புதிய கார்களுக்கு ஆர்டிஓ பதிவு இலவசம்: ஆனால் ஒரு நிபந்தனை... இதை நினைத்து சிரிப்பதா, அழுவதா...
மத்திய அரசு புதிய கார்களின் ஆர்டிஓ பதிவை இலவசமாக செய்ய திட்டம் தீட்டி வருகின்றது. ஆனால், அதில் ஓர் நிபந்தனை என்ற பெயரில் முட்டுக்கட்டையை வைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

எதிர்காலத்தில் இந்தியச் சாலைகளை மின் வாகனங்கள் ஆளவிருப்பது தற்போதே உறுதியாகியுள்ளது. அதற்கான நடவடிக்கையில் மாத்திய, மாநில அரசுகள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. அதேசமயம், நாட்டில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைக் குறைக்கும் விதமான முயற்சியில் அரசு செயல்பட்டு வருகின்றது.

அந்தவகையில், எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டிற்கு ஒட்டுமொத்தமாக முழுக்குபோடும் வகையிலான நடவடிக்கைகள் அண்மைக் காலங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், புத்தம் புதிய நடவடிக்கையாக புதிய மற்றும் பழைய வாகனங்களின் ஆர்டிஓ பதிவிற்கு, தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக வசூலிக்க மத்திய அரசு திட்டம் தீட்டி வருகின்றது.

இதற்கான வரைவு அறிக்கையை மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் சமீபத்தில் முன்மொழிந்தது. அதில், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பதிவு கட்டணம் மற்றும் அவற்றின் பதிவை புதுப்பித்தலுக்காக பெறப்படும் கட்டணங்களை இதுவரை இல்லாத அளவிற்கு பல மடங்கு உயர்த்த அதில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இதனால், தற்போது இருசக்கர வாகனங்களின் பதிவிற்காக வசூலிக்கப்பட்டு வரும் 50 ரூபாய் கட்டணம், மிக விரைவில் ரூ. 1,000 ஆயிரமாக உயர இருப்பதாக கூறப்படுகின்றது. அதேசமயம், அதனை புதுப்பிக்க ரூ. 2 ஆயிரம் வசூலிக்கப்பட உள்ளது.

அதேபோன்று, பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் கார்களை பதிவு செய்ய தற்போது வசூலிக்கப்பட்டு வரும் ரூ. 600-க்கு பதிலாக ஐந்தாயிரம் ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. மேலும், அதனை புதுப்பிப்பதற்கு ரூ. 10 ஆயிரம் வரை வசூலிக்கப்பட உள்ளது.

மத்திய அரசின் புதிய திட்டத்தால் மக்கள் தற்போது மிகப்பெரிய கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசு மீண்டும் ஓர் புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், இம்முறை புதிய வாகனங்களுக்கு இலவசமாக ஆர்டிஓ பதிவைச் செய்ய திட்டமிட்டு வருகின்றது.

அதேசமயம், புதிய காரை இலவசமாக பதிந்து கொள்ள அதிரடி நிபந்தனையையும் அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, புதிய காரை இலவசாக ஆர்டிஓ பதிந்துகொள்ள, அவர்களின் பழைய வாகனத்தின் ஆர்டிஓ பதிவு ரத்து செய்து, அதே எண்ணை புதிய வாகனத்திற்கு பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
மேலும், பதிவு நீக்கப்பட்ட அந்த பழைய காரை, பயன்பாட்டில் இல்லாமல் அழித்துவிடுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளது.

இதற்கான கொள்கை ஒன்று தயார் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அந்த கொள்கையின்படி, நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்கிராப்பிங் மையங்கள் மட்டுமே செயல்பட உள்ளன. அவை, பழைய கார் உரிமையாளர்களுக்கு ஸ்கிராப் சான்றிதழ்களை வழங்கும். பின்னர், அந்த சான்றிதழை வைத்து புதிய வாகனத்திற்கான, இலவச பதிவைப் பெற்றுக்கொள்ளலாம்.

புதிய வாகனத்தின் இலவச பதிவு ஸ்கிராப் செய்யப்பட்ட வாகனம் அதே பிரிவில் மட்டுமே செல்லுபடியாகும். இதன் பொருள் நீங்கள் மாருதி ஆல்டோ போன்ற ஒரு சிறிய காரை ஸ்கிராப் செய்தால், இதேபோன்ற விலையுள்ள காரில் இலவச பதிவு கிடைக்கும்.

அதே ஸ்கிராப் செய்யப்படுகின்ற கார் எந்த ரகத்தில் இருக்கின்றதோ, அதே ரகத்திலான புது காருக்கு மட்டுமே இலவச செய்யப்பட உள்ளது. எடுத்துக்காட்டாக, மாருதி ஆல்டோ காரை நீங்கள் ஸ்கிராப் செய்கிறீர்கள் என்றால், அதே ரகத்திலான காருக்கு மட்டுமே இலவச பதிவு பெற முடியும்.

இத்தகைய ரகத்திலான ஸ்கிராப் மையத்தைதான் தற்போது மஹிந்திரா மற்றும் மெட்டல் ஸ்கிராப் டிரேட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் முதல் முறையாக மேற்கொள்ள இருக்கின்றது. இதற்கான செரோ (CERO) என்ற புதிய பிராண்ட் பெயரை அந்நிறுவனங்கள் தயார் செய்துள்ளன.

பழைய கார்களை ஸ்கிராப் செய்வதன்மூலம், சாலையில் புழுதியடைந்து நிற்கும் கார்களை மறுசுழற்சி செய்யப்படுவதுடன், தேவையற்ற இடம் அடைப்பு உள்ளிட்டவை நீக்கப்படுகின்றது. மேலும், சாலையில் பாதுகாப்பற்றநிலையில் நிற்கும் இந்த கார்கள், எப்போது யாருக்கு எந்தவித்தில் ஆபத்தை ஏற்படுத்தும் என்றே நம்மால் உணர முடிவதில்லை. ஆகையால், இவற்றை அகற்றி மறுசுழற்சி செய்வது நாட்டிற்கு பல வகையில் பயனளிக்கும் என கூறப்படுகின்றது.

அதேசமயம், மத்திய அரசு எஃப்சி சான்றிதழ் அளிக்கும் முறையிலும் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், தற்போது அளிக்கப்பட்டு வரும் ஒரு வருட கால வேலிடிட்டி இனி மாதங்களாக குறைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன், பேருந்துகளை மாற்றி திறனாளிகள் எளிதில் பயன்படுத்துகின்ற வகையிலான மாற்றத்தை மேற்கொள்ளவும் முயற்சிகள் எடுக்கப்பட உள்ளது.
அவ்வாறு, வீல் சேர், இருக்கையில் முன்னுரிமை, சைககள், ஹேண்ட் ரெயில் உள்ளிட்ட பல வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த முயற்சிக்காக, நாடு முழுவதும் பல அங்கீகரிக்கப்பட்ட கார் ஸ்கிராப்பிங் மையங்கள் நிறுவப்பட உள்ளது. அவ்வாறு, ஸ்கிராப் செய்யப்படும் கார்களுக்கு இலவச பதிவு வழங்குவதைத் தவிர, ஸ்கிராப் சான்றிதழ்களை வைத்திருப்பவர்களுக்கு புதிய கார்களில் வரி சலுகை, ரொக்க தள்ளுபடிகள் உள்ளிட்ட கூடுதல் சலுகைகளை அரசு எதிர்காலத்தில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








