சொகுசு கார்களை விஞ்சும் இன்டீரியருடன் வரும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா!

சொகுசு கார்களை விஞ்சும் இன்டீரியர் அம்சங்களுடன் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார் மாற்றங்கள் கண்டுள்ளது. புதிய க்ரெட்டா காரின் இன்டீரியர் ஸ்பை படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

சொகுசு கார்களை விஞ்சும் இன்டீரியருடன் வரும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா!

இந்திய எஸ்யூவி கார் சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியும் ஒன்றாக இருந்து வருகிறது. சொகுசு கார்களை பிரதிபலிக்கும் வகையிலான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின்கள், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சரியான விலையில் கிடைப்பதால், தொடர்ந்து வாடிக்கையாளர்களின் தேர்வில் முதன்மையாக இருக்கிறது.

சொகுசு கார்களை விஞ்சும் இன்டீரியருடன் வரும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா!

சந்தைப் போட்டி மிகுந்து விட்ட சூழலில், க்ரெட்டா காரின் வர்த்தகத்தை தக்க வைப்பதற்காக புத்தம் புதிய க்ரெட்டா காரை ஹூண்டாய் உருவாக்கி இருக்கிறது. அண்மையில் சீனத் தலைநகர் பீஜிங்கில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில், புதிய தலைமுறை ஹூண்டாய் ஐஎக்ஸ்-25 கார் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், இன்டீரியர் குறித்த விபரம் தெரியவில்லை.

சொகுசு கார்களை விஞ்சும் இன்டீரியருடன் வரும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா!

இந்தநிலையில், சீனாவில் ஐஎக்ஸ்25 என்ற பெயரில் வர இருக்கும் புதிய க்ரெட்டா காரின் இன்டீரியர் படங்களை ஆட்டோஹோம் என்ற தளம் வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் வருவதற்கு முன்பே, இந்த கார் ஐஎக்ஸ்-25 என்ற பெயரில் சீனாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

சொகுசு கார்களை விஞ்சும் இன்டீரியருடன் வரும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா!

சீனாவிலுள்ள ஹூண்டாய் ஆலையில் உற்பத்திப் பிரிவில் ஒருங்கிணைக்கப்படும் நிலையில், புதிய தலைமுறை ஐஎக்ஸ்25 எஸ்யூவியின் இன்டீரியர் படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த படங்களில், புதிய க்ரெட்டா காரின் இன்டீரியர் வேற லெவலுக்கு மாறி இருப்பதை காண முடிகிறது.

சொகுசு கார்களை விஞ்சும் இன்டீரியருடன் வரும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் இன்டீரியர் முழுவதுமாக கருப்பு வண்ண தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சென்ட்ரல் கன்சோல், டேஷ்போர்டு ஆகியவற்றில் சில இடங்களில் சில்வர் பீடிங் அலங்கார வேலைப்பாடுகளுடன் பிரிமீயமாக காட்சி தருகிறது. முற்றிலும் புதிய வடிவமைப்பிற்கு மாறி இருக்கிறது.

சொகுசு கார்களை விஞ்சும் இன்டீரியருடன் வரும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் உட்புறத்தில் பார்த்தவுடன் கவர்வது, இதன் செங்குத்து வாக்கிலான பிரம்மாண்ட திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்தான். மேலும், இன்ஃபோடெயின்மென்ட் திரையும், கியர் லிவர் அமைக்கப்பட்டு இருக்கும் பகுதியும் சொகுசு கார்களில் காணக் கிடைப்பது போன்று மிக அழகாக இணைக்கப்பட்டு இருக்கிறது.

சொகுசு கார்களை விஞ்சும் இன்டீரியருடன் வரும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா!

கியர் லிவர் கூட பார்ப்பதற்கு சொகுசு கார் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. கியர் லிவர் பகுதிக்கு அருகாமையிலேயே சில கட்டுப்பாட்டு சுவிட்சுகள் மற்றும் பட்டன்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அடுத்து இதன் ஸ்டீயரிங் வீல் அமைப்பும் சொகுசு கார்களை நினைவூட்டுகிறது. தட்டையான அடிப்பாகத்துடன் ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டு இருப்பதும் முக்கிய அம்சமாக கூறலாம்.

சொகுசு கார்களை விஞ்சும் இன்டீரியருடன் வரும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருப்பதும் இந்த ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வருகிறது. புஷ் பட்டன் ஸ்டார்ட், 360 டிகிரி கோணத்தில் காட்டும் கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் ஸ்டீயரிங் வீலில் இருப்பதையும் காண முடிகிறது.

சொகுசு கார்களை விஞ்சும் இன்டீரியருடன் வரும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா!

மொத்தத்தில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் இன்டீரியர் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும் என்று எதிர்பார்க்கலாம். புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் புளூலிலங்க் என்ற விசேஷ மொபைல் ஆப் இணைப்பு வசதியுடன் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளையும், கார் இயக்கத் தகவல்களையும் பெற முடியும்.

சொகுசு கார்களை விஞ்சும் இன்டீரியருடன் வரும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா!

தற்போது ஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் என மூன்று தேர்வுகளில் கிடைக்கிறது. ஆனால், புதிய தலைமுறை மாடலில் கியா செல்டோஸ் காரில் இடம்பெற்றிருக்கும் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் பயன்படுத்தப்படும். இவை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாகவும் இருக்கும்.

சொகுசு கார்களை விஞ்சும் இன்டீரியருடன் வரும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா!

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார் இந்தியாவில் பல மாதங்களாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிமீயம் அம்சங்கள் நிரம்பவே இருப்பதால், விலையும் நிச்சயம் அதிகமாகவே நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது.

Spy images source: Autohome

Article Published On: Thursday, August 29, 2019, 15:32 [IST]
English summary
Hyundai India is said to be working on bringing in a new version of their popular SUV, the Creta to the Indian market. The new Hyundai Creta SUV is expected to go on sale in India at the 2020 Auto Expo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+