ஃபெராரி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார்... படங்களுடன் தகவல்கள்!

ஃபெராரி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. படங்களுடன், தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபெராரி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார்... படங்களுடன் தகவல்கள்!

சில மாதங்களுக்கு முன்தான் ஃபெராரி கார் நிறுவனம் எஃப்-8 சூப்பர் காரை அறிமுகம் செய்தது. எனவே, இப்போதைக்கு ஃபெராரியிடம் இருந்து உடனடியாக எந்த காரும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இல்லை என்று கார் பிரியர்கள் கருதி இருந்தனர். ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில், சில மாத இடைவெளியில் அடுத்து ஒரு புத்தம் புதிய கார் மாடலை ஃபெராரி அறிமுகம் செய்துள்ளது.

ஃபெராரி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார்... படங்களுடன் தகவல்கள்!

ஃபெராரி எஸ்எஃப்-90 ஸ்ட்ரடேல் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த கார்தான் அந்நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட சூப்பர் கார் மாடல்.

ஃபெராரி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார்... படங்களுடன் தகவல்கள்!

ஃபெராரி நிறுவனத்தின் கார் பந்தய பிரிவாக செயல்படும் ஸ்குடேரியா ஃபெராரி நிறுவனத்தின் 90ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, அந்த பிராண்டின் முதல் எழுத்துக்களை எடுத்து இந்த காருக்கு எஸ்எஃப் என்று வைத்துள்ளது ஃபெராரி கார் நிறுவனம்.

ஃபெராரி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார்... படங்களுடன் தகவல்கள்!

இந்த காரில் வி-8 எஞ்சினும், 3 மின்மோட்டார்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 340 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

ஃபெராரி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார்... படங்களுடன் தகவல்கள்!

இந்த காரில் இரண்டு டர்போசார்ஜர்கள் பொருத்தப்பட்ட வி-8 சிலிண்டர் அமைப்பு கொண்ட 4.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 769 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும். இதுதவிர, மூன்று மின்மோட்டார்களுடன் இணைந்து அதிகபட்சமாக 986 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும்.

ஃபெராரி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார்... படங்களுடன் தகவல்கள்!

இந்த காரின் முன்சக்கரங்களில் தலா ஒரு மின் மோட்டாரும், 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸுடன் ஒரு மின் மோட்டாரும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் ப்ளக் இன் ஹைப்ரிட் மாடல் என்பதால், பெட்ரோல் எஞ்சினை அணைத்துவிடும், வெறும் மின்மோட்டார்களில் மட்டும் குறிப்பிட்ட தூரம் இயக்க முடியும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 24 கிமீ தூரம் பயணிக்கலாம்.

MOST READ: மாருதி சுஸுகி ஏஜிஎஸ்: அனைத்து இந்தியர்களுக்கும் ஓர் புரட்சிகரமான ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்

ஃபெராரி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார்... படங்களுடன் தகவல்கள்!

ஃபெராரி கார்களின் வழக்கமான டிசைன் தாத்பரியங்களிலிருந்து சற்றே வேறுபடுத்தப்பட்டுள்ளது. சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் டிசைனில் பல விஷயங்களை கையாண்டுள்ளது ஃபெராரி. மேலும், எஞ்சினையும், மின்மோட்டார்களையும் எளிதாக குளிர்விக்கும் வகையில், இதன் பாடியில் விசேஷ காற்று புகும் அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஃபெராரி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார்... படங்களுடன் தகவல்கள்!

இந்த காரின் வெளிப்புற டிசைன் மட்டுமின்றி, உட்புற டிசைனும் பிற ஃபெராரி கார்களிலிருந்து வேறுபடுகிறது. இந்த காரில் 16 அங்குல கர்வ்டு டிஸ்ப்ளே என்ற வளைந்த திரை அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. டச்பேடு மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கட்டுப்படுத்தலாம்.

ஃபெராரி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார்... படங்களுடன் தகவல்கள்!

காரின் ஸ்டீயரிங் வீலில் ஏராளமான பட்டன்கள் உள்ளன. இவற்றின் மூலமாக காரின் இயக்கம், ஹெட்லைட்டுகள், வைப்பர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கட்டுப்படுத்த முடியும். மொத்தத்தில் இந்த கார் சூப்பர் கார் பிரியர்களை எளிதில் வசீகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

Most Read Articles
மேலும்... #ஃபெராரி
English summary
All new Ferrari SF90 Stradale Plug-In Hybrid Supercar Revealed.
Story first published: Friday, May 31, 2019, 11:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X