எக்கச்சக்க சிறப்பம்சங்களுடன் வருகிறது புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி!
நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் முதன்மையான தேர்வாக மஹிந்திரா தார் எஸ்யூவி இருந்து வருகிறது. இந்த நிலையில், புதிய மாசு உமிழ்வு விதிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது மஹிந்திரா தார் எஸ்யூவி.

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அடுத்த ஆண்டு துவக்கத்தில் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி பழைய மாடலைவிட அளவில் பெரிய கார் மாடலாக மாறி இருக்கிறது.

இதற்கு தக்கவாறு 18 அங்குல அலாய் வீல்கள் இந்த எஸ்யூவியில் இடம்பெற்றிருப்பதாக தெரிகிறது. அத்துடன், பழைய மாடலை போல டல்லாக இல்லாமல், இதன் உட்புற வடிவமைப்பு மிகவும் பிரிமீயமாக இருக்கும்.

உயர்தர பாகங்களுடன் டேஷ்போர்டு அமைப்பு, தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் ரிவர்ஸ் கேமரா வசதியும் கொடுக்கப்பட இருக்கிறது. மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே ஸ்டீயரிங் வீல்தான் இதிலும் இடம்பெறுகிறது. மேலும், சுவிட்ச் கன்ட்ரோல் வசதியும் ஸ்டீயரிங் வீலில் உள்ளது.

ஏசி வென்ட்டுகள் க்ரோம் வளையத்துடன் அழகாகவும், பிரிமீயமாகவும் காட்சி தரும். யுஎஸ்பி சார்ஜர்கள், எச்விஏசி சிஸ்டம் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் டியூவல் ஏர்பேக்குகள், பவர் ஃபோல்டிங் வசதியுடன் சைடு மிரர்கள், மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் என நவீன யுக மாடலாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 140 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் வழங்கப்படும். சிறிது காலம் கழித்து ஆட்டோமேட்டிக் மாடலிலும் வரும் வாய்ப்புள்ளது. இதன் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வர உள்ளது. ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கும்.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இதுவரை எந்த உறுதியானத் தகவலும் இல்லை. பின்னர் பெட்ரோல் மாடலிலும் கொண்டு வரும் திட்டம் மஹிந்திராவிடம் உள்ளதாக தெரிகிறது.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில்லைட்டுகள், பனி விளக்குகளுடன் கூடிய முன்புற பம்பர் என ஏராளமான அம்சங்களுடன் வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் டீலர்களுக்கு புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி வந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.
Source: ACI


Click it and Unblock the Notifications








