அம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...
இந்தியாவின் நம்பர்-1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன்களுடைய பாதுகாப்பு செலவு தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது எவ்வளவு என தெரிந்தால் நீங்கள் கோவப்படக்கூடும்.

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி. தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக உள்ள முகேஷ் அம்பானி, இந்தியாவின் நம்பர்-1 பணக்காரர் என்ற அந்தஸ்தில், கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வருகிறார்.

அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற பிஸ்னஸ் பத்திரிக்கையான போர்ப்ஸ் வெளியிட்டு வரும் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில், கடந்த 10 ஆண்டுகளாக முகேஷ் அம்பானிதான் முதலிடத்தில் இருந்து கொண்டுள்ளார்.

இதுதவிர போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய தொழிலதிபரும் முகேஷ் அம்பானிதான். ஆயில் முதல் செல்போன் வரை முகேஷ் அம்பானி தொட்ட வியாபாரம் எல்லாம் பொன்னாக மாறுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.

இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் பெரும் பணக்காரர்களில் ஒருவராக திகழ்வதால், முகேஷ் அம்பானி ஆடம்பரங்களில் அதிக ஈடுபாடு காட்ட கூடியவராக உள்ளார். அவரது மனைவி நீட்டா அம்பானி, மகன்கள் ஆனந்த் மற்றும் ஆகாஷ் அம்பானி, மகள் இஷா அம்பானி ஆகியோரும் அப்படித்தான்.

மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் அன்டிலியா (Antilla) வீடு அதற்கு ஓர் உதாரணம் மட்டுமே. உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த வீடு இதுதான். இந்த வீட்டில், உலகின் அரிதான கார்கள் பலவற்றை முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வைத்துள்ளனர்.
MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

இந்த கார்கள் அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தவை. எனவே சாமானியர்களால் இத்தகைய கார்களை வாங்குவது என்பது இயலாத காரியமாகவே பார்க்கப்படுகிறது. அன்டிலியா வீட்டில் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் நூற்றுக்கணக்கான விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளனர்.

இதில், மெர்சிடிஸ் மேபக் (Mercedes Maybach), அஸ்டன் மார்ட்டின் ரேபிடே (Aston Martin Rapide) மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் பாந்தம் (Rolls Royce Phantom) உள்ளிட்டவை, முகேஷ் அம்பானி குடும்பத்தினரிடம் உள்ள குறிப்பிடத்தகுந்த லக்ஸரி கார்கள் ஆகும்.

இதுதவிர பென்ட்லீ பென்டேகா (Bentley Bentayga) காரும் முகேஷ் அம்பானி குடும்பத்திடம் உள்ளது. எஸ்யூவி வகையை சேர்ந்த பென்ட்லீ பென்டேகா காரின் விலை சுமார் 3.85 கோடி ரூபாய். ஆனால் முகேஷ் அம்பானி குடும்பம் 2 பென்ட்லீ பென்டேகா கார்களை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் முகேஷ் அம்பானியின் மகன்களான ஆனந்த் மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகியோர் தங்கள் பென்ட்லீ பென்டேகா காரை ஓட்டி வரும் வீடியோ ஒன்று, பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி கொண்டுள்ளது.

சுமார் 3.85 கோடி ரூபாய் மதிப்புடைய பென்ட்லீ பென்டேகா காரில், ஆனந்த் மற்றும் ஆகாஷ் அம்பானி வருகின்றனர். அதே நேரத்தில், அவர்களின் பாதுகாப்பிற்கு என தனியாக 16 விலை உயர்ந்த கார்கள் அவர்களின் முன்னும், பின்னும் அணிவகுத்து வருகின்றன.

6 ஃபோர்டு என்டேவர், 4 லேண்ட்ரோவர் டிஸ்கவரி, 3 லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், 2 பிஎம்டபிள்யூ எக்ஸ்5, 1 லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆகியவைதான் அந்த 16 கார்கள். இந்த கார்களின் மொத்த விலை எவ்வளவு என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைய கூடும்.

இந்த கார்களின் விலையை நீங்கள் கீழே காணலாம்.
பென்ட்லீ பென்டேகா x 1 = ரூ.3.85 கோடி
ஃபோர்டு என்டேவர் x 6 = ரூ.1.57 கோடி
லேண்ட்ரோவர் டிஸ்கவரி x 4 = ரூ.1.78 கோடி
லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் x 3 = ரூ.3.45 கோடி
பிஎம்டபிள்யூ எக்ஸ்5 x 2 = ரூ.1.67 கோடி
லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் x 1 = ரூ.52 லட்சம்

ஆக மொத்தம் 12.84 கோடி ரூபாய் வருகிறது!!! இங்கே குறிப்பிட்டாக வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. இவை அனைத்தும் இந்த கார்களின் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு வருகையில், இவற்றின் விலை இன்னும் அதிகரிக்கும்.

முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் ஆடம்பரத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு மட்டும்தான். அத்துடன் இந்த தொகை, முகேஷ் அம்பானியின் மகன்களுடைய பாதுகாப்பிற்காக உடன் வரும் கார்களுக்கான செலவு மட்டுமே என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.

இதனிடையே முகேஷ் அம்பானியின் மகன்கள் ஆனந்த் மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகியோர் தங்கள் பென்ட்லீ பென்டேகா காரை ஓட்டி வரும் வீடியோவை CS 12 Vlogs வெளியிட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பிற்காக லக்ஸரி கார்கள் அணிவகுத்து வரும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த சூழலில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் கல்லினன் எஸ்யூவி காரை முகேஷ் அம்பானியின் குடும்பம் வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் வெளியிட்ட முதல் எஸ்யூவி வகை கார் இதுதான்.

ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி காரின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையே 6.95 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. முகேஷ் அம்பானி கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். குறிப்பாக லக்ஸரி கார்கள் மீது அவர் அதிக ஆர்வம் காட்டக்கூடியவர். எனவேதான் இவ்வளவு விலை உயர்ந்த கார்களை அவர் வாங்கி குவிக்கிறார்.


Click it and Unblock the Notifications