செப்டம்பர் மாதம் களமிறங்கவுள்ள 5 அட்டகாசமான கார்கள் இவைதான்... இதில் நீங்கள் வாங்க போகும் கார் எது?

இந்திய மார்க்கெட்டில் வரும் செப்டம்பர் மாதம் 5 புதிய கார்கள் களமிறக்கப்படவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செப்டம்பர் மாதம் களமிறங்கவுள்ள 5 அட்டகாசமான கார்கள் இவைதான்... இதில் நீங்கள் வாங்க போகும் கார் எது?

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை தற்போது இக்கட்டான சூழலில் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே வாகனங்கள் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருகிறது. இதில் இருந்து மீண்டு வர வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு வழிகளில் போராடி வருகின்றன. இதில், புதிய வாகனங்களை மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதும் ஒன்று.

செப்டம்பர் மாதம் களமிறங்கவுள்ள 5 அட்டகாசமான கார்கள் இவைதான்... இதில் நீங்கள் வாங்க போகும் கார் எது?

இதுதவிர பண்டிகை காலம் வேறு நெருங்கி வருகிறது. எனவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மும்முரமாக உள்ளன. நடப்பு ஆகஸ்ட் மாதத்தை எடுத்து கொண்டால், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6, கியா செல்டோஸ் மற்றும் புதிய பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் உள்ளிட்ட கார்கள் விற்பனைக்கு களமிறக்கப்பட்டன.

செப்டம்பர் மாதம் களமிறங்கவுள்ள 5 அட்டகாசமான கார்கள் இவைதான்... இதில் நீங்கள் வாங்க போகும் கார் எது?

*image credits: Autocar India

இதில், பெரும்பாலான கார்களுக்கு முன்பதிவு சிறப்பாக உள்ளது. குறிப்பாக கியா செல்டோஸ் புக்கிங் மிகவும் அபராமாக உள்ளது. இது ஆட்டோமொபைல் துறைக்கு ஒரு நல்ல அறிகுறி. எதிர்வரும் செப்டம்பர் மாதத்திலும் இந்திய கார் மார்க்கெட் மிகவும் பிஸியாகதான் இருக்க போகிறது. ஏனெனில் 5 புதிய கார்கள் களமிறங்கவுள்ளன.

செப்டம்பர் மாதம் களமிறங்கவுள்ள 5 அட்டகாசமான கார்கள் இவைதான்... இதில் நீங்கள் வாங்க போகும் கார் எது?

ஆடி, ஹூண்டாய், மாருதி சுஸுகி, ரெனால்ட் மற்றும் டாடா ஆகிய நிறுவனங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் தங்கள் தயாரிப்புகளை களமிறக்குவதற்கு தயாராக உள்ளன. எனவே அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள அந்த 5 புதிய கார் மாடல்கள் குறித்த விரிவான தகவல்கள் அனைத்தையும் இனி பார்க்கலாம்.

செப்டம்பர் மாதம் களமிறங்கவுள்ள 5 அட்டகாசமான கார்கள் இவைதான்... இதில் நீங்கள் வாங்க போகும் கார் எது?

புதிய தலைமுறை ஆடி ஏ6

எட்டாவது தலைமுறை ஆடி ஏ6 (Audi A6) கார், நடப்பாண்டு நடைபெற்ற ஜெனீவா மோட்டார் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சூழலில் வரும் செப்டம்பர் மாதம் இந்த கார் விற்பனைக்கும் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது இந்த காரை பல முறை பார்க்க முடிந்துள்ளது.

புதிய ஆடி ஏ6 காரின் அனைத்து இன்ஜின் ஆப்ஷன்களிலும் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படவுள்ளது. மூன்று வி6 இன்ஜின்களுடன் இந்த செடான் கிடைக்கும். புத்தம் புதிய ஆடி ஏ6 காரில், இரண்டு 8.6 இன்ச் இன்போடெயின்மெண்ட் திரைகள், ஆடி கனெக்ட், வாய்ஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெறவுள்ளன.

செப்டம்பர் மாதம் களமிறங்கவுள்ள 5 அட்டகாசமான கார்கள் இவைதான்... இதில் நீங்கள் வாங்க போகும் கார் எது?

ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட்

புத்தம் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Elantra Facelift) காரை சாலை சோதனைகளுக்கு உட்படுத்தியபோது, பல முறை பார்க்க முடிந்துள்ளது. இதுவும் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் பிஎஸ்-6 விதிகளுக்கு இணையான 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள் வழங்கப்படவுள்ளன.

செப்டம்பர் மாதம் களமிறங்கவுள்ள 5 அட்டகாசமான கார்கள் இவைதான்... இதில் நீங்கள் வாங்க போகும் கார் எது?

2019 ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் காரில், 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், அட்டானமஸ் பிரேக்கிங், லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறவுள்ளன.

செப்டம்பர் மாதம் களமிறங்கவுள்ள 5 அட்டகாசமான கார்கள் இவைதான்... இதில் நீங்கள் வாங்க போகும் கார் எது?

மாருதி சுஸுகி எஸ் பிரெஸ்ஸோ

மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பாண்டில் செய்யவுள்ள மிகப்பெரிய லான்ச் புதிய எஸ் பிரெஸ்ஸோ (S-Presso). ப்யூச்சர் எஸ் கான்செப்ட் அடிப்படையில் இந்த மைக்ரோ எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய டிசைன் மொழியில், அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ் உடன் இந்த காரை மாருதி சுஸுகி நிறுவனம் தயாரித்துள்ளது.

செப்டம்பர் மாதம் களமிறங்கவுள்ள 5 அட்டகாசமான கார்கள் இவைதான்... இதில் நீங்கள் வாங்க போகும் கார் எது?

ட்யூயல் ஏர் பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி, ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த 'லிட்டில் கார்' விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியுள்ள மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் வரும் செப்டம்பர் 30ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செப்டம்பர் மாதம் களமிறங்கவுள்ள 5 அட்டகாசமான கார்கள் இவைதான்... இதில் நீங்கள் வாங்க போகும் கார் எது?

*images for representational purposes only

ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட்

ரெனால்ட் நிறுவனம் க்விட் ஹேட்ச்பேக் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அடுத்த மாதம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணையான 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் மாதம் களமிறங்கவுள்ள 5 அட்டகாசமான கார்கள் இவைதான்... இதில் நீங்கள் வாங்க போகும் கார் எது?

*image credits: Autocar India

டாடா ஹாரியர் டார்க் எடிசன்

செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் கார்களின் பட்டியலில் டாடா ஹாரியர் டார்க் எடிசனும் உள்ளது. எந்தவொரு எஸ்யூவிக்கும் கருப்பு என்பது மிக சிறப்பான சேர்க்கையாகும். இந்த வண்ணம் வாகனத்திற்கு கூடுதல் கவர்ச்சியை சேர்க்கும். எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இஸட் டிரிம்களில், இந்த ஆல்-பிளாக் எஸ்யூவி கிடைக்கும்.

செப்டம்பர் மாதம் களமிறங்கவுள்ள 5 அட்டகாசமான கார்கள் இவைதான்... இதில் நீங்கள் வாங்க போகும் கார் எது?

*image credits: Autocar India

டாடா ஹாரியர் டார்க் எடிசன், 2.0 லிட்டர் Kyrotec டீசல் இன்ஜின் உடன் தொடரவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. மேற்கண்ட கார்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வாங்குவதாக இருந்தால் அதனை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, August 26, 2019, 19:55 [IST]
English summary
New Car Launches In India During September 2019: Here Is The List. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+