புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு?

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு துவங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு?

மிட்சைஸ் செடான் மார்க்கெட்டில் முதன்மையான தேர்வாக விளங்கும் ஹோண்டா சிட்டி காருக்கு மாருதி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா கார்கள் மூலமாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் முற்றிலும் புதிய மாடலாக ஹோண்டா சிட்டி கார் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு?

வடிவமைப்பில் மிகச் சிறப்பாகவும், நீள, அகலத்தில் கூடுதலாகவும் உருவாக்கப்பட்டு இருப்பதால் இந்த கார் அடுத்த லெவலுக்கான அம்சங்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, அதிக தொழில்நுட்ப அம்சங்கள், அதிக இடவசதி, கவர்ச்சிகரமான தோற்றத்துடன் வர இருக்கிறது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு?

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, சைடு மற்றும் கர்டெயின் ஏர்பேக்குகள் என பல்வேறு விதத்திலும் மேம்பட்ட மாடலாக இருக்கும்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு?

தற்போதைய மாடலில் பயன்படுத்தப்பட்டு வரும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள்தான் தக்க வைக்கப்படும். ஆனால், இந்த எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு?

புதிய ஹோண்டா சிட்டி கார் எஸ்வி, வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் பேஸ் வேரியண்ட்டில் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், எல்இடி பகல்நேர விளக்குகள், 15 அங்குல அலாய் வீல்கள், பவர் விண்டோஸ், ஆட்டோமேட்டிக் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல், 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் கேமரா ஆகியவை இடம்பெறும்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு?

டாப் வேரியண்ட்டில் சன்ரூஃப், டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல், ஆட்டோடிம் ரியர் வியூ மிரர், 16 அங்குல அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் வைப்பர் உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு?

புதிய ஹோண்டா சிட்டி கார் இந்த மாத இறுதியில் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்த மாத இறுதியிலேயே இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. டீசல் மாடல் சற்று தாமதமாக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு?

மேலும், டீலர்களில் புதிய ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் மாடலுக்கான முன்பதிவும் ரகசியமாக பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக புக்கிங் துவங்கும்போது இப்போது பதிவு செய்தவர்களின் பெயர் முன்னுரிமை கொடுக்கப்படும்.

Source: Autocarindia

More from DriveSpark

Article Published On: Wednesday, November 6, 2019, 10:09 [IST]
English summary
According to report, Honda car dealers have commenced bookings for the BS6 Honda City petrol model in India unofficially.
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+