புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்திய வருகை விபரம்!

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் சொகுசு கார் இந்திய அறிமுக தேதி குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்திய வருகை விபரம்!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் குறைவான விலை சொகுசு செடான் கார் மாடல் 3 சீரிஸ் கார். உலக அளவில் இந்த காருக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்தியாவிலும் இந்த காரின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவு இருந்து வருகிறது.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்திய வருகை விபரம்!

இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து அவ்வப்போது இந்த கார் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது 7வது தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட புதிய மாடல் வடிவத்தில் பெரிய மாடலாக இருப்பதுடன் டிசைனில் கவர்ச்சிகர அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்திய வருகை விபரம்!

அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய பம்பர் அமைப்பு, 19 அங்குல அலாய் வீல்கள், எல் வடிவிலான பின்புற டெயில் லைட்டுகள் என அனைத்து முக்கிய டிசைன் அம்சங்களும் சிறப்பாக மாற்றப்பட்டுள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்திய வருகை விபரம்!

உட்புறத்திலும் ஏராளமான மாற்றங்களை சந்தித்து கூடுதல் பிரிமீயம் அந்தஸ்தை பெற்றிருக்கிறது. இந்த காரில் பிஎம்டபிள்யூவின் 7.0 ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய 12.3 அங்குல மின்னணு திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 10.25 அங்குல திரையுடன் இன்டெலிஜென்ட் அசிஸ்ட் வசதி கொண்ட கட்டுப்பாட்டு அமைப்பு இடம்பெற்றுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்திய வருகை விபரம்!

இந்த காரில் மேம்படுத்தப்பட்ட ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வசதியும் இடம்பெற்றிருக்கிறது. காரின் வேகம் உள்ளிட்ட தகவல்களை முன்புற கண்ணாடியில் இந்த சாதனமானது காட்டும். இதனால், ஓட்டுனரின் கவனக்குறைவு தவிர்க்கப்படும்.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்திய வருகை விபரம்!

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் 4,709 மிமீ நீளமும், 1,827 மிமீ அகலமும், 1,441 மிமீ உயரமும் பெற்றுள்ளது. இந்த கார் நீளத்தில் 76 மிமீ வரையிலும், அகலத்தில் 16 மிமீ வரையிலும், உயரத்தில் ஒரு மிமீ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், உட்புற இடவசதி மேம்பட்டுள்ளது. இந்த காிரின் வீல் பேஸ் 2,851 மிமீ ஆக உள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்திய வருகை விபரம்!

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் 2.0 லிட்டர் பெட்ரோல்,, டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. இதன் 330ஐ மாடலின் பெட்ரோல் எஞ்சின் 258 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதேபோன்று, 320டீ ஆகிய மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 190 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்திய வருகை விபரம்!

வரும் ஜூலை 25ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் ரூ.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 22, 2019, 15:37 [IST]
English summary
The New Gen BMW 3-Series to be launched in India on July 25, 2019.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+