தல, தளபதி படங்களின் எதிர்பார்ப்பை ஓவர்டேக் செய்த எம்ஜி எலெக்ட்ரிக் கார்! இந்த புதிய தகவல்தான் காரணம்
எம்ஜி எலெக்ட்ரிக் கார் தொடர்பாக வெளியாகியுள்ள புதிய தகவலால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹெக்டர் காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது எஸ்யூவி ரக கார் ஆகும். அத்துடன் இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் காரும் இதுதான். எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் எம்ஜி மோட்டார் நிறுவனம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளது. இதே மகிழ்ச்சியுடன் இந்திய மார்க்கெட்டிற்கான தனது இரண்டாவது காரையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் நிறுவனம் தயாராகி வருகிறது. ஹெக்டர் காருக்கு அடுத்தபடியாக எம்ஜி நிறுவனம் இந்தியாவில் களமிறக்கவுள்ள கார் இஸட்எஸ் (MG ZS). இது எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும்.

இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விபரங்கள் எதுவும் தற்போதைய நிலையில் வெளியாகவில்லை. என்றாலும் ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் எம்ஜி இஸட்எஸ் காரில் இடம்பெற்றுள்ள மோட்டார் மற்றும் பேட்டரிதான் இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி இஸட்எஸ் காரிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் விற்பனை செய்யப்படும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், Synchronous Motor வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. அதே சமயம் இந்த காரில் 44.5 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் தாராளமாக 300 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கலாம்.

50 kW DC சார்ஜரை பயன்படுத்தினால், இந்த பேட்டரியை வெறும் 40 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். அதே நேரத்தில் ஸ்டாண்டர்டு 7 kW சார்ஜரை பயன்படுத்தினால், முழுமையாக சார்ஜ் ஏற 7 மணி நேரம் வரை ஆகும். இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி நிறுவனத்தின் முதல் காரான ஹெக்டரில் ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே எம்ஜி நிறுவனத்தின் 2வது தயாரிப்பான இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய மார்க்கெட்டை பொறுத்தவரை ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் போட்டியிடவுள்ளது.

இந்த சூழலில், இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி வரும் டிசம்பர் 5ம் தேதி எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது. அப்போது எம்ஜி இஸட்எஸ் கார் குறித்த பல்வேறு விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்பின் டிசம்பர் மாத இறுதி அல்லது 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போதுதான் மெல்ல மெல்ல பிரபலமடைய தொடங்கியுள்ளன.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாதவை என்பதால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு ஆதரவு வழங்கி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக, பல்வேறு சலுகைகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








