நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...
விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்ற புதிய டாடா டிகோர் 2020 காரின் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. வெளியாகியுள்ள இந்த சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் இந்த காரின் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றங்களில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

டாடா டிகோரின் முன்பக்க டிசைன் விரைவில் வெளியாகவுள்ள அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்கில் உள்ளது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி விளக்குகளுடன் புதிய கூர்மையான ஹெட்லைட்ஸ், புதுமையாக வடிவமைக்கப்பட்ட முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்ஸ் மற்றும் வித்தியாசமான டிசைனில் ஃபாக் விளக்கு போன்றவையும் இந்த காரின் புதிய மாற்றங்களில் அடங்கும்.

பெட்ரோல் பவர்ட்ரெயினுடன் விற்பனையாகவுள்ள 2020 டாடா டிகோர் காரில் கொடுக்கப்பட்டு உள்ள குறைந்த ஆற்றல் திறன் கொண்ட டீசல் என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படவில்லை என நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதனால் 2020 டாடா டிகோர் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மட்டும் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. மூன்று சிலிண்டர் அமைப்புகளில் இந்த பெட்ரோல் 84 பிஎச்பி பவரையும் 114 என்எம் டார்க் திறனையும் தற்சமயம் விற்பனையாகி வரும் டாடா டிகோரில் காரில் வெளிப்படுத்தி வருகிறது.

பிஎஸ்6 தரத்திற்கு இந்த பெட்ரோல் என்ஜின் அப்டேட் செய்யப்பட்டாலும் இதே ஆற்றலையும் டார்க் திறனையும் தான் வெளிப்படுத்தும் என தெரிகிறது. தற்போதைய மாடலில் என்ஜினுடன் ஐந்து வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல் கியர்பாக்ஸ், ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

பெட்ரோல் என்ஜினை தவிர்த்து டாடா மோட்டார்ஸ் டிகோர் மாடலை எலக்ட்ரிக் இவி வேரியண்ட்டிலும் விற்பனை செய்யவுள்ளது. இந்த டிகோர் இவி கார் குறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

விரைவில் வெளியாகவுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உட்புறத்திலும் சில மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. அப்டேட் செய்யப்பட்ட இருக்கை துணிகளின் டிசைன், முழு திருப்தியான கேபினை உணர மிருதுவான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட கேபின் பாகங்கள் போன்றவை இந்த உட்புற மாற்றங்கள் ஆகும்.

எட்டு ஸ்பீக்கர்களுடன் இணைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே தொழிற்நுட்பங்களை கட்டுப்படுத்தும் 7 இன்ச் தொடுத்திரையுடன் கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும் இந்த 2020 டாடா டிகோர் காரில் தொடரவுள்ளது.

மேலும் 2020 டிகோர் காரில் அடுத்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் பாதசாரிகள் மீது மோதாமல் தடுக்கும் விதியும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றப்படி இந்த 2020 டிகோரில் முந்தைய மாடலில் இருந்த பாதுகாப்பு அம்சங்களான டிரைவர் மற்றும் சக பயணிகளுக்கான காற்று பைகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், பின்பக்க கண்ணாடி மற்றும் பார்க்கிங் சென்சார் போன்றவை அப்படியே தொடரவுள்ளன. 360 டிகிரி கேமிரா மட்டும் கூடுதல் அம்சமாக இடம் பெறலாம்.

பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிக்கு உட்பட்ட கார்களை தயாரிப்பது மட்டுமல்லாமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்வதிலும் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக இத்தகைய எலக்ட்ரிக் கார்களில் ஸிப்ட்ரான் என்கிற தொழிற்நுட்பத்தையும் அந்நிறுவனம் பயன்படுத்தவுள்ளது. இந்த ஸிப்ட்ரான் குறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

டாடா நிறுவனம் 2020ல் அறிமுகப்படுத்தவுள்ள டாடா டிகோர் காரின் புதிய பிஎஸ்6 மாடலை தனது வழக்க பாணியில் அப்டேட் செய்துள்ளது. இந்த காரின் டாப் வேரியண்ட்களுக்கு மட்டும் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ருமெண்ட் க்ளஸ்ட்டரை டாடா நிறுவனம் வழங்கியுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. எப்படியிருந்தாலும் டாடா டிகோர் 2020 பிஎஸ்6 மாடல் அதன் போட்டி மாடல்களுக்கு கடுமையான போட்டியினை அளிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








