மும்பைக்கு சென்னை தேவலாம்... இந்த பட்டியலில் நம்ம தலைநகருக்கு கிடைத்த இடம் இதுதான்...

மும்பைக்கு சென்னை எவ்வளவோ பரவாயில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மும்பைக்கு சென்னை தேவலாம்... இந்த பட்டியலில் நம்ம தலைநகருக்கு கிடைத்த இடம் இதுதான்...

இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக சொந்தமாக கார் வாங்கும் தனி நபர்களின் எண்ணிக்கை முன்பை காட்டிலும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்து முறைகளின் பயன்பாடு குறைந்து, இந்திய சாலைகளில் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது.

மும்பைக்கு சென்னை தேவலாம்... இந்த பட்டியலில் நம்ம தலைநகருக்கு கிடைத்த இடம் இதுதான்...

இந்த சூழலில் தற்போது வாகன நெரிசல் தொடர்பான புதிய புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி கார்கள் அடர்த்தியில் (Car Density) இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கும் நகரம் மும்பை. இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையில், பிரைவேட் கார்களின் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

மும்பைக்கு சென்னை தேவலாம்... இந்த பட்டியலில் நம்ம தலைநகருக்கு கிடைத்த இடம் இதுதான்...

தற்போதைய நிலையில் மும்பை நகர சாலைகளில் ஒவ்வொரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கும் 510 கார்கள் உள்ளன. இது இந்தியாவின் தலைநகர் டெல்லியை காட்டிலும் 5 மடங்கு அதிகம். டெல்லி சாலைகள் ஒவ்வொரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கும் 108 கார்களை பெற்றுள்ளன. சாலை வசதிகள் சரிவர இல்லாத காரணத்தால்தான் மும்பையில் கார்கள் அடர்த்தி மிக அதிகமாக உள்ளது.

மும்பைக்கு சென்னை தேவலாம்... இந்த பட்டியலில் நம்ம தலைநகருக்கு கிடைத்த இடம் இதுதான்...

மும்பையில் 2,000 கிலோ மீட்டர் சாலைகள் மட்டுமே உள்ளன. ஆனால் டெல்லியில் 28,000 கிலோ மீட்டர் சாலைகள் இருக்கின்றன. இதனிடையே இந்த பட்டியலில் மும்பையை தொடர்ந்து 2வது இடம் பிடித்திருப்பது புனே. புனே நகரில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 359 கார்கள் உள்ளன. 3வது இடம் கொல்கத்தாவிற்கு. அங்கு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் இருக்கும் கார்களின் எண்ணிக்கை 319.

மும்பைக்கு சென்னை தேவலாம்... இந்த பட்டியலில் நம்ம தலைநகருக்கு கிடைத்த இடம் இதுதான்...

இந்தியாவில் கார்களின் அடர்த்தி அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலில், ஒவ்வொரு கிலோ மீட்டர் பரப்பளவிற்கும் 297 கார்களுடன் தமிழக தலைநகர் சென்னை 4வது இடத்தில் உள்ளது. மிக வேகமாக வளர்ந்து வரும் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் கார்களின் அடர்த்தி குறைவாக இருப்பது ஆச்சரியம்தான். அங்கு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் இருக்கும் கார்களின் எண்ணிக்கை வெறும் 149 மட்டுமே.

மும்பைக்கு சென்னை தேவலாம்... இந்த பட்டியலில் நம்ம தலைநகருக்கு கிடைத்த இடம் இதுதான்...

இதில் மும்பை நகருக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை என்னவென்றால், அங்கு கார்களின் அடர்த்தி வெகு வேகமாக அதிகரித்து வருவதுதான். மும்பை நகரில் கடந்த 2016ம் ஆண்டு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் இருக்கும் கார்களின் எண்ணிக்கை 430 ஆக இருந்தது. ஆனால் சுமார் இரண்டே ஆண்டுகளில் அது 510 ஆக அதிகரித்து விட்டது. மும்பை நகர சாலைகளை 49 சதவீதம் ஆக்கிரமித்து கொள்வது கார்கள்தான்.

மும்பைக்கு சென்னை தேவலாம்... இந்த பட்டியலில் நம்ம தலைநகருக்கு கிடைத்த இடம் இதுதான்...

கடந்த சில ஆண்டுகளில் மும்பையின் கிழக்கு பகுதி புறநகர்களில் 1.7 லட்சம் கார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஆர்டிஓ ரிப்போர்ட்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் மும்பையின் மேற்கு புறநகர்களில் கடந்த சில ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் மேல். இன்னும் சொல்லப்போனால் மும்பையில் பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்களிடம் சொந்த கார் உள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 29, 2019, 8:30 [IST]
English summary
Oh Woes Oh Woes Can Traffic Be—Mumbai's New Population Is Killing The City. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+