அவசர அவசரமாக விலையுயர்ந்த ஜீப் காம்பஸ் காரை வாங்கிய கடற்படை தளபதி: எதற்காக தெரிஞ்சா கோபப்படுவீர்கள்!

இந்திய கடற்படை தளபதி சுனில் லன்பா, மிக அவசர அவசரமாக, ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் காரை வாங்கியுள்ளார். இதற்கான காரணத்தை இந்த பதிவில் விரிவாக காணலாம்.

அவசர அவசரமாக விலையுயர்ந்த ஜீப் காம்பஸ் காரை வாங்கிய கடற்படை தளபதி: எதற்காக தெரிஞ்சா கோபப்படுவீர்கள்...?

ஆயுதமேந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானிய கொள்கையில் இந்திய அரசு சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இது வருகின்ற ஜீன் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அதாவது, நாளை மறுநாள் முதல் அரசு கேன்டீனில் புதிய மானிய கொள்கை அமலாக இருக்கின்றது.

அவசர அவசரமாக விலையுயர்ந்த ஜீப் காம்பஸ் காரை வாங்கிய கடற்படை தளபதி: எதற்காக தெரிஞ்சா கோபப்படுவீர்கள்...?

இதனால், வீரர்களுக்கென தனியாக இயங்கிவரும் அரசு கேன்டீனில் விற்பனையாகும் சில பொருட்களுக்கான மானியம் குறைய இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோன்று, ரூ. 12 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனையாகும் கார்களுக்கு மானியம் வழங்குவது ரத்து செய்யப்பட உள்ளது. இவையனைத்தும், நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்த இருக்கின்றது.

அவசர அவசரமாக விலையுயர்ந்த ஜீப் காம்பஸ் காரை வாங்கிய கடற்படை தளபதி: எதற்காக தெரிஞ்சா கோபப்படுவீர்கள்...?

இந்நிலையில், கடற்படை தலைமை அட்மிரல் சுனில் லன்பா, ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் காரை, அரசு கேன்டீனில் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை ஆங்கில ஊடகமான என்டிடிவி வெளியிட்டுள்ளது.

அவசர அவசரமாக விலையுயர்ந்த ஜீப் காம்பஸ் காரை வாங்கிய கடற்படை தளபதி: எதற்காக தெரிஞ்சா கோபப்படுவீர்கள்...?

ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் மாடலின் ஆரம்பநிலை வேரியண்ட், ஆன் ரோடில் ரூ. 15 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகின்றது. அதேபோன்று, அதன் ஹை என்ட் வேரியண்ட் காம்பஸ் ரூ. 20 லட்சத்திற்கு விற்பனையாகி வருகின்றது. இவை காம்பஸின் நிறுவனத்தின் டீலர்கள்மூலம் வாங்கும்போது விதிக்கப்படும் விலையாகும்.

அவசர அவசரமாக விலையுயர்ந்த ஜீப் காம்பஸ் காரை வாங்கிய கடற்படை தளபதி: எதற்காக தெரிஞ்சா கோபப்படுவீர்கள்...?

இதை அரசின் கேன்டீனில் வாங்கும்போது, காரின் விலையில் கணிசமான தொகையும், ஜிஎஸ்டியில் இருந்து 50 சதவீதமும் விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால், காரின் விலை மிகப்பெரிய அளவில் தள்ளுபடியைப் பெறுகின்றது. ஆகையால், இராணுவ வீரர்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு நிலவி வருகிறது.

அவசர அவசரமாக விலையுயர்ந்த ஜீப் காம்பஸ் காரை வாங்கிய கடற்படை தளபதி: எதற்காக தெரிஞ்சா கோபப்படுவீர்கள்...?

மேலும், இதனாலயே வீரர்கள் பலர் அவர்களுக்கு தேவையான வாகனங்கள் மற்றும் பொருட்களை அரசு கேன்டீனில் வாங்குவதை வழக்கமாக வைத்து வருகின்றனர்.

அந்தவகையில்தான், இந்திய கடற்படையின் தளபதியும், ஜீப் காம்பஸ் காரை அரசு கேன்டீனில் வாங்கியுள்ளார். ஆனால், அரசின் புதிய மானிய கொள்கை இன்னும் ஓரிரு தினங்களில் அமலுக்குள்ளாக உள்ள சூழ்நிலையில், காலம் தாழ்த்தாமல் அவர் இந்த செயலை மேற்கொண்டுள்ளார்.

MOST READ: மாருதி சுஸுகி ஏஜிஎஸ்: அனைத்து இந்தியர்களுக்கும் ஓர் புரட்சிகரமான ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்

அவசர அவசரமாக விலையுயர்ந்த ஜீப் காம்பஸ் காரை வாங்கிய கடற்படை தளபதி: எதற்காக தெரிஞ்சா கோபப்படுவீர்கள்...?

வருகின்ற ஒன்றாம் தேதி அமலுக்கு வரவிருக்கும் விதிகுறித்து, கடந்த மே மாதம் 24ம் தேதி பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், அதிகாரிகள் மற்றும் மற்ற ரேங்க் உடையவர்கள் மட்டுமே கார்களை எட்டு வருடங்களுக்கு ஒரு முறை வாங்க முடியும் என தெரிவித்திருந்தது.

அவசர அவசரமாக விலையுயர்ந்த ஜீப் காம்பஸ் காரை வாங்கிய கடற்படை தளபதி: எதற்காக தெரிஞ்சா கோபப்படுவீர்கள்...?

மேலும், சீனியர் ஆஃபிசர்கள் 2,500 சிசி திறன் கொண்ட கார்கள் வரையிலும், அவர்களுக்கு குறைவான ரேங்க் உடையவர்கள் 1,400 சிசி திறனுடைய கார்களை வரையிலும் வாங்கிக் கொள்ளலாம் என அதில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று, அவை ரூ. 5 லட்சத்திற்கு அதிகமாகவும் இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர அவசரமாக விலையுயர்ந்த ஜீப் காம்பஸ் காரை வாங்கிய கடற்படை தளபதி: எதற்காக தெரிஞ்சா கோபப்படுவீர்கள்...?

கடந்த வருடத்தில் மட்டும் அரசின் கேன்டீன் மூலம் ரூ. 6 ஆயிரம் கோடி மதிப்பிலான வாகனங்கள் விற்பனைச் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அரசின் பட்ஜெட்டில் சில சிக்கல்கள் ஏற்பட்டது. ஆகையால், இந்த செலவை குறைக்கும் விதமாக இந்த மானிய கொள்கையில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பு கணிசமாக குறைய வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

அவசர அவசரமாக விலையுயர்ந்த ஜீப் காம்பஸ் காரை வாங்கிய கடற்படை தளபதி: எதற்காக தெரிஞ்சா கோபப்படுவீர்கள்...?

அரசு இதனை எதிர்காலத்தில் மீண்டும் பரீசிலினை செய்யும் என கூறப்படுகிறது. ஆகையால், தற்போது இருக்கும் கார் மதிப்பு சற்று அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் தற்போதைய இந்த திட்டத்தினால் இராணுவ வீரர்கள் கவலையில் ஆழ்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசர அவசரமாக விலையுயர்ந்த ஜீப் காம்பஸ் காரை வாங்கிய கடற்படை தளபதி: எதற்காக தெரிஞ்சா கோபப்படுவீர்கள்...?

ஜீப் காம்பஸ் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வேரியண்ட்களிலும் விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்த காருக்கு இந்தியச் சந்தையில் நல்ல வரவேற்பு நிலவி வருகிறது. பல முக்கிய புள்ளிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் இந்த காரைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், இந்த கார் ஆஃப் ரோடு பயண விரும்புகளின் விருப்பம் மிகுந்த காராக இருந்து வருகின்றது.

அவசர அவசரமாக விலையுயர்ந்த ஜீப் காம்பஸ் காரை வாங்கிய கடற்படை தளபதி: எதற்காக தெரிஞ்சா கோபப்படுவீர்கள்...?

ஜீப் காம்பஸ் காரின் பெட்ரோல் வேரியண்டில் 1.4 லிட்டர் டர்போசார்ஜட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 161 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கின்றது. மேலும், இது 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது ட்யூவல் க்ளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

அவசர அவசரமாக விலையுயர்ந்த ஜீப் காம்பஸ் காரை வாங்கிய கடற்படை தளபதி: எதற்காக தெரிஞ்சா கோபப்படுவீர்கள்...?

அதேபோன்று, டீசல் எஞ்ஜின் வேரியண்டில் 2.0 லிட்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்த வேரியண்டில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கின்றது.

அவசர அவசரமாக விலையுயர்ந்த ஜீப் காம்பஸ் காரை வாங்கிய கடற்படை தளபதி: எதற்காக தெரிஞ்சா கோபப்படுவீர்கள்...?

ஜீப் நிறுவனம், கூடிய விரைவில் காம்பஸ் ட்ரெயிஸ்ஹாக் எஸ்யூவி மாடலை இந்தியாவில் களமிறக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது வருகின்ற ஜீலை மாதத்திற்குள் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இதற்கான புக்கிங் வருகின்ற ஜீன் மாதம் மத்தியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த மாடலில் முதல் முறையாக 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Navy Chief Buys Jeep Compass From Canteen. Read In Tamil.
Story first published: Thursday, May 30, 2019, 19:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X