புதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் அறிமுக தேதி விபரம்!

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரின் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் அறிமுக தேதி விபரம்!

பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சிறந்த பிரிமீயம் மாடலாக ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் விளங்குகிறது. வடிவமைப்பு, வசதிகள், விலை என அனைத்திலும் நிறைவை தரும் மாடலாக முக்கிய தேர்வாக உள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் அறிமுக தேதி விபரம்!

இந்த நிலையில், சந்தைப் போட்டி அதிகரித்துள்ளதையடுத்து, க்ராண்ட் ஐ10 கார் புதிய தலைமுறை அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தலைமுறை மாடலாக வர இருக்கும் புதிய க்ராண்ட் ஐ10 கார் கடந்த சில மாதங்களாக தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் அறிமுக தேதி விபரம்!

இந்த நிலையில், இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் வரும் ஆகஸ்ட் 20ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் அறிமுக தேதி விபரம்!

தற்போது விற்பனையில் உள்ள மாடலைவிட நீள, அகலத்தில் பெரிய மாடலாக இருக்கும் என்று தெரிகிறது. அத்துடன், புதிய பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் அறிமுக தேதி விபரம்!

தற்போது பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் தக்க வைக்கப்பட இருக்கிறது. அதேநேரத்தில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும் என்று தெரிகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் அறிமுக தேதி விபரம்!

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் நேரடி இணைய வசதியை பெறும் வகையில் இ- சிம் கார்டு தொழில்நுட்பத்துடன் வர இருக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் அறிமுக தேதி விபரம்!

ஹெட்லைட்டுகள், க்ரில் அமைப்பு மற்றும் பனி விளக்குகள் ஆகியவை புதிதாக இடம்பெற இருக்கின்றன. புதிய அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கும். இதுதவிர்த்து, வடிவமைப்பில் புதுப்பொலிவுடன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் அறிமுக தேதி விபரம்!

தற்போது ரூ.4.98 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிரது. புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் சற்றே கூடுதல் விலையில் கிடைக்கும். பண்டிகை காலத்தில் ஹேட்ச்பக் ரக கார் மாடலை வாங்க திட்டமிட்டிருப்போருக்கு சிறந்த தேர்வாக அமையும்.

Source: Carwale

More from DriveSpark

Article Published On: Monday, July 8, 2019, 12:20 [IST]
English summary
According to a media report, the second-generation Hyundai Grand i10 is likely to be launched in India on August 20, 2019.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+