கடும் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்: அபராதம் இத்தனை லட்சமா... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

ஒட்டு மொத்த வாகன ஓட்டியையும் அதிர்ச்சியில் உறைய வைக்கின்ற அளவில் லாரி டிரைவருக்கு போலீஸார் அபராதத்திற்கான செல்லாணை வழங்கியுள்ளனர். எவ்வளவு அபராதமாக வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் தெரிந்தால், இனி வாழ்க்கையில் நிச்சயம் விதிமீறலிலேயே ஈடுபட மாட்டீங்க... வாருங்கள் முழுமையான தகவலை கீழே காணலாம்...

கடும் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்: அபராதம் இத்தனை லட்சமா... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

கடந்த வாரம் லாரி உரிமையாளர் ஒருவருக்கு விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி போலீஸார் அபராதத்திற்கான செல்லாணை வழங்கியிருந்தனர். அவருக்கு வழங்கப்பட்ட தொகையானது நாட்டிலேயே இதுவரை யாரும் பெறாத உச்சபட்ச தொகையாக கருதப்பட்டது.

ஆகையால், அதிகபட்ச அபராதத்தைப் பெற்ற முதல் வாகன ஓட்டி என ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராம் கிஷான் பார்க்கப்பட்டார்.

கடும் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்: அபராதம் இத்தனை லட்சமா... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

இதுபோன்று பார்ப்பதற்கு அவருக்கு எவ்வளவு தொகை அபராதமாக விதிக்கப்பட்டிருந்தது என்று தானே கேட்கிறீர்கள்... அவருக்கு அதுவரை எந்தவொரு வாகன ஓட்டிக்கும் வழங்கப்படாத அளவிலான, ரூ. 2 லட்சத்து 500-க்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டிருந்தது. ஆகையால், இவர் ஓவர் நைட்டில் ஒபாமாவைப் போன்று பிரபலமாகினார்.

கடும் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்: அபராதம் இத்தனை லட்சமா... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

இந்த லாரி பல்வேறு விதிமுறைகளில் ஈடுபட்டதன் காரணத்தால் இவருக்கு இத்தகைய அபராதத் தொகையை வழங்கியதாக டெல்லி நகர போலீஸார் தெரிவித்திருந்தனர். அந்தவகையில், போலீஸார் ராம் கிஷான் ஈடுபட்டதாக கூறிய குற்றச்சாட்டுகளை கீழே காணலாம்.

கடும் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்: அபராதம் இத்தனை லட்சமா... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

அதிகபட்ச லோடை ஏற்றிவந்த குற்றத்திற்காக ரூ. 20 ஆயிரமும், அனுமதிக்கப்பட்டதை விட 18 டன் எடையுள்ள கூடுதல் பொருட்களை ஏற்றி வந்ததற்காக ரூ. 36 ஆயிரமும் அந்த லாரிக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு டன்னிற்கும் ரூ. 2 ஆயிரம் என்ற அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடும் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்: அபராதம் இத்தனை லட்சமா... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

இத்துடன், ஓட்டுநர் உரிமம் இல்லாதது, பியூசி சான்று இல்லாதது, பெர்மிட் முறைகேடு, காப்பீடு இல்லாதது மற்றும் சீட் பெல்ட் அணியவில்லை உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக கூறி லாரியின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளருக்கு அபராத செல்லாண் வழங்கப்பட்டிருந்தது.

கடும் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்: அபராதம் இத்தனை லட்சமா... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

இந்நிலையில், இந்த அதிகபட்ச அபராதத்தை தூக்கியெறியும் வகையில், தற்போது புதிய சம்பவம் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அந்தவகையில், நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த டிரக்கிற்கு ரூ. 6.53 லட்சத்திற்கான அபராதச் செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.

MOST READ: போலீஸின் அடாவடி தனத்தால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டி: குமுறும் இளைஞர்... அதிர்ச்சி தகவல்!

கடும் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்: அபராதம் இத்தனை லட்சமா... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

இந்த அபராதமானது செப்டம்பர் 1ம் தேதிக்கு முன்னரே வழங்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், புதிய மோட்டார் வாகன சட்டம் இதற்கு பின்னர்தான் நாடு முழுவதும் அமலுக்கு கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், ஆகஸ்ட் 10ம் தேதியே வழங்கப்பட்டுள்ள இந்த உச்சபட்ச அபராதம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கான காரணம் முழுமையாக தெரிய வரவில்லை.

MOST READ: வாவ்... மக்களின் நலனுக்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கும் ஹரியானா காவல்துறை...

கடும் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்: அபராதம் இத்தனை லட்சமா... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள்தான் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், என்எல் 08 டி 7079 என்ற பதிவெண்ணில் வந்த லாரியை போலீஸார் மடக்கி ஆய்வு மேற்கொண்டபோது பல்வேறு முறைகேட்டில், அந்த லாரி ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

MOST READ: மற்றொருவரின் பெயரில் எலெக்ட்ரிக் காரை வாங்கி பயன்படுத்தும் அம்பானி... உண்மை வெளிவந்ததால் அதிர்ச்சி!

கடும் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்: அபராதம் இத்தனை லட்சமா... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

இதையடுத்தே, போலீஸார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இது முன்னதாக விதிக்கப்பட்டிருந்த உச்சபட்ச அபரதாத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக காணப்படுகின்றது. ஆகையால், தற்போதைய தலைப்பு செய்தியாக இந்த சம்பவம் பார்க்கப்படுகின்றது.

கடும் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்: அபராதம் இத்தனை லட்சமா... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

மேலும், அபராத் தொகையைப் பார்க்கும்போது, போக்குவரத்து விதிகளில் உள்ள அனைத்தையும் மீறியிருக்கும் என்று தெரியவருகின்றது. இதற்காகவே போலீஸார் இத்தகைய அளவிலான அபராதத்தை வழங்கியுள்ளனர். இருப்பினும் ரொம்ப டூ மச் என்றே நம் அனைவரின் மனதிலும் தோன்றுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Nagaland Truck Driver Gets Highest For MVA Violation. Read In Tamil.
Story first published: Sunday, September 15, 2019, 8:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X