புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் அறிமுக தேதி விபரம்!

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா காரின் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் அறிமுக தேதி விபரம்!

எக்ஸிகியூட்டிவ் செடான் கார் மார்க்கெட்டில் ஸ்கோடா ஆக்டேவியா கார் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த காரின் மிக நேர்த்தியான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் ஆகியவை வாடிக்கையாளர்களை கவர்ந்த விஷயமாக இருக்கிறது.

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் அறிமுக தேதி விபரம்!

தற்போது விற்பனையில் இருக்கும் மூன்றாம் தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் கடந்த 2013ம் ஆண்டு மார்க்கெட்டுக்கு வந்தது. இந்த நிலையில், சந்தைப்போட்டி மிகுந்துள்ளதையடுத்து, ஸ்கோடா ஆக்டேவியா காரின் புதிய தலைமுறை மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் அறிமுக தேதி விபரம்!

கடந்த மாதம் நடந்த பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவிலேயே அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, அடுத்த மாதம் 11ந் தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் அறிமுக தேதி விபரம்!

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்.க்யூ.பி பிளாட்ஃபார்ம் என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையின் கீழ் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய மாடலைவிட நீள, அகலம், உயரத்தில் சற்றே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், இடவசதியில் மேம்பட்ட மாடலாக வர இருக்கிறது.

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் அறிமுக தேதி விபரம்!

அத்துடன், புதிய க்ரில், பம்பர் அமைப்புடன் வசீகரமான முகப்பு மற்றும் புதிய வடிவமைப்பு அம்சங்களுடன் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும். கமிக் எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் சில டிசைன் அம்சங்கள் இந்த காரிலும் இடம்பெற்றிருக்கும் என்று தெரிகிறது.

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் அறிமுக தேதி விபரம்!

உட்புறமும் முற்றிலும் புதிதாக இருக்கும். இந்த காரில் இரண்டு ஸ்போக்குகள் கொண்ட ஸ்டீயரிங் வீல், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஃப்ளோட்டிங் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அதற்கு கீழாக இடம்பெறும் ஏசி வென்ட்டுகள் என பல்வேறு மாற்றங்களுடன் வர இருக்கிறது. பிரிமீயம் லெதர் வேலைப்பாடுகளும் இன்டீரியர் மதிப்பை உயர்த்தும்.

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் அறிமுக தேதி விபரம்!

இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு இந்தியாவில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் அறிமுக தேதி விபரம்!

அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஹோண்டா சிவிக், ஹூண்டாய் எலான்ட்ரா, டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 8, 2019, 12:49 [IST]
English summary
According to reports, Skoda is going to unveil the new generation Octavia on November 11, 2019.
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+