புதிய மேக்கப்புடன் அசத்தும் ஆடி க்யூ-7 ஸ்பெஷல் எடிசன் மாடல்!

ஆடி க்யூ-7 சொகுசு எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய மேக்கப்புடன் அசத்தும் ஆடி க்யூ-7 ஸ்பெஷல் எடிசன் மாடல்!

பண்டிகை காலம் துவங்கி இருக்கும் நிலையில், கார் விற்பனையை ஊக்குவிக்கும் முயற்சிகளில் உற்பத்தி நிறுவனங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அதன்படி, பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, ஸ்பெஷல் எடிசன் மாடல்களை வெளியிட்டு வருகின்றன.

புதிய மேக்கப்புடன் அசத்தும் ஆடி க்யூ-7 ஸ்பெஷல் எடிசன் மாடல்!

அந்த வகையில், நாட்டின் முன்னணி சொகுசு கார் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஆடி, தனது க்யூ7 சொகுசு எஸ்யூவி காரின் லிமிடேட் எடிசன் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ஆடி க்யூ-7 பிளாக் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வந்துள்ளது.

புதிய மேக்கப்புடன் அசத்தும் ஆடி க்யூ-7 ஸ்பெஷல் எடிசன் மாடல்!

பெயருக்கு ஏற்றாற்போல் இந்த லிமிடேட் எடிசன் மாடலை தனித்துவப்படுத்தும் விதத்தில், பல்வேறு கவர்ச்சிகர அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முகப்பு க்ரில் அமைப்பு, ஏர் இன்டேக் அமைப்புகளில் விசேஷ கருப்பு வண்ண பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய மேக்கப்புடன் அசத்தும் ஆடி க்யூ-7 ஸ்பெஷல் எடிசன் மாடல்!

அதேபோன்று, பக்கவாட்டில் கருப்பு வண்ணத்திலான சைடு மிரர்கள், அலாய் வீல்கள், கிளாடிங் சட்டங்கள் என தனித்துவமான தோற்றத்தை அளித்துள்ளது. ஜன்னல்கள், ரூஃப் லைன், ரூஃப் ரெயில்கள், பின்புற டிஃபியூசர் என அனைத்துமே கருப்பு வண்ணத்தில் இடம்பெற்றுள்ளன.

புதிய மேக்கப்புடன் அசத்தும் ஆடி க்யூ-7 ஸ்பெஷல் எடிசன் மாடல்!

இத்துடன், ஆடி நிறுவனத்தின் #TogetherwithAudi என்ற பெயரில் சிறப்பு ஆஃபர்களையும் அறிவித்துள்ளது. அரசு அ்றிவித்துள்ள 30 சதவீத தேய்மான மதிப்பு திட்டத்தையும் இதனுடன் இணைத்து வழங்குவதாகவும், இந்த மாத இறுதி வரை இந்த சிறப்பு ஆஃபர்கள் அமலில் இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய மேக்கப்புடன் அசத்தும் ஆடி க்யூ-7 ஸ்பெஷல் எடிசன் மாடல்!

ரூ.82.15 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஆடி க்யூ-7 பிளாக் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மொத்தமாக 100 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதும் குறிப்பிடப்பத்தக்கது.

புதிய மேக்கப்புடன் அசத்தும் ஆடி க்யூ-7 ஸ்பெஷல் எடிசன் மாடல்!

ஆடி க்யூ-7 எஸ்யூவிக்கு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த பண்டிகை காலத்தில் சொகுசு எஸ்யூவி கார் வாங்க இருப்போருக்கு இந்த புதிய ஆடி க்யூ-7 பிளாக் எடிசன் மாடல் தனித்துவமான தேர்வாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 11, 2019, 12:03 [IST]
English summary
Audi has launched the new limited edition Audi Q7 Black Edition in India ahead of festive season.
மேலும்... #ஆடி #audi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+