புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ஷாங்காய் மோட்டார் ஷோவில் அறிமுகம்!

சீனாவில் நடந்து வரும் ஷாங்காய் ஆட்டோ ஷோவில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலும் அறிமுகமாக இருக்கும் இந்த புதிய மாடல் பற்றிய கூடுதல் விபரங்கள், படங்களை காணலாம்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ஷாங்காய் மோட்டார் ஷோவில் அறிமுகம்!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியானது சீனாவில் ஐஎக்ஸ்-25 என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, புதிய தலைமுறை ஐஎக்ஸ்-25 எஸ்யூவி ஷாங்காய் மோட்டார் ஷோ மூலமாக பொது பார்வைக்கு வந்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு முதல் தலைமுறை ஹூண்டாய் ஐஎக்ஸ்-25 எஸ்யூவி சீனாவில் அறிமுகமானது. அதைத்தொடர்ந்து, 2015ல் இந்தியாவில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோன்று, தற்போது சீனாவில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஹூண்டாய் ஐஎக்ஸ்-25 எஸ்யூவி அடுத்த ஆண்டு இந்தியாவில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியாக வர இருக்கிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ஷாங்காய் மோட்டார் ஷோவில் அறிமுகம்!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முகப்பு க்ரில் அமைப்பு முற்றிலும் மாறி இருக்கிறது. அத்துடன் முகப்பு விளக்குகள், பகல்நேர விளக்குகள் ஆகியவற்றின் டிசைன் முற்றிலுமாக மாறிவிட்டது. புதிய மாடலில் 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ஷாங்காய் மோட்டார் ஷோவில் அறிமுகம்!

முன்புற, பின்புற பம்பர்களில் சில்வர் க்ரில் அமைப்பு, ஹெட்லைட் அமைப்பு போன்ற டெயில் க்ளஸ்ட்டர், எல்இடி ஸ்டாப் லைட் ஆகியவை முக்கிய டிசைன் அம்சங்களாக கூறலாம். மேலும், காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் மூவர்ண கலவையில் காட்சி தருகிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ஷாங்காய் மோட்டார் ஷோவில் அறிமுகம்!

சிவப்பு வண்ணத்தில் கருப்பு கூரை வர்ண கூரை கொண்டதாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், பில்லர்களில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டு இருக்கிறது. இதனால், காரின் தோற்றம் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ஷாங்காய் மோட்டார் ஷோவில் அறிமுகம்!

இன்டீரியரானது க்ரீம் மற்றும் கருப்பு வண்ண கலையில் காட்சி தருகிறது. மேலும், க்ரோம் அலங்கார பாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு பங்ஷன் மற்றும் பேடில் ஷிஃப்டர்களும் உள்ளன.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ஷாங்காய் மோட்டார் ஷோவில் அறிமுகம்!

டாடா ஹாரியர் எஸ்யூவியில் இருப்பது போன்றே, விசேஷ டிரைவிங் மோடுகளுக்கான டயல் இடம்பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, வெவ்வேறு விதமான சாலை நிலைகளுக்கு தக்கவாறான டிரைவிங் மோடுகளை தேர்வு செய்து கொள்ள முடியும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ஷாங்காய் மோட்டார் ஷோவில் அறிமுகம்!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திலான 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதே எஞ்சின் ஆப்ஷன்கள்தான் கியா எஸ்பி-2ஐ காரிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ஷாங்காய் மோட்டார் ஷோவில் அறிமுகம்!

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் இடையிலான விலைப்பட்டியலில் விற்பனைக்ககு களமிறக்கப்படும்.

Via - GaadiWaadi

More from DriveSpark

Article Published On: Tuesday, April 16, 2019, 15:22 [IST]
English summary
New Gen Hyundai Creta Debuts At Shanghai Auto Show.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+