ஃபார்முலா-1 கார் பந்தயத்தில் கால் பதித்த சூமேக்கர் மகன்!

மைக்கேல் சூமேக்கரின் மகன் மிக் சூமேக்கர் பஹ்ரைனில் நடைபெறும் ஃபார்முலா-1 கார் பந்தயத்தில் கால் பதித்துள்ளார்.

மிக் சூமேக்கர், ஃபார்முலா-1, கார் பந்தயம், மோட்டார்ஸ்போர்ட்ஸ்

ஃபார்முலா-1 உலகின் ஜாம்பவானாக போற்றப்படும் மைக்கேல் சூமேக்கர் பனிச்சறுக்கு விளையாட்டின்போது தவறி விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறிது சிறிதாக அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், மைக்கேல் சூமேக்கரின் மகன் மிக் சூமேக்கர் தந்தை வழியில் கார் பந்தய வீரராக கலக்கி வருகிறார்.

ஐரோப்பிய ஃபார்முலா-3 வகை பந்தயங்களில் மூன்று முறை சாம்பியன் பட்டங்களை வென்ற அவர் தற்போது உலகின் நம்பர்-1 கார் பந்தயமாக கருதப்படும் ஃபார்முலா-1 கார் பந்தயத்திலும் கால் பதித்துள்ளார். இந்த ஆண்டு துவக்கத்தில் 20 வயதாகும் மிக் சூமேக்கரை ஃபார்முலா-1 வீரராக ஃபெராரி அணி ஒப்பந்தம் செய்தது.

இதனைத்தொடர்ந்து, பஹ்ரைனில் நடைபெறும் இந்த ஆண்டின் முதல் ஃபார்முலா-1 பந்தயம் வார இறுதியில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், அதற்கு முன்னதாக நேற்றுமுன்தினம் நடந்த சோதனை சுற்றுப் போட்டியில் முதல்முறையாக ஃபெராரி நிறுவனத்தின் எஸ்எஃப்-90 ஃபார்முலா-1 காரை பஹ்ரைன் ஃபார்முலா-1 கார் பந்தய களத்தில் ஓட்டினார். மொத்தம் 13 சுற்றுகளை மேற்கொண்டார்.

MIck

ஃபெராரி எஸ்எஃப்-90 ஃபார்முலா-1 காரை ஓட்டியது மகிழ்ச்சியை அளித்தது என்று குறிப்பிட்டுள்ளார். இங்குள்ள பலரை சிறு வயது முதலே தெரியும் என்பதால், பஹ்ரைன் என்பது சொந்த கராஜில் இறங்குவது போன்ற உணர்வை தந்தது.

மேலும், எப்படி இருந்தாலும் காரை திருப்பிவிடும் நம்பிக்கையை அளிக்கிறது. பிரேக்கை உடனே பிடிக்க வேண்டும் என்று தோன்றவில்லை," என்று ஃபெராரி ஃபார்முலா-1 கார் குறித்து புகழாராம் சூட்டினார்.

இதைத்தொடர்ந்து நேற்று ஃபெராரியின் பார்டனரான அல்ஃபா ரோமியோ உருவாக்கி இருக்கும் ஃபார்முலா-1 காரையும் ஓட்டி சோதித்து பார்த்தார். கடந்த வாரம்தான் ஃபார்முலா-2 போட்டியில் அவர் கால் பதித்ததும் குறிப்பிடத்தக்கது.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல, மைக்கேல் சூமேக்கரின் மகனும் ஃபார்முலா-1 கார் பந்தய உலகில் நுழைந்துள்ளார். அவர் தந்தை வழியில் பல வெற்றிகளை குவிப்பார் என்று மோட்டார்ஸ்போர்ட்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Most Read Articles
English summary
Formula 3 reigning champion Mick Schumacher clocked the second fastest time at the official Bahrain testing event. Red Bull's Max Verstappen was fastest. The 20-year-old took to the circuit for the first time in a Formula 1 car and said he throughly enjoyed the experience. The Ferrari Development Academy signed the son of racing legend and seven time Formula 1 champion, Michael Schumacher earlier this year. And he appeared comfortable performing in red.
Story first published: Thursday, April 4, 2019, 21:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X