பிஎஸ்-6 எஃபெக்ட்... மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி தடாலடியாக குறைப்பு!

இந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியின் விலை தடாலடியாக பல லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. முழுமையாக விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎஸ்-6 எஃபெக்ட்... மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி தடாலடியாக குறைப்பு!

கடந்த ஆண்டு மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த எஸ்யூவி ரூ.32 லட்சம் விலையில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.

பிஎஸ்-6 எஃபெக்ட்... மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி தடாலடியாக குறைப்பு!

ஆனால், விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருப்பதால், வரும் ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்-4 கார்களை விற்பனை செய்ய முடியாது.

பிஎஸ்-6 எஃபெக்ட்... மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி தடாலடியாக குறைப்பு!

இதையடுத்து, அவுட்லேண்டர் விலையை ரூ.5 லட்சம் தடாலடியாக குறைத்துள்ளது மிட்சுபிஷி நிறுவனம். இனி இந்த கார் ரூ.26.93 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். இருப்பில் இருக்கும் பிஎஸ்-4 அவுட்லேண்டர் எஸ்யூவிகளை விற்றுத் தீர்க்கும் விதமாக இந்த முடிவை மிட்சுபிஷி எடுத்துள்ளது.

பிஎஸ்-6 எஃபெக்ட்... மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி தடாலடியாக குறைப்பு!

மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியில் ஏராளமான பிரிமீயம் வசதிகள் உள்ளன> எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன. இந்த காரில் மல்டி ஸ்போக் 16 அங்குல அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன.

பிஎஸ்-6 எஃபெக்ட்... மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி தடாலடியாக குறைப்பு!

இந்த கார் 7 பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதியை கொண்டது. கருப்பு - பீஜ் வண்ணத்திலான இரட்டை வண்ண இன்டீரியர் தீம் உள்ளது. லெதர் இருக்கைகள், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், சன்ரூஃப் ஆகிய வசதிகள் உள்ளன.

பிஎஸ்-6 எஃபெக்ட்... மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி தடாலடியாக குறைப்பு!

மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியில் புதிதாக 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொரு்ததப்பட்டு இருக்கிறது. மேலும், 710 வாட் திறன் வாய்ந்த ஃபாஸ்கேட் ஆடியோ சிஸ்டமும் இடம்பெற்றிருக்கிறது. ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்குகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், கீ லெஸ் என்ட்ரி, 7 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், இபிடி பிரேக் தொழில்நுட்பம் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பிஎஸ்-6 எஃபெக்ட்... மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி தடாலடியாக குறைப்பு!

இந்த காரில் 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 165 பிஎச்பி பவரையும், 222 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன், 4 வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

Most Read Articles
English summary
Mitsubishi launched an all new variant of the Outlander SUV in India during June 2018 at a starting price of Rs 32 lakh. After over a year of poor sales, the company offering the SUV at revised price of Rs 27 lakh. Prices mentioned are ex-showroom, India.
Story first published: Tuesday, December 17, 2019, 17:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X