புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார் வெளியீடு!

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மாடல் குறித்த தகவல்கள் மற்றும் படங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார் வெளியீடு!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆரம்ப ரக சொகுசு எஸ்யூவி கார் மாடலாக ஜிஎல்ஏ நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. விற்பனையிலும் மிக முக்கிய மாடலாக இருந்து வருகிறது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை 10 லட்சம் யூனிட்டுகள் என்ற விற்பனையை பெற்றிருக்கிறது.

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார் வெளியீடு!

இந்த நிலையில், இந்த க்ராஸ்ஓவர் ரக மாடலானது புதிய டிசைன் அம்சங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் புதிய தலைமுறை மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மிக நேர்த்தியாகவும், எளிமையான டிசைன் அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் காம்பேக்ட் கார் வரிசையில் 9வது கார் மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார் வெளியீடு!

இரண்டாம் தலைமுறை மாடலாக வெளியிடப்பட்டு இருக்கும் இந்த புதிய கார் பல்வேறு விதத்திலும் மேம்பட்டுள்ளது. சொகுசு அம்சங்கள், பாதுகாப்பு வசதிகள் என அனைத்து வித்ததிலும் சிறப்பாக வந்திருக்கிறது.

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார் வெளியீடு!

இந்த காரின் ஆரம்ப விலை ஜிஎல்ஏ200 மாடலில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு உள்ளது. இந்த எஞ்சின் 161 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இதனுடன் 7 ஸ்பீடுமெர்சிடிஸ் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். இந்த மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 8.7 வினாடிகளில் எட்டிவிடும்.

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார் வெளியீடு!

மற்றொரு ஜிஎல்ஏ 35 மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ எஞ்சின் அதிகபட்சமாக 302 எச்பி பவரை வெளிப்படுத்தும். இதுதவிர்த்து, ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் மாடல்களிலும் இந்த ஜிஎல்ஏ கார் எதிர்காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார் வெளியீடு!

வெளிப்புறத்தை போலவே உட்புறத்திலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஒரே திரை அமைப்பில் இரண்டு பிரிவாக செயல்படுகின்றன.

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார் வெளியீடு!

அதேபோன்றே, இந்த காரிலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில், 10.25 அங்குல தொடுதிரையும் மற்றொன்று 7 அங்குல திரையாகவும் செயல்படும். வழக்கம்போல் மிக அழகான ஏசி வென்ட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. எம்பியூஎக்ஸ் என்ற இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்திற்கான தொழில்நுட்பம் வாய்ஸ் கமாண்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அளிக்கும். வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் பேரில் இதனை கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்.

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார் வெளியீடு!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கார் 4,410 மிமீ நீளமும், 2,020 மிமீ அகலமும், 1,611 மிமீ உயரமும் கொண்டுள்ளது. பழைய மாடலைவிட அகலம் 2 மிமீ வரையிலும், உயரம் 14 மிமீ வையிலும் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இதன் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 9 மிமீ அதிகரிக்கப்பட்டு 143 மிமீ ஆக உள்ளது. இந்த காரில் 17 அங்குலம் முதல் 20 அங்குலம் வரையிலான அலாய் சக்கரங்கள் தேர்வுக்கு வழங்கப்படும்.

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார் வெளியீடு!

அடுத்த ஆண்டு வெளிநாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. வரும் 2021ம் ஆண்டு இந்தியாவில் இந்த புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கார் விற்பனைக்கு அறிமுகமாகும். பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மற்றும் வால்வோ எக்ஸ்சி40 கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 12, 2019, 13:22 [IST]
English summary
Mercedes-Benz has revealed the second-generation GLA globally with substancial make over and superior technology. It is expected to arrive in India by 2021.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+