7 சீட்டர் மாடலிலும் வருகிறது புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி!!
புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி 7 சீட்டர் மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் க்ரெட்டா சிறந்த தேர்வாக இருக்கிறது. டிசைன், இடவசதி, தொழில்நுட்ப வசதிகள் மற்றும் விலை ஆகிய அனைத்திலும் மிகச்சிறந்த தேர்வாகவும், மதிப்பு மிக்க மாடலாக இருக்கிறது.

இதனால், விற்பனையிலும் கலக்கி வருகிறது. மாருதி பிரெஸ்ஸாவுக்கு அடுத்து விற்பனையில் இரண்டாவது இடம் வகிக்கிறது. மாதத்திற்கு 10,000 க்ரெட்டா எஸ்யூவி கார்கள் விற்பனை ஆகின்றன.

இந்த நிலையில், க்ரெட்டா எஸ்யூவியின் மார்க்கெட்டை தக்க வைக்கும் விதத்தில், புதிய தலைமுறை பாடலை உருவாக்கும் முயற்சியில் ஹூண்டாய் ஈடுபட்டு வருகிறது.

தற்போது ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியை குறிவைத்து பல புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

எனவே, போட்டியை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைப்பு மற்றும் வசதிகளில் மிகச்சிறப்பாக புதிய மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது.

புதிய ஹூண்டாய் சான்டா ஃபீ மற்றும் ஐ30 காரின் டிசைன் அம்சங்கள் புதிய க்ரெட்டா எஸ்யூவியில் பயன்படுத்தபபட உள்ளன.

மேலும், புதிய க்ரெட்டா எஸ்யூவி 7 பேர் பயணிக்கும் இருக்கை வசதியுடன் மேம்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா ஹாரியர் போலவே 5 சீட்டர் மற்றும் 7 பீட்டர் மாடல்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இதன்மூலம், மஹிந்திரா எக்ஸ்யூவி மார்க்கெட்டையும் குறி வைக்க முடியும்.

மேலும், விரைவில் வரும் வெனியூ எஸ்யூவியை வைத்து 5 சீட்டர் எஸ்யூவி செக்மென்ட்டில் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தை பெற்றுவிட முடியும். எனவே, 7 சீட்டர் எஸ்யூவி ஹூண்டாய் நிறுவனத்திற்கு அவசியமாகி உள்ளது.
Source: Gaadiwaadi


Click it and Unblock the Notifications








