இந்தியாவில் களமிறங்கவுள்ள எம்ஜி எலெக்ட்ரிக் காரின் டெலிவரி இங்கிலாந்தில் தொடங்கியது! விலை தெரியுமா?

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் டெலிவரி இங்கிலாந்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் களமிறங்கவுள்ள எம்ஜி எலெக்ட்ரிக் காரின் டெலிவரி இங்கிலாந்தில் தொடங்கியது! விலை தெரியுமா?

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஹெக்டர் எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்திய மார்க்கெட்டில் எம்ஜி நிறுவனம் களமிறக்கியுள்ள முதல் கார் இதுதான். இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்ற பெருமையுடன் களமிறங்கியுள்ள எம்ஜி ஹெக்டர் காருக்கு வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வழங்கி வருகின்றனர்.

இந்தியாவில் களமிறங்கவுள்ள எம்ஜி எலெக்ட்ரிக் காரின் டெலிவரி இங்கிலாந்தில் தொடங்கியது! விலை தெரியுமா?

எம்ஜி ஹெக்டர் காரின் மிக சவாலான விலை நிர்ணயமும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இஸட்எஸ் (ZS) எனும் எலெக்ட்ரிக் காரை எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுவும் எஸ்யூவி ரக கார்தான். இந்திய மார்க்கெட்டில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் இது போட்டியிடும்.

இந்தியாவில் களமிறங்கவுள்ள எம்ஜி எலெக்ட்ரிக் காரின் டெலிவரி இங்கிலாந்தில் தொடங்கியது! விலை தெரியுமா?

20 லட்ச ரூபாய் என்ற விலையில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் நடப்பாண்டு இறுதிக்குள் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் களமிறங்கவுள்ள எம்ஜி எலெக்ட்ரிக் காரின் டெலிவரி இங்கிலாந்தில் தொடங்கியது! விலை தெரியுமா?

இந்திய அறிமுகத்திற்கு முன்னதாக இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எம்ஜி நிறுவனம் இங்கிலாந்தில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து 60 நாட்களுக்கு உள்ளாக இந்த காருக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளதாக எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் களமிறங்கவுள்ள எம்ஜி எலெக்ட்ரிக் காரின் டெலிவரி இங்கிலாந்தில் தொடங்கியது! விலை தெரியுமா?

இந்த சூழலில் இங்கிலாந்தில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் டெலிவரி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அங்கு முதல் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரை ஜாக்சன் என்பவர் டெலிவரி பெற்றுள்ளார். இங்கிலாந்தில் 21,995 பவுண்டுகள் என்ற ஆரம்ப விலையில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் கிடைக்கிறது.

இந்தியாவில் களமிறங்கவுள்ள எம்ஜி எலெக்ட்ரிக் காரின் டெலிவரி இங்கிலாந்தில் தொடங்கியது! விலை தெரியுமா?

இந்திய மதிப்பில் தோராயமாக 20 லட்ச ரூபாய்க்கு நெருக்கமாக வருகிறது. இது 5 சீட்டர் எஸ்யூவி ரக கார் ஆகும். இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 163 மைல்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன எம்ஜி பைலட் டிரைவர் அஸிஸ்டென்ஸ் வசதியையும் இந்த கார் பெற்றுள்ளது.

இந்தியாவில் களமிறங்கவுள்ள எம்ஜி எலெக்ட்ரிக் காரின் டெலிவரி இங்கிலாந்தில் தொடங்கியது! விலை தெரியுமா?

இதுகுறித்து எம்ஜி மோட்டார் யுகே சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் ஹெட் டேனியல் கிரிகோரியஸ் கூறுகையில், ''இங்கிலாந்தில் ஜாக்சன்தான் முதல் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் உரிமையாளர். அவரை எம்ஜி குடும்பத்திற்கு வரவேற்கிறோம். எம்ஜி பிராண்டிற்கு இது மிகப்பெரிய நிகழ்வு. புதிய தொழில்நுட்பத்தில் நாங்கள் மிகப்பெரிய முதலீட்டை செய்துள்ளோம்.

இந்தியாவில் களமிறங்கவுள்ள எம்ஜி எலெக்ட்ரிக் காரின் டெலிவரி இங்கிலாந்தில் தொடங்கியது! விலை தெரியுமா?

இங்கிலாந்து கார் வாடிக்கையாளர்களுக்கு மலிவான ஜீரோ எமிஷன் காரை கொண்டு வந்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்'' என்றார். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியிலும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பார்ப்பை எம்ஜி நிறுவனம் விரைவில் பூர்த்தி செய்யவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 28, 2019, 19:53 [IST]
English summary
MG ZS EV Deliveries Begin In UK. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+