புதிய ஹோண்டா சிவிக் காரின் மைலேஜ் விபரத்தை கேட்டீங்களா?

புதிய ஹோண்டா சிவிக் காரின் மைலேஜ் உள்ளிட்ட முக்கிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

புதிய ஹோண்டா சிவிக் காரின் மைலேஜ் விபரத்தை கேட்டீங்களா?

பல ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் ஹோண்டா சிவிக் கார் புதிய தலைமுறை மாடலாக இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. வடிவமைப்பு, வசதிகள், தொழில்நுட்பம், எஞ்சின் ஆப்ஷன் என அனைத்திலும் முற்றிலும் புதிய கார் மாடலாக வருகிறது.

இந்த நிலையில், புதிய ஹோண்டா சிவிக் காரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதில், மைலேஜ் உள்ளிட்ட விஷயங்கள் அசரடிக்கும் விதத்தில் உள்ளன.

புதிய ஹோண்டா சிவிக் காரின் மைலேஜ் விபரத்தை கேட்டீங்களா?

பெட்ரோல் எஞ்சின்

புதிய ஹோண்டா சிவிக் கார் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 174 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் எஞ்சின் 7 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வர இருக்கிறது. பேடில் ஷிஃப்ட் வசதியும் இருக்கும்.

டீசல் எஞ்சின்

டீசல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமசாக 120 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இநத் எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வர இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருக்காது.

மைலேஜ்

புதிய ஹோண்டா சிவிக் காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 26.8 கிமீ மைலேஜை வழங்கும் என்று அராய் சான்றளித்துள்ளது. இது வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலைத் தூண்டி இருக்கிறது. இதன் ரகத்தில் மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் கார் மாடலாக இருக்கும். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.5 கிமீ மைலேஜை வழங்கும்.

புதிய ஹோண்டா சிவிக் காரின் மைலேஜ் விபரத்தை கேட்டீங்களா?

அசத்தும் ரேஞ்ச்

பெட்ரோல், டீசல் மாடல்களில் 47 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் பொருத்தப்பட்டு இருக்கிறது. டீசல் மாடலில் முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 1,000 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை பெற இயலும்.

பரிமாணம்

புதிய ஹோண்டா சிவிக் கார் 4,656 மிமீ நீளமும், 1,799 மிமீ அகலமும், 1,433 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 2,700 மிமீ வீல் பேஸ் பெற்றிருப்பதால் உட்புறத்தில் மிகச் சிறப்பான இடவசதியை அளிக்கும் என்று நம்பலாம்.

பூட் ரூம் இடவசதி

இந்த காரில் 430 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. இது 4 பேருக்கான உடைமைகளை வசதியாக எடுத்துச் செல்வதற்கு உதவும். பெட்ரோல் மாடல் 1,300 கிலோ எடையும், டீசல் மாடல் 1,353 கிலோ எடையும் கொண்டுள்ளன.

புதிய ஹோண்டா சிவிக் காரின் மைலேஜ் விபரத்தை கேட்டீங்களா?

கிரவுண்ட் கிளியரன்ஸ்

புதிய ஹோண்டா சிவிக் கார் 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரில் 17 அங்குல சக்கரங்களும், 215/ 50 R17 டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

வண்ணத் தேர்வுகள்

புதிய ஹோண்டா சிவிக் கார் பிளாட்டினம் ஒயிட் பியர்ல், ரேடியண்ட் ரெட், மாடர்ன் ஸ்டீல், லூனார் சில்வர் மற்றும் கோல்டன் பிரவுன் ஆகிய வண்ணத் தேர்வுகளில் வர இருக்கிறது.

கடந்த 2013ம் ஆண்டு ஹோண்டா சிவிக் கார் இந்தியாவிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய சந்தையில் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்கோடா ஆக்டேவியா, ஹூண்டாய் எலான்ட்ரா மற்றும் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் உள்ளிட்ட கார்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 13, 2019, 13:28 [IST]
English summary
Honda has revealed all the specifications for the upcoming Civic, apart from the variants and prices. Let's look into every specification of the car in more detail.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+