உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் முகேஷ் அம்பானி வாங்கிய புதிய காரின் விலை இதுதான்...

தொழிலதிபர் முகேஷ் அம்பானி வாங்கியுள்ள புதிய காரின் விலை, அதில் இடம்பெற்றிருக்கும் உச்சகட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் முகேஷ் அம்பானி வாங்கிய புதிய காரின் விலை இதுதான்...

இந்தியாவின் நம்பர்-1 பணக்காரர் முகேஷ் அம்பானி, இஸட் பிளஸ் (Z+) பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பவர். எனவே முகேஷ் அம்பானியின் கான்வாயில், அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கவச வாகனங்கள் (Armoured Vehicles) அணிவகுத்து செல்லும். இதில், மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ221 எஸ்-கார்டு (Mercedes-Benz W221 S-Guard), பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஹை செக்யூரிட்டி (BMW 7-Series High Security) ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் முகேஷ் அம்பானி வாங்கிய புதிய காரின் விலை இதுதான்...

இந்த சூழலில் மும்பையில் உள்ள சௌபாட்டி கடற்கரை பகுதிக்கு, முகேஷ் அம்பானியும், அவரது மகள் இஷா அம்பானியும் வந்திருந்தனர். பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி கார்கள் புடை சூழ, மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ221 எஸ்-கார்டு காரில், முகேஷ் அம்பானியும், இஷா அம்பானியும் வந்தனர். பெரும்பாலும் ஓரிடத்திற்கு ஒன்றாக செல்ல வேண்டுமென்றால், ஒரே கான்வாயில் வரும் வெவ்வேறு கார்களில்தான் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் பயணிப்பார்கள்.

உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் முகேஷ் அம்பானி வாங்கிய புதிய காரின் விலை இதுதான்...

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால் இம்முறை முகேஷ் அம்பானியும், அவரது மகள் இஷா அம்பானியும் ஒரே காரில் வந்தனர். அவர்கள் இருவரும் வந்த மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ221 எஸ்-கார்டு கார், புதிதாக வாங்கப்பட்டுள்ளது. இந்த காரை முகேஷ் அம்பானி கடந்த 2017ம் ஆண்டே 'புக்' செய்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அவருக்கு கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் முகேஷ் அம்பானி வாங்கிய புதிய காரின் விலை இதுதான்...

பொதுவாக கவச வாகனங்களை உருவாக்க நீண்ட காலம் பிடிக்கும். அத்துடன் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப அவை உருவாக்கப்படும். எனவேதான் டெலிவரி கொடுக்க தாமதம் ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த கார் 'மேட் இன் இந்தியா' கிடையாது. இது ஜெர்மனியில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மாடல் ஆகும்.

உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் முகேஷ் அம்பானி வாங்கிய புதிய காரின் விலை இதுதான்...

உற்பத்தியாளரால் அதிகாரப்பூர்வமாக எஸ்-கார்டு என அழைக்கப்படும் இந்த கார், விஆர்9 (VR9) நிலை பாதுகாப்பை வழங்கக்கூடியது. இது சிஇஎன் பி6/பி7 (CEN B6/B7) தரத்திற்கு இணையானது. எளிதாக சொல்வதென்றால், ஒரே நேரத்தில் பல்வேறு கோணங்களில் இருந்து, ரைபிள் உள்ளிட்டவற்றால் தாக்குதல் நடத்தினாலும், அதனை தாங்க கூடிய திறன் இதற்கு உண்டு.

உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் முகேஷ் அம்பானி வாங்கிய புதிய காரின் விலை இதுதான்...

இதில், வெடிகுண்டு மற்றும் கண்ணி வெடிகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வசதிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மிச்சலின் பிஏஎக்ஸ் டயர்கள் மூலம் மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ221 எஸ்-கார்டு கார் இயங்குகிறது. இது ஏர் பிரஷர் ஜீரோவாக இருந்தாலும் கூட, மணிக்கு 80 கிலோ மீட்டர்கள் வரையிலான வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது.

உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் முகேஷ் அம்பானி வாங்கிய புதிய காரின் விலை இதுதான்...

தீயில் இருந்து காரை பாதுகாக்கும் வசதிகளும் இதில் உள்ளன. இதுதவிர நைட் விஷன் கேமராவையும், மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ221 எஸ்-கார்டு கார் பெற்றுள்ளது. இருள் சூழ்ந்த சாலைகளில், ஹெட்லேம்ப் இல்லாமலேயே பயணம் செய்ய இது உதவுகிறது. இதில் இன்னும் அதிநவீன வசதிகள் இருந்தாலும் கூட, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி அவை பொது வெளியில் வெளியிடப்படுவதில்லை.

உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் முகேஷ் அம்பானி வாங்கிய புதிய காரின் விலை இதுதான்...

இதில், 12 சிலிண்டர், வி-ஃபார்மேஷன் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிசக்தி வாய்ந்த இந்த இன்ஜின் அதிகபட்சமாக 517 பிஎச்பி பவர் மற்றும் 830 என்எம் டார்க் திறனை உருவாக்கக்கூடியது. கஸ்டமைசேஷன் மற்றும் இந்தியாவில் விதிக்கப்படும் இறக்குமதி வரி ஆகியவற்றை பொறுத்து, மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ221 எஸ்-கார்டு காரின் விலை 8-9 கோடி ரூபாயாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் முகேஷ் அம்பானி வாங்கிய புதிய காரின் விலை இதுதான்...

மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ221 எஸ்-கார்டு தவிர, முகேஷ் அம்பானி தனது தினசரி பயன்பாட்டிற்கு, மற்றொரு வித்தியாசமான எஸ்-கார்டு காரையும் பயன்படுத்தி வருகிறார். இந்த காரின் விலை சுமார் 7.5 கோடி ரூபாய். இதுதவிர பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஹை செக்யூரிட்டி கவச வாகனம் ஒன்றையும் முகேஷ் அம்பானி வைத்துள்ளார். இதன் விலை சுமார் 8 கோடி ரூபாய்.

உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் முகேஷ் அம்பானி வாங்கிய புதிய காரின் விலை இதுதான்...

ஆக மொத்தத்தில் முகேஷ் அம்பானியிடம் உள்ள கவச கார்களின் விலை மட்டும் சுமார் 25-30 கோடி ரூபாயாக இருக்கலாம் என கூறப்படுகிறது. காரின் உரிமையாளர் தேர்வு செய்யும் கஸ்டமைசேஷன் காரணமாக, துல்லியமான விலை தெரியவில்லை. இதனிடையே முகேஷ் அம்பானியும், அவரது மகள் இஷா அம்பானியும், மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ221 எஸ்-கார்டு காரில் வந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக அவரது கான்வாயில், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர், பிஎம்டபிள்யூ எக்ஸ்5, ஃபோர்டு என்டேவர் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி உள்ளிட்ட கார்கள் அணிவகுத்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: SU LATS

More from DriveSpark

Article Published On: Friday, March 15, 2019, 16:31 [IST]
English summary
Mukesh Ambani's New Mercedes S-guard. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+