ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியில் நடுத்தர விலையிலான புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் தனித்துவமான க்ராஸ்ஓவர் மாடலாக ஹோண்டா டபிள்யூஆர்வி கார் விற்பனையில் கலக்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இந்த கார் ஹோண்டா கார் பிரியர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்து வருகிறது.

ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியில் எஸ் என்ற பேஸ் வேரியண்ட்டும், விஎக்ஸ் என்ற டாப் வேரியண்ட்டிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுதவிர, சிறப்பு பதிப்பு வேரியண்ட்டுகளிலும் கிடைக்கிறது. இந்த நிலையில், எஸ் வேரியண்ட் மற்றும் விஎக்ஸ் வேரியண்ட்டிற்கு இடையிலான புதிய வி வேரியண்ட் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

புதிய வி வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், டர்ன் இன்டிகேட்டருடன் சைடு மிரர்கள், முன்புற பனி விளக்குகள், 16 அங்குல மல்டி ஸ்போக் அலாய் வீல்கள், மைக்ரோ ஆன்டென்னா மற்றும் க்ரோம் கைப்பிடிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

மேலும், ஹோண்டா டபிள்யூஆர்வி காரில் 6.9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், கீ லெஸ் ரிமோட் என்ட்ரி, ஸ்டோரேஜ் வசதியுடன் சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவி காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், முன்புற பயணிக்கான சீட் பெல்ட் ரிமைன்டர் வசதி, ஹை ஸ்பீடு அலர்ட், இன்டலிஜென்ட் பிரேக் மற்றும் ஹோண்டா நிறுவனத்தின் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய கட்டுமானம் ஆகிய பல பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது.

ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியின் புதிய வி வேரியண்ட்டானது 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியின் புதிய வி வேரியண்ட் தவிர்த்து, எஸ் மற்றும் விஎக்ஸ் வேரியண்ட்டிலும் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், கூடுதல் மதிப்பு வாய்ந்த மாடலாகவும், அதிக தேர்வுகளுடன் வந்துள்ளது.

ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியின் பெட்ரோல் எஸ் வேரியண்ட் ரூ.8.15 லட்சத்திலும், டீசல் எஸ் வேரியண்ட் ரூ.9.25 லட்சத்திலும் கிடைக்கிறது. பெட்ரோல் விஎக்ஸ் வேரியண்ட் ரூ.9.25 லட்சத்திலும், டீசல் விஎக்ஸ் வேரியண்ட் ரூ.10.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். நடுத்தர விலையிலான புதிய டீசல் வி வேரியண்ட்டிற்கு ரூ.9.95 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 11, 2019, 16:21 [IST]
English summary
Honda Cars India has launched a new variant of their WR-V SUV in the Indian market. The new 'V' variant of the SUV is priced at Rs 9.95 lakh, ex-showroom (Delhi). The new Honda WR-V variant will be positioned between the 'S' and 'VX' trims in the model lineup.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+