பெருக்கெடுத்த வெள்ளம்: ஒன்று திரண்டு மேம்பாலத்தில் காரை நிறுத்திய மக்கள்: எதற்கு தெரியுமா...?

பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்திற்காக வாகன உரிமையாளர்கள் தங்களது கார்களை மேம்பாலத்தின்மீது அணி வகுத்து நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

பெருக்கெடுத்த வெள்ளம்: ஒன்று திரண்டு மேம்பாலத்தில் காரை நிறுத்திய மக்கள்: எதற்கு தெரியுமா...?

இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் வெயில் தற்போது சுட்டெரித்து வந்தாலும், ஒரு சில மாநிலங்களில் பேய் மழை பொழிந்து வருகின்றது.

அந்தவகையில், அண்மைக் காலங்களாக மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரத்தை பெரு வெள்ளம் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றது.

பெருக்கெடுத்த வெள்ளம்: ஒன்று திரண்டு மேம்பாலத்தில் காரை நிறுத்திய மக்கள்: எதற்கு தெரியுமா...?

மும்பையில் கடந்த ஜுன், ஜுலை மாதத்தில் பெய்த பருவ மழையின் காரணமாக, அந்நகரத்திற்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகள் நிரம்பின. அதேசமயம், அப்போது பொழிந்த அடை மழையின் காரணமாக அந்நகரம் முழுவதும் பெருவெள்ளத்தில் சிக்கி தவித்தது.

பெருக்கெடுத்த வெள்ளம்: ஒன்று திரண்டு மேம்பாலத்தில் காரை நிறுத்திய மக்கள்: எதற்கு தெரியுமா...?

பின்னர், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மழையில்லாத காரணத்தால், அங்கு மீண்டும் இயல்புநிலை மாறியது. இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக மீண்டும் மழை அங்கு பொழிய ஆரம்பித்துள்ளது. இதனால், அந்நகரம் மீண்டும் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றது.

பெருக்கெடுத்த வெள்ளம்: ஒன்று திரண்டு மேம்பாலத்தில் காரை நிறுத்திய மக்கள்: எதற்கு தெரியுமா...?

இந்நிலையில், நேற்றிரவு பெய்த அடை மழை விடிய, விடிய விடாமல் கொட்டி தீர்த்தது. இதனால், மும்பையின் தாழ்வான நகரம் மட்டுமின்றி, சில மேடான பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்துவிட்டது. இதனால், அந்நகர மக்களின் இயல்பு வாழ்க்கை படுமோசாமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பெருக்கெடுத்த வெள்ளம்: ஒன்று திரண்டு மேம்பாலத்தில் காரை நிறுத்திய மக்கள்: எதற்கு தெரியுமா...?

இதில், மும்பையின் மிக முக்கியமான போக்குவரத்தாக இருக்கும் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகள் மற்றும் விமான சேவை உள்ளிட்டவையும் முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த 4ம் தேதி மட்டும் 25 செமீட்டருக்கும் அதிகமான மழை பொழிந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

பெருக்கெடுத்த வெள்ளம்: ஒன்று திரண்டு மேம்பாலத்தில் காரை நிறுத்திய மக்கள்: எதற்கு தெரியுமா...?

இதனால், மும்பை நகர மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான மக்களின் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதிலும், குறிப்பாக தாழ்வான பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

ஆகையால், இதிலிருந்து தப்பிக்கும் விதமாக, ஒரு சிலர் தங்களது வாகனங்களை உயரமான பகுதிகளில் நிறுத்தி பாதுகாப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெருக்கெடுத்த வெள்ளம்: ஒன்று திரண்டு மேம்பாலத்தில் காரை நிறுத்திய மக்கள்: எதற்கு தெரியுமா...?

அந்தவகையில், மும்பை வாசிகள் தங்களது கார்களை பாதுகாப்பதற்காக, தனித்துவமாக மேம்பாலத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இதுகுறித்த தகவலை இந்தியா டுடே தளம் வெளியிட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் வாகனங்களை நிறுத்தி வீணடிப்பதைத் தவிர்ப்பதற்காக இத்தகைய நடவடிக்கையில் அவர்கள் களமிறங்கியுள்ளனர்.

இதை முதலில் யார் ஆரம்பித்து வைத்தார் என்ற தகவல் இல்லை. இருப்பினும், பாலத்தின்மீது பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவை கீழே காணலாம்.

இச்சம்பவம், மும்பையின் சேண்டா க்ரூஸ்-செம்பூர் சாலை மேம்பாலத்தில் நிகழ்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகனங்களைப் பாதுகாக்கும் விதமாக மும்பை நகரவாசிகள் செய்திருக்கும் இச்செயல் பலே ஐடியாவாக இருக்கின்றது. இருப்பினும், இச்செயல் மற்றவர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வரை நல்லதே.

பெருக்கெடுத்த வெள்ளம்: ஒன்று திரண்டு மேம்பாலத்தில் காரை நிறுத்திய மக்கள்: எதற்கு தெரியுமா...?

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சில பகுதிகளில் பொழியும் அடை மழையால், சாலைகள் மற்றும் அதைச்சார்ந்து இயங்கும் வாகனங்கள் பேரழிவைச் சந்திக்கின்றன. ஆகையால், இதில் தப்பிக்க கேரளா போன்ற சில மாநிலங்களில் உயரமான மேடைப் போன்று அமைப்பினை உருவாக்கி அதில் வாகனத்தை நிறுத்தி வருகின்றனர்.

பெருக்கெடுத்த வெள்ளம்: ஒன்று திரண்டு மேம்பாலத்தில் காரை நிறுத்திய மக்கள்: எதற்கு தெரியுமா...?

வாகனங்கள் வெள்ள நீரில் மூழ்குவதால், கடுமையான சேதமடைவதுடன் பெரும் பொருட் செலவை ஏற்படுத்துகின்றன. ஆகையால், வாகன உரிமையாளர்கள் அவர்களின் வாகனங்களை வெள்ள நீரில் நிறுத்துவதையும், இயக்குவதையும் தவிர்க்க விரும்புகின்றனர்.

பெருக்கெடுத்த வெள்ளம்: ஒன்று திரண்டு மேம்பாலத்தில் காரை நிறுத்திய மக்கள்: எதற்கு தெரியுமா...?

அந்தவகையிலேயே, மும்பை வாசிகளும் தங்களது வாகனங்களை பாலத்தின்மீது நிறுத்தி வைத்துள்ளனர். இதற்காக பாலத்தின் வலது பகுதியை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆகையால், மற்ற வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு ஏற்ப வழி வகைச் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், இது போக்குவரத்து விதிமீறலாக இருந்தாலும், அப்பகுதி போலீஸார் வாகன உரிமையாளர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகின்றது.

பெருக்கெடுத்த வெள்ளம்: ஒன்று திரண்டு மேம்பாலத்தில் காரை நிறுத்திய மக்கள்: எதற்கு தெரியுமா...?

வெள்ளத்தின் போது வாகனத்தை நிறுத்த ஒரு உயர்ந்த இடத்தைப் பயன்படுத்துவது எப்போதும் நல்லது. அவ்வாறு செய்வது சில சமயங்களில் சாத்தியமில்லை என்றாலும், அது வாகனத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாகும். இருப்பினும், மேம்பாலங்கள் கூட வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என்பதை அறிய வேண்டும். இதற்கு உதாரணமாக சென்னை பெருவெள்ளம் இருக்கின்றது.

பெருக்கெடுத்த வெள்ளம்: ஒன்று திரண்டு மேம்பாலத்தில் காரை நிறுத்திய மக்கள்: எதற்கு தெரியுமா...?

மேலும், கடந்த ஆண்டு பொழிந்த அதிக மழையின் போது, ​​டெல்லி-மீரட் அதிவேக நெடுஞ்சாலையில் புதிதாக திறக்கப்பட்ட உயரமான சாலை, குறைந்தது 3 அடி நீர் வெள்ளத்தில் மூழ்கியது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai Residents Park Cars On Flyover To Escape From Flood. Read In Tamil.
Story first published: Friday, September 6, 2019, 11:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X