ஃபோர்டு கியூகா கார் வெளியீடு குறித்த முக்கிய தகவல்...!
ஃபோர்டு நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை கியூகா எஸ்யூவி கார் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஃபோர்டு நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை கியூகா எஸ்யூவி மாடலை இன்று (ஏப்ரல் 2) அறிமுகம் செய்ய இருப்பாதக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய மாடல் கியூகா காரானது இகோஸ்போர்ட் என்ற லைன் அப்பில் ஏற்கனவே ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்கா ஆகிய நாடுகளில், ஃபோர்டு எஸ்கேப் என்ற பேட்ஜில் வெளிவந்துவிட்டது.
இந்த நிலையில், காரின் வெளியீடு குறித்த வீடியோ ஒன்றை ஃபோர்டு நிறுவனம் அதன் அஃபீசியல் பேஸ்புக் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த புதிய கியூகா கார் சமீபத்தில் வெளியான ஃபோகஸ் மாடலின் ஸ்டைலைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனை அதன் ஸ்பை படங்கள் உறுதி செய்கின்றது. அதன்படி, இந்த புத்தம் புதிய மூன்றாம் தலைமுறை கியூகா, கர்வியான வடிவமைப்பையும், பரந்த தோற்றத்தையும் கொண்டதாக இருக்கிறது.

இதன் இன்டீரியரில், நாம் அனைவரும் அறிந்த எதிர்பார்க்கப்பட்ட டேஷ்டாப்-மவுண்டட் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மேலும் சில மதிப்புக் கூட்டப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, டிரைவர் அசிஸ்டன்ட் தொழில்நுட்பம் மற்றும் பயணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட இடவசதி ஆகியவை இந்த புதிய மாடலில் இடம் பெற்றுள்ளன.

இதைத்தொடர்ந்து, இந்த புதிய கியூகா காரானது, இரண்டு விதமான சீட்டர் வேரியண்டில் கிடைக்க உள்ளது. அதன்படி, ஐந்து சீட்டுகள் கொண்ட அமைப்பு மற்றும் ஏழு சீட்டர்கள் கொண்ட அமைப்பாக சந்தையில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாம் தலைமுறை கியூகா காரானது, நான்கு எஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்க இருக்கிறது. அதன்படி, இந்த கார் ஃபோர்டு நிறுவனத்தின் என்ட்ரீ லெவலான 1.0 லிட்டர் இகோபூஸ்ட் எஞ்ஜின், 1.5 லிட்டர் பெட்ரோல் பெட்ரோல் எஞ்ஜின், 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆகிய ஆப்ஷன்களில் கிடைக்க உள்ளது. இதேபோன்று, இந்த மாடலில் ஹைபிரிட் எலக்ட்ரிக் காரும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு, வரும் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் வேரியண்டில் தயாரிக்கப்படும் கார்களை குறிப்பிட்ட சந்தையில் மட்டும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

கியூகாவைத் தொடர்ந்து, ஃபோர்டு நிறுவனத்தின் பூமா கார் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த கார்தான் இகோஸ்போர் மற்றும் கியூகாவிற்கு அடுத்தபடியாக களமிறங்க தயாராக இருக்கிறது. கியூகாவின் முந்தைய ஜெனரேஷன் மாடல் கடந்த 2017ம் ஆண்டில் ஐரோப்பா கண்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 51 யூனிட்கள் விற்பனையாகின. ஆனால், கடந்த ஆண்டு சற்று குறைவாக தான் விற்பனையாகின.

ஃபோர்டு நிறுவனம் அதன் எஸ்யூவி மாடல் கார்களை இந்தியாவில் மஹிந்திரா குழுமத்துடன் இணைந்து உருவாக்கி வருகிறது. ஆகையால் தற்போது வெளியாக இருக்கும் கியூகா-வின் மூன்றாம் தலைமுறை கார் மஹிந்திராவின் எக்ஸ்யூவி500 மாடலை ஒத்த அமைப்பைக் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த காரின் விலை மற்றும் மற்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இதேபோன்று, இதன் இந்திய விற்பனைக் குறித்த தகவலும் கிடைக்கவில்லை. ஆகையால், இன்றைய தினம் காரின் அறிமுகத்தைத் தொடர்ந்து, காரின் அனைத்து தகவல்களும் வெளியாகும் என்பதை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








