எஸ்யூவி ஸ்டைலில் வரும் புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார்!

ஆரம்ப பட்ஜெட் விலை கார்கள் பொதுவாக ஹேட்ச்பேக் டிசைனில்தான் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் ரெனோ நிறுவனம் களமிறக்கிய க்விட் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கு முக்கிய காரணம், எஸ்யூவி போன்ற அதன் பாடி ஸ்டைல் எல்லோரையும் வெகுவாக கவர்ந்துவிட்டது.

எஸ்யூவி ஸ்டைலில் வரும் புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார்!

ImageSource: Zigwheels

ரெனோ க்விட் காருக்கு கிடைத்த வரவேற்பு மாருதி நிறுவனத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது நினைவிருக்கலாம். இந்த சூழலில், புதிய தலைமுறை ஆல்ட்டோ காரை எஸ்யூவி பாடி ஸ்டைலில் மாருதி கார் நிறுவனம் வடிவமைத்து களமிறக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

எஸ்யூவி ஸ்டைலில் வரும் புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார்!

அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் மாருதி நிறுவனத்தின் மினி எஸ்யூவி பாடி ஸ்டைலிலான புதிய கார் தற்போது தீவிரமான சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. இதுதான் புதிய தலைமுறை ஆல்ட்டோ காராக களமிறக்கப்பட இருப்பதாக ஆட்டோமொபைல் இணையதளங்கள் அடித்து கூறுகின்றன

எஸ்யூவி ஸ்டைலில் வரும் புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார்!

கடந்த மாதம் ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், ஷிம்லா அருகே உள்ள குஃப்ரி ஹில்ஸ் பகுதியில் மாருதி ஆல்ட்டோ கார் அடையாளங்கள் முற்றிலுமாக மறைக்கப்பட்டு சோதனை ஓட்டத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியானது. தற்போது மீண்டும் புதிய ஆல்ட்டோ காரின் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த மாருதியின் ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட் அடிப்படையில்தான் புதிய மாருதி ஆல்ட்டோ கார் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

எஸ்யூவி ஸ்டைலில் வரும் புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார்!

மாருதியின் இக்னிஸ் கார் போன்ற டிசைன் தாத்பரியங்கள் இந்த புதிய மாடலில் அதிகம் இருக்கிறது. இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் இருப்பது தெரிகிறது.

எஸ்யூவி ஸ்டைலில் வரும் புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார்!

உட்புறத்தில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், டேஷ்போர்டிலேயே அமைக்கப்பட்ட கியர் லிவர், எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. தற்போதைய மாடலைவிட, உட்புறம் அதிக இடவசதி கொண்டதாக தெரிகிறது.

எஸ்யூவி ஸ்டைலில் வரும் புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார்!

புதிய மாருதி ஆல்ட்டோ காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக இருக்கும். உடைமைகளை வைப்பதற்கான பூட்ரூம் இடவசதி கூட சிறப்பாக மேம்பட்டுள்ளது.

விரைவில் அமலுக்கு வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு உட்பட்ட கட்டமைப்பு கொள்கையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு இணையாக பாதுகாப்பு அம்சங்களுடனும் புதிய மாருதி ஆல்ட்டோ கார் வர இருக்கிறது.

எஸ்யூவி ஸ்டைலில் வரும் புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார்!

புதிய மாருதி ஆல்ட்டோ காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட இருக்கின்றன. இந்த எஞ்சின் ஆப்ஷன்கள் சிறந்த செயல்திறனையும், அதிக எரிபொருள் சிக்கனத்தையும் தர வல்லதாக இருக்கும்.

எஸ்யூவி ஸ்டைலில் வரும் புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார்!

ரூ.3 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. நடப்பு ஆண்டில் பண்டிகை காலத்தின்போது, அதாவது அக்டோபர் மாத வாக்கில் புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார் சந்தையில் களமிறக்கப்பட இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 16, 2019, 13:11 [IST]
English summary
New Gen Maruti Alto Spy Images.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+