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு போட்டியாக வரவுள்ள எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இன்று முதல் (டிசம்பர் 21) முன்பதிவு தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு இன்று முதல் முன்பதிவு!!

விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை புக்கிங் செய்து கொள்ளலாம். எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 44.5kWh பேட்டரி வழங்கப்படவுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 340 கிலோ மீட்டர்கள் தூரம் வரை பயணிக்க முடியும்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு இன்று முதல் முன்பதிவு!!

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியானது IP67 பாதுகாப்புடன் வருகிறது. இதன் மூலம் தண்ணீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். 50 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக சார்ஜ் செய்தால், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை வெறும் 40 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு இன்று முதல் முன்பதிவு!!

அதே சமயம் ஸ்டாண்டர்டு 7.4 kW சார்ஜரை பயன்படுத்தினால், இந்த காரின் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற சுமார் 7 மணி நேரம் ஆகும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 8.5 வினாடிகளில் எட்டி விடும் திறன் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு உண்டு. இந்த காரில் பல்வேறு வசதிகள் வழங்கப்படவுள்ளன.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு இன்று முதல் முன்பதிவு!!

இதில், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் கூடிய 8 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், முன் மற்றும் பின் பகுதிகளில் யூஎஸ்பி சார்ஜிங், ரியர் வியூ கேமரா ஆகியவை குறிப்பிடத்தக்கவை. விலை நிர்ணயம் சரியாக இருக்கும் பட்சத்தில், ஹெக்டரை போலவே இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியும் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, December 21, 2019, 7:00 [IST]
English summary
MG ZS Electric SUV Bookings Open From Today - Details. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+