புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா குறித்த முக்கிய தகவல்கள் கசிந்தன!
புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முக்கியத் தகவல்கள் கசிந்துள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் எஸ்யூவி மாடலாக ஹூண்டாய் க்ரெட்டா மிக பிரபலமான மாடலாக வலம் வருகிறது. குறிப்பாக, ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் டிசைன் எல்லோராலும் விரும்பப்படும் விஷயமாக இருக்கிறது.

இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் நடந்த சர்வதேச ஆட்டோ ஷோவில் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காட்சிக்கு கொண்டு வரப்பட்டது. அதாவது, அங்கு ஐஎக்ஸ்25 என்ற பெயரில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் 5 சீட்டர் மாடல் மட்டுமில்லாமல், 7 சீட்டர் மாடலிலும் வர இருப்பதாக வெளியானத் தகவல் ஆவலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த காரின் சில முக்கியத் தொழில்நுட்ப விஷயங்களை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டு இருக்கிறது. காரின் பரிமாணம் மற்றும் இதர முக்கிய தொழில்நுட்ப அம்சங்களை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி 4,300 மிமீ நீளமும், 1,790 மிமீ அகலமும், 1,622 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. தற்போதைய மாடலைவிட 30 மிமீ கூடுதல் நீளமும், 10 மிமீ கூடுதல் அகலமும் பெற்றிருக்கிறது. ஆனால், உயரம் 8 மிமீ குறைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வீல் பேஸ் 2,610 மிமீ ஆக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய மாடலைவிட 20 மிமீ கூடுதல் வீல் பேஸ் நீளத்தை பெற்றிருக்கிறது. எனவே, இது 7 சீட்டர் மாடலிலும் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.

கியா செல்டோஸ் காரில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் ஆப்ஷன்கள் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியிலும் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. அதன்படி, 115 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும்.

அடுத்து, 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் வர இருக்கிரது. தவிரவும், 144 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோரல் எஞ்சின் தேர்வும் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா காரில் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கியா செல்டோஸ் காரின் அதே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி, டிசிடி மற்றும் சாதாரண வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா காரிலும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. மைலேஜ் விபரங்களும் கிட்டத்தட்ட கியா செல்டோஸ் அளவுக்கே இருக்கும்.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா காரின் டாப் வேரியண்ட்டுகளில் எல்இடி ஹெட்லலைட், எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்படும். விலை குறைவான வேரியண்ட்டுகளில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் இடம்பெறும். எல்இடி டெயில் லைட்டுகளும் இடம்பெற்றிருக்கும். புதிய க்ரில் அமைப்பும் மிக பிரம்மாண்டமாக இருக்கும்.

தற்போதைய மாடலைவிட புதிய இன்டீரியர் டிசைன் மற்றும் தரமிக்க பாகங்களுடன் வசீகரமாக இருக்கும். தொழில்நுட்பம் மற்றும் வசதிகளிலும் பல படிகள் முன்னேறிய மாடலாக புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications