புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்படும் டொயோட்டா எட்டியோஸ், லிவா கார்கள்!

டொயோட்டா எட்டியோஸ், லிவா கார்கள் மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்படும் டொயோட்டா எட்டியோஸ், லிவா கார்கள்!

டொயோட்டா நிறுவனத்தின் விலை குறைவான தேர்வுகளாக லிவா மற்றும் எட்டியோஸ் கார்கள் உள்ளன. இதில், டொயோட்டா எட்டியோஸ் காருக்கு தனி நபர் மார்க்கெட் மட்டுமின்றி, டாக்ஸி மார்க்கெட்டிலும் பெரும் வரவேற்பு இருக்கிறது.

புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்படும் டொயோட்டா எட்டியோஸ், லிவா கார்கள்!

அதிக இடவசதியுடன் மிக சரியான விலையில் நீடித்த உழைப்பை வழங்குவதால் டொயாோட்டா எட்டியோஸ் காருக்கு வலுவான சந்தையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த நிலையில், டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக அண்மையில் பொறுப்பேற்ற மஸகாஸு யோஷிமுரா எக்கனாமிக் டைம்ஸ் இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்படும் டொயோட்டா எட்டியோஸ், லிவா கார்கள்!

அதில், டொயோட்டா எட்டியோஸ், லிவா ஆகிய இரண்டு கார் மாடல்களையும் மேம்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், புதிதாக வரும் எட்டியோஸ், லிவா கார்களின் விலையையும் குறைவாக நிர்ணயித்து விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் திட்டம் இருப்பதாக கூறி இருக்கிறார்.

புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்படும் டொயோட்டா எட்டியோஸ், லிவா கார்கள்!

அதேநேரத்தில், புதிய மாடல்கள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை. எனினும், இந்த மாடல்கள் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் டொயோட்டா நிறுவனம் தீவிரமாக இருப்பது உறுதியாகி இருக்கிறது.

புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்படும் டொயோட்டா எட்டியோஸ், லிவா கார்கள்!

புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறை மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இந்த புதிய மாடல்கள் இருக்கும். அதிக பாதுகாப்பு வசதிகளும் சேர்க்கப்படும் என்பதால் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக மாறும் என்று தெரிகிறது.

புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்படும் டொயோட்டா எட்டியோஸ், லிவா கார்கள்!

ஆரம்ப நிலை மற்றும் நடுத்தர வகை செடான் கார்களுக்கு இடையிலான ரகத்தில் டொயோட்டா எட்டியோஸ் செடான் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதன் புதிய தலைமுறை மாடல் விலை குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதால், தனி நபர் மார்க்கெட்டிலும் சிறப்பான வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.

புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்படும் டொயோட்டா எட்டியோஸ், லிவா கார்கள்!

மேலும், மாருதி சுஸுகி நிறுவனத்துடன் சேர்ந்து எலெக்ட்ரிக் கார் உருவாக்கப் பணிகள் மற்றும் அதற்கான பேட்டரி தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்படும் டொயோட்டா எட்டியோஸ், லிவா கார்கள்!

இந்தியாவிற்கான பேட்டரி கார்களை உருவாக்குவது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் இந்த கார் மாடல்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனால், பேட்டரி கார் உற்பத்தியில் இந்தியாவை முக்கிய கேந்திரமாக இந்த கூட்டணி பயன்படுத்தும் வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 5, 2019, 14:36 [IST]
English summary
New gen Toyota Etios, Liva confirmed For India.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+