2,000 கிலோ எடையுள்ள மஹிந்திரா பொலிரோ காரை அசால்டாக தூக்கிய பெண் பட்டாளியன்கள்... வீடியோ!

பள்ளத்தில் சிக்கிய 2 ஆயிரம் கிலோ எடைக் கொண்ட மஹிந்திரா பொலிரோ காரை பெண் பட்டாளியன்கள் மிக அசால்டாக வெளியேற்றும் காட்சி வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

2,000 கிலோ எடையுள்ள மஹிந்திரா பொலிரோ காரை அசால்டாக தூக்கிய பெண் வீராங்கனைகள்... வீடியோ!!!

பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று கூறுவதுண்டு. எப்படி, நீரின்றி அமையாது உலகு என்று கூறுகின்றோமே, அதேபோல பெண்களின்றி அமையாது, ஆண்களின் சமூகம்.

முந்தைய கால கட்டத்தில் பெண்களை அடக்கி ஆண்டு வந்த ஆண்கள் சமுதாயம், பல போராளிகள் முன்னெடுத்த முயற்சிகளின் காரணமாக, அவர்கள் பல துறைகளில் தங்களின் திறனை வெளிக்கொணர்ந்து சாதித்து வருகின்றனர்.

2,000 கிலோ எடையுள்ள மஹிந்திரா பொலிரோ காரை அசால்டாக தூக்கிய பெண் வீராங்கனைகள்... வீடியோ!!!

மேலும், அவர்கள் ஆண்களுக்கு எந்த விதித்திலும் சலைத்தவர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்ற வகையில், பல்வேறு வீர தீர செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகையால், பெண்களின் பங்களிப்பு நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் முக்கியத்துவம் கொண்டதாக மாறி வருகின்றது.

2,000 கிலோ எடையுள்ள மஹிந்திரா பொலிரோ காரை அசால்டாக தூக்கிய பெண் வீராங்கனைகள்... வீடியோ!!!

அந்தவகையில், நாட்டின் பாதுகாப்புத்துறையாக செயல்பட்டு வரும் இராணுவத்திலும், பெண்களின் பங்கு மிக சிறப்பானதாக இருக்கின்றது. இதுமட்டுமின்றி, கூடுதல் சில முக்கியமான பொருப்புகளிலும் அவர்கள் மிக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

2,000 கிலோ எடையுள்ள மஹிந்திரா பொலிரோ காரை அசால்டாக தூக்கிய பெண் வீராங்கனைகள்... வீடியோ!!!

இந்நிலையில், ஒரு காட்டு யானையை பெண் சிங்கங்களின் கூட்டம் வேட்டையாடுவதைப்போல், பள்ளத்தில் சிக்கிய 2 ஆயிரம் கிலோ (2 டன்) எடைக் கொண்ட மஹிந்திரா பொலிரோ காரை, பெண் பட்டாளியன்கள் வெளியேற்றும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

2,000 கிலோ எடையுள்ள மஹிந்திரா பொலிரோ காரை அசால்டாக தூக்கிய பெண் வீராங்கனைகள்... வீடியோ!!!

இந்த வீடியோவை பார்க்கையில் நமக்கே புல்லரிக்கும் வகையில் இருக்கின்றது. சுமார் பத்திற்கும் மேற்பட்ட பெண்கள், தங்களை விட உருவத்திலும், எடையிலும் பல மடங்கு அதிகம் கொண்ட காரை வெளியேற்றுகின்றனர்.

அப்போது, அங்கு மேலும் சில பெண் பட்டாளியன்கள் இருந்தனர். அவர்கள், காரை வெளியேற்றிய பெண்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் குறல் எழுப்பி கோஷமிட்டனர்.

2,000 கிலோ எடையுள்ள மஹிந்திரா பொலிரோ காரை அசால்டாக தூக்கிய பெண் வீராங்கனைகள்... வீடியோ!!!

இந்த சம்பவத்தை அரங்கேற்றியவர்கள் நாகலாந்தைச் சேர்ந்த பெண் பட்டாளியன்கள் குழு என கூறப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் இயக்குநர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில், அந்த வீடியோவையும், பெண் பட்டாளியன்களை வாழ்த்தியும் பதிவிட்டுள்ளார்.

2,000 கிலோ எடையுள்ள மஹிந்திரா பொலிரோ காரை அசால்டாக தூக்கிய பெண் வீராங்கனைகள்... வீடியோ!!!

அவர் அதில் கூறியதாவது, "பொலிரோ கார் ஏன் பள்ளத்தில் சிக்கியுள்ளது என்பது எனக்கு தெரியவில்லை. இருப்பினும், இந்த காரை சில பெண்கள் மட்டும் வெளியேற்றுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்" என்றார்.

இதுமட்டுமின்றி, நாகாலாந்து பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான முஹோன்லுமோ கிகோன் (Mmhonlumo Kikon) என்பவரும், ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட டுவிட்டரை, மீண்டும் டுவீட் செய்துள்ளார். மேலும், அதில், ஆனந்த் மஹிந்திரா, ஸ்மிருதி ராணி, அமித்ஷா, கிரண் ரிஜ்ஜு மற்றும் மனோஜ் நாண்டி உள்ளிட்டோரை டேக் செய்துள்ளார்.

2,000 கிலோ எடையுள்ள மஹிந்திரா பொலிரோ காரை அசால்டாக தூக்கிய பெண் வீராங்கனைகள்... வீடியோ!!!

தற்போது, இந்த வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகின்றது. பொதுவாக இதுபோன்று பள்ளத்தில் சிக்கிய பொலிரோ கார்களை வேண்டுமென்றால், பளு தூக்கி எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை, சில நேரங்களில் பொலிரோவை வெளியேற்றுவதில் பல சிக்கலைக் காணும்.

2,000 கிலோ எடையுள்ள மஹிந்திரா பொலிரோ காரை அசால்டாக தூக்கிய பெண் வீராங்கனைகள்... வீடியோ!!!

ஆனால், இங்கு பெரிய அளவில் சிரமம் படாமல் பெண்கள் கூட்டம் 2 ஆயிரம் கிலோ எடைக் கொண்ட பொலிரோவை மிக குறுகிய நேரத்தில் வெளியேற்றுகின்றனர்.

2,000 கிலோ எடையுள்ள மஹிந்திரா பொலிரோ காரை அசால்டாக தூக்கிய பெண் வீராங்கனைகள்... வீடியோ!!!

இந்த துணிச்சல் மிகுந்த பெண் பட்டாளியன்களால், ராணுவத்துறைக்கு மேலும் சிறப்பு சேர்ந்துள்ளது. இதேபோன்று, பள்ளத்தில் சிக்கிய வாகனங்களை ராணுவத்தினர் வெளியேற்றுவது முதல் முறையல்ல. முன்னதாககூட, சில மாதங்களுக்கு முன்பு பள்ளத்தில் சிக்கிய மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்ப்பியோ காரை ராணுவ ஜவான்கள் வெளியேற்றிய காட்சி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

2,000 கிலோ எடையுள்ள மஹிந்திரா பொலிரோ காரை அசால்டாக தூக்கிய பெண் வீராங்கனைகள்... வீடியோ!!!

மஹிந்திரா நிறுவனத்தின் இந்த பொலிரோ, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் வாகனங்களில் ஒன்றாக இருக்கின்றது. இது, 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் அல்லது 2.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இதன் விலை ரூ. 7.49 லட்சம் மற்றும் ரூ. 9.42 லட்சமாக உள்ளது. இது, எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

Article Published On: Thursday, August 29, 2019, 11:47 [IST]
English summary
Women Battalion Lifts Stucked Mahindra Bolero. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+