எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் வேரியண்ட்டுகளில் உள்ள வசதிகள் விபரம்!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரில் வழங்கப்பட இருக்கும் வேரியண்ட் தேர்வுகள் மற்றும் அதில் உள்ள வசதிகள் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் எக்ஸ்சைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. நேரடி இன்டர்நெட் வசதி உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

எக்ஸ்சைட் வேரியண்ட்டின் வெளிப்புற அம்சங்கள்
எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் விலை குறைவான வேரியண்ட்டாக எக்ஸ்சைட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், ரியர் ஸ்பாய்லர், சைடு மிரர்களில் டர்ன் இண்டிகேட்டர் விளக்குகள், 17 அங்குல அலாய் வீல்கள் இடம்பெற்றிருக்கும். க்ரோம் அலங்கார ஆக்சஸெரீகளுடன் முன்புற க்ரில் அமைப்பு, பாடி கலர் பம்பர் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

எக்ஸைட் வேரியண்ட்டின் உட்புற அம்சங்கள்
எக்ஸ்சைட் இன்டீரியரில் முக்கிய அம்சங்களாக லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், 8.9 செமீ அளவுடைய மல்டி இன்பர்மேஷன் திரை, பின்புறத்தில் 60:40 ஃபோல்டிங் இருக்கைகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

எக்ஸ்சைட் வேரியண்ட்டின் வசதிகள்
இந்த வேரியண்ட்டில் கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ரூஸ் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், இரவில் காரை நிறுத்தி இறங்கும்போது, சிறிது நேரம் ஒளிர்ந்து அணையும் ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள், ரிமோட் கன்ட்ரோல் லாக் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி மற்றும் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் இடம்பெற்றிருக்கும்.

எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டின் வெளிப்புற அம்சங்கள்
எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் விலை உயர்ந்த வேரியண்ட்டாக இது நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் கூடுதலாக சில்வர் பூச்சுடன் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளன.

எக்ஸ்க்ளூசிவ் இன்டீரியர்
இந்த வேரியண்ட்டில் கூடுதலாக லெதர் இருக்கைகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் அமைப்பும் வழங்கப்படும். அதாவது, கார் கூரையின் 90 சதவீத பரப்பபு கண்ணாடி கூரையாக அமைந்திருக்கும்.

வசதிகள்
இந்த வேரியண்ட்டில் கேபினில் காற்று சுத்திகரிப்புக்காக PM 2.5 ஃபில்டர், 6 ஸ்டெப் பவர் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் இருக்கை, மடக்கும் வசதியுடன் சைடு மிரர்கள், முன் இருக்கைகளின் பின்பக்கத்தில் பாக்கெட்டுகள், ஐ-ஸ்மார்ட் இவி 2.0 கனெக்டெட் வசதி இடம்பெறுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்
புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள், பெடஸ்ட்ரியன் வார்னிங் சிஸ்டம், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் இடம்பெற்றிருக்கும்.

புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ரூ.22 லட்சம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரியில் விற்பனைக்கு வரும் இந்த காருக்கு ரூ.50,000 முன்பணத்துடன் முன்பதிவும் செய்யப்படுகிறது. முதலில் முன்பதிவு செய்யும் 1,000 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அறிமுகச் சலுகை விலையில் இந்த கார் டெலிவிரி கொடுக்கப்படும். ஹூண்டாய் கோனா காருக்கு போட்டியாக வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








