இந்த காரில் பயணித்தால் யமனாக இருந்தாலும் உங்களை கேட்டுதான் தொட முடியும்: டாப் ரேட்டிங் கார்!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 3 செரீஸ் 320டி மாடல் கார் மோதல் பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்த காரில் பயணித்தால் யமனாக இருந்தாலும் உங்களை கேட்டுதான் தொட முடியும்: அசத்தல் பாதுகாப்பு அம்சங்களுடைய கார்...

பயணம் என்பது நமது வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. இதனை மேற்கொள்ளும் ஒவ்வொருவரும், அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்ற ஒற்றைக் கருத்தை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படுகின்றனர்.

அத்தகையோருக்கான தகவலைதான் இந்த பதிவில் நாம் காணவிருக்கின்றோம்.

இந்த காரில் பயணித்தால் யமனாக இருந்தாலும் உங்களை கேட்டுதான் தொட முடியும்: அசத்தல் பாதுகாப்பு அம்சங்களுடைய கார்...

புதிதாக சந்தையில் விற்பனைக்கு வரும் கார்களை என்சிஏபி (European New Car Assessment Program) என்ற அமைப்பு மதிப்பீடு செய்து அதற்கான சான்றினை வழங்கினை வருகின்றது.

இந்த நிறுவனம் செய்யும் மதிப்பீடானது காரின் ஒட்டுமொத்த தரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். அந்தவகையில், காரில் பயணிப்பவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் காரின் தரம்குறித்த தகவல்களை மோதல் பரிசோதனையின்மூலம் அது வெளிப்படுத்தும்.

இந்த காரில் பயணித்தால் யமனாக இருந்தாலும் உங்களை கேட்டுதான் தொட முடியும்: அசத்தல் பாதுகாப்பு அம்சங்களுடைய கார்...

அத்தகைய சோதனையை அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 3 செரீஸ் மாடல் காரில் அது மேற்கொண்டது.

இந்த சோதனையில் அந்த கார் ஐந்து நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இந்த மதிப்பானது, நீங்கள் காரில் சென்றுக் கொண்டிருக்கும்போது, அது பயங்கர விபத்தைச் சந்தித்தாலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதற்கான பொருள் ஆகும்.

இந்த காரில் பயணித்தால் யமனாக இருந்தாலும் உங்களை கேட்டுதான் தொட முடியும்: அசத்தல் பாதுகாப்பு அம்சங்களுடைய கார்...

இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட அன்றைய தினத்தில், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 3 செரீஸ் கார் மட்டுமின்றி பிஎம்டபிள்யூ செரீஸ் 1, ஜீப் செரோக்கி மற்றும் பிஜியோட் 208 ஆகிய வாகனங்களும் மோதல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த காரில் பயணித்தால் யமனாக இருந்தாலும் உங்களை கேட்டுதான் தொட முடியும்: அசத்தல் பாதுகாப்பு அம்சங்களுடைய கார்...

அதில், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இரு கார்களும் 5 ஸ்டார் ரேட்டிங்கையேப் பெற்றிருக்கின்றன. ஆனால், ஜீப் செரோக்கி மற்றும் பிஜியோட் 208 ஆகிய இரு வாகனங்களும் 4 ஸ்டார்களை மட்டுமே பெற்றுள்ளது.

இந்த காரில் பயணித்தால் யமனாக இருந்தாலும் உங்களை கேட்டுதான் தொட முடியும்: அசத்தல் பாதுகாப்பு அம்சங்களுடைய கார்...

இதில், 5 நட்சத்திரங்களைப் பெற்றிருக்கும் பிஎம்டபிள்யூ 3 செரீஸ் கார், சொகுசு வசதிகள் அடங்கிய செடான் ரக காராகும். மேலும், இடது பக்க டிரைவிங் வசதியைக் கொண்ட மாடலாக உள்ளது. இதை வைத்துப் பார்க்கையில் இந்த கார் மேற்கத்திய நாடுகளுக்கான தயாரிப்பு என்பது உறுதியாகியுள்ளது.

பொதுவாக, என்சிஏபி அமைப்பு மோதல் சோதனையை செய்யும்போது பெரியவர்கள், சிறியவர்கள், பாதிக்கப்படக்கூடிய சாலை பயனர்கள் மற்றும் பாதுகாப்பு உதவி இவையனைத்தின்கீழ்தான் பரிசோதனை மேற்கொள்ளுப்படுகின்றது.

இந்த காரில் பயணித்தால் யமனாக இருந்தாலும் உங்களை கேட்டுதான் தொட முடியும்: அசத்தல் பாதுகாப்பு அம்சங்களுடைய கார்...

இந்த சோதனையில், காரில் அமர்ந்து செல்லும் பெரியவர்களுக்கு 97 சதவீதம் பாதுகாப்பு கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, சிறியவர்களுக்கு 87 சதவீதமும், சாலையில் செல்பவர்களுக்கு 87 சதவீத பாதுகாப்பையும், பாதுகாப்பு அம்சத்தில் 76 சதவீத மதிப்பெண்ணையும் அது பெற்றுள்ளது.

இதனை உறுதி செய்யும் வகையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் உள்ளடக்கியுள்ளது.

இந்த காரில் பயணித்தால் யமனாக இருந்தாலும் உங்களை கேட்டுதான் தொட முடியும்: அசத்தல் பாதுகாப்பு அம்சங்களுடைய கார்...

இந்த மதிப்பெண் பிஎம்டபிள்யூ 3 செரீஸில் விற்பனையாகும் 5 டூர் மற்றும் 4 டூர் மாடல் கார்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது, 316d, 318d, 320d, 318i, 320i, 330i, 320xd, 330xi மற்றும் 320x ஆகிய வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதில், 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வும் அடங்கும்.

இந்தியாவில், பிஎம்டபிள்யூ 3 செரீஸில் 320டி ஸ்போர்ட் மற்றும் சொகுசு வேரியண்ட் 330ஐ மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இவை இந்திய ரூபாய் மதிப்பில் 41 லட்சத்தில் இருந்து 47.90 லட்சம் வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, October 11, 2019, 18:50 [IST]
English summary
New BMW 3 Series Crash Test Video Euro NCAP Safety Ratings. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+