புதிய தலைமுறை ஆடி க்யூ3 எஸ்யூவி இந்திய வருகை விபரம்!
புதிய தலைமுறை ஆடி க்யூ-3 எஸ்யூவியின் இந்திய அறிமுகம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய மாடலின் வருகை விபரம் மற்றும் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆடி நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான ஆரம்ப ரக எஸ்யூவி மாடல் க்யூ-3. சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டபோது, இந்த காரை புக்கிங் செய்வதற்கு போட்டா போட்டி நிலவியது. ஆரம்ப ரக சொகுசு எஸ்யூவி கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாகவும் இருந்து வருகிறது.

இந்த நிலையில், புதிய தலைமுறை க்யூ3 எஸ்யூவி காரை ஆடி கார் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. தற்போதைய மாடலைவிட மிக அட்டகாசமான ஸ்டைலிலும், தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், இந்த புதிய கார் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய ஆடி க்யூ3 கார் இந்தியாவில் வரும் 2020ம் ஆண்டு முதல் காலாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய ஆடி க்யூ3 எஸ்யூவி காரில் வசீகரமான முகப்பு க்ரில் அமைப்பு, நேர்த்தியான பம்பர், எல்இடி பார்களுடன் இணைந்த புதிய எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகளுடன் அட்டகாசமாக தோற்றமளிக்கிறது.

புதிய ஆடி க்யூ3 எஸ்யூவியின் உட்புறமும் மிக பிரிமீயமாகவும் புதிய வடிவமைப்பிற்கும் மாறி இருக்கிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், காரை செவ்வனே இயக்குவதற்கு ஓட்டுனருக்கான சிறப்பு தொழில்நுட்பங்களுடன் வருகிறது.

புதிய ஆடி க்யூ3 காரில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், பார்க் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம், சைடு அசிஸ்ட் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக, புதிய ஆடி க்யூ3 எஸ்யூவி கார் யூரோ என்சிஏபி அமைப்பின் க்ராஷ் டெஸ்ட்டில் 5க்கு 5 என்ற உயர் நட்சத்திர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது.

புதிய ஆடி க்யூ3 எஸ்யூவியில் 4 விதமான எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த புதிய மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 190 பிஎச்பி பவரையும், 340 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மற்றொரு பெட்ரோல் மாடல் 230 பிஎச்பிபவரையும், 350 டார்க் திறனையும் வழங்கும்.

இந்த காரின், டீசல் எஞ்சின் 150 பிஎச்பி பவரையும், 340 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கின்றன. இந்த எஞ்சின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
Source: Carwale


Click it and Unblock the Notifications








