புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் ஸ்பை படங்கள்!

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் இந்திய சாலைகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் ஸ்பை படங்கள்!

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அங்க அடையாளங்கள் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காஸியாபாத் நகர் அருகே நெடுஞ்சாலையில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. அங்க அடையாாளங்கள் முழுமையாக மறைக்கப்பட்டு இருந்தாலும், சில விஷயங்களை பார்க்க முடிகிறது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் ஸ்பை படங்கள்!

புதிய டெயில் லைட்டுகள், ஷார்க் ஃபின் ஆன்டெனா, கருப்பு வண்ண பி பில்லர்கள், மல்டி ஸ்போக் அலாய் வீல்கள் ஆகியவை இந்த காரின் முக்கிய மாற்றங்களாக தெரிய வருகிறது. இதுதவிர்த்து, எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய பம்பர் அமைப்பு இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் ஸ்பை படங்கள்!

உட்புறத்திலும் மிக பிரிமீயம் மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கும். புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அதிக இடவசதியை அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட உட்புற அமைப்பு, சொகுசான இருக்கைகள் என அதிக சிறப்பம்சங்களை பெற்றிருக்கும்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் ஸ்பை படங்கள்!

இந்த காரில் முக்கிய மாற்றமாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1. 5 லிட்டர் பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு சோதனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட இருக்கிறது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் ஸ்பை படங்கள்!

புதிய ஹோண்டா சிட்டி காரில் ஹைப்ரிட் தொழில்நுட்பமும் இடம்பெற இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதன்மூலமாக, மிக அதிக எரிபொருள் சிக்கனத்தை இந்த புதிய சிட்டி கார் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் ஸ்பை படங்கள்!

புதிய ஹோண்டா சிட்டி காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், பிரேக் அசிஸ்ட், சீட் பெல்ட் ரிமைன்டர்கள், ஹை ஸ்பீடு அலர்ட் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகள் நிரந்தரமாக வழங்கப்படும்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் ஸ்பை படங்கள்!

புதிய ஹோண்டா சிட்டி கார் வரும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா மற்றும் ஸ்கோடா ரேபிட் ஆகிய கார்களுடன் போட்டி போடும்.

Source: Team bhp

More from DriveSpark

Article Published On: Wednesday, September 11, 2019, 18:28 [IST]
English summary
Honda Cars India is said to be working on the BS-VI update to its popular City sedan in the Indian market. The new Honda City BS-VI has been spotted undergoing extensive testing on the Indian streets, under heavy camouflage.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+