புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-4 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-4 எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-4 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

முதல் தலைமுறை பிஎம்டபிள்யூ பிஎம்டபிள்யூ எக்ஸ்-4 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வில்லை. இந்த நிலையில், பிஎம்டபிள்யூ எக்ஸ்-4 எஸ்யூவியின் இரண்டாம் தலைமுறை மாடல் புதிய ரகத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இது கூபே ரக எஸ்யூவி மாடலாக இருப்பது இதன் தனித்துவமான டிசைன் அம்சம்.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-4 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-4 எஸ்யூவியானது இரண்டு டீசல் மற்றும் ஒரு பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். பிஎம்டபிள்யூ எக்ஸ்-4 எஸ்யூவி மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின், அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது எக்ஸ்டிரைவ்20 டீ என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-4 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

சக்திவாய்ந்த 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் எக்ஸ்டிரைவ்30 டீ என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 265 பிஎச்பி பவரை அளிக்கும்.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-4 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ எஞ்சின் அதிகபட்சமாக 252 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. அனைத்து எஞ்சின் ஆப்ஷன்களிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-4 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் ஈக்கோ புரோ, கம்ஃபோர்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ளஸ் ஆகிய 4 விதமான நிலைகளில் ஓட்டக்கூடிய டிரைவிங் மோடுகள் உள்ளன. இந்த மாடல் மிகவும் வசீகரமான தோற்றத்தை பெற்றிருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-4 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் சைடு ஸ்கர்ட்டுகள், பின்புறத்தில் டிஃபியூசர் அமைப்பு, 19 அங்ஹகுல அலாய் வீல்கள், இரட்டை குழல் புகைப்போக்கி அமைப்பு, ரூஃப் ஸ்பாய்லர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-4 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-4 எஸ்யூவியில் எம் ஸ்போர்ட் மாடலாக வந்திருப்பதால், ஸ்டீயரிங் வீல், பக்கெட் இருக்கைகளில் பேட்ஜ் பதிக்கப்பட்டு இருக்கிறது. பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் டெயில் கேட் மற்றும் அடாப்டிவ் சஸ்பென்ஷனுடன் வந்துள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-4 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் சர்ரவுண்ட் ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளது. ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே உள்ளிட்ட ஏராளமான வசதிகளை பெற்றிருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-4 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கார் பிஎம்டபிள்யூ எக்ஸ்-3 அடிப்படையில் சிஎல்ஏஆர் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முதல் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்-4 எஸ்யூவியைவிட இரண்டாம் தலைமுறை மாடலாக வந்திருக்கும் இந்த கார் நீளத்தில் 81மிமீ வரையிலும், அகலத்தில் 37 மிமீ வரையிலும் கூடுதலாக இருக்கிறது. இதனால், இடவசதி மேம்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-4 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-4 எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட எண்ணற்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-4 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ரூ.60.6 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும்.

More from DriveSpark

Article Published On: Monday, January 21, 2019, 17:40 [IST]
English summary
New BMW X4 luxury SUV launched in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+